Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.. ஆனா சிம்ம ராசியினருக்கு? | 16 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.. ஆனா சிம்ம ராசியினருக்கு? | 16 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 04 ஆம் நாளுக்கான [16 பிப்ரவரி 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்:

காலை: 10.30 - 11.30 வரை

மாலை: இல்லை

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.. ஆனா சிம்ம ராசியினருக்கு? | 16 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சிகரமான செய்தி வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனை தீரும். புது முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். பெற்றோர்களிடம் ஆதரவு பெருகும். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதிற்கு பிடித்த காரியத்தை நாளை கழிப்பீர்கள். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: 5

அதிர்ஷ்ட எண்: வெளிர் நீலம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.. ஆனா சிம்ம ராசியினருக்கு? | 16 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

தன்னம்பிக்கையுடம் அனைத்து காரியங்களையும் செய்வீர்கள். சிறப்பான நாளாக இருக்கும். நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான பயணங்கள் அனுகூலப் பலன்களை பெற்று தரும். உங்களின் மீதே உங்களுக்கு புது நம்பிக்கை பிறக்கும். ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.. ஆனா சிம்ம ராசியினருக்கு? | 16 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தேடி தரும். சிந்தனையின் போக்கில் உங்களிடம் உறுதியும் உத்வேகமும் உண்டாகும். உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும் நாள். வியாபாரம் சார்ந்த பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். பணியிடத்தில் சகஊழியர்களின் உதவி கிடைக்கும். நிதிநிலைமை அற்புதமாக இருக்கும். துணையிடம் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். எதிரிகள் நண்பர்களாவார்கள். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.. ஆனா சிம்ம ராசியினருக்கு? | 16 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

நுட்பமான சிந்தனையின் மூலம் வியாபாரத்தில் லாபத்தை ஈட்டுவீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். இத்தனை நாட்களாக இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவது சிறந்தது. நிதிநிலைமை தாராளமாகவே உள்ளது. இதனால், சேமிப்பு உயரும். புதிய முயற்சிக்கு குடும்பத்தினரின் ஆதரவு பெருகும். துணையுடன் இருந்த கருத்துவேறுபாடு விலகி, மகிழ்ச்சி நிலவும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.. ஆனா சிம்ம ராசியினருக்கு? | 16 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

பணிச்சுமை அதிகமாக இருக்கும். இதனால் உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். புதிய பொருள் வாங்குவது சம்பந்தமான எண்ணங்களில் தடை ஏற்படும். தாய்வழி உறவினர்களால் வீண் பிரச்சனையில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு காரணமாக வாக்குவாதம் உண்டாகும். மனம் திறந்து பேசுவதன் மூலம் சுமூகமான பலனை பெறலாம். வரவு செலவு இரண்டும் இருக்கும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். சிரமம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.. ஆனா சிம்ம ராசியினருக்கு? | 16 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

பொறுமையின் சிகரமாக இருந்தால் வீண் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். வியாபாரத்தில் தள்ளிப்போன சில வாய்ப்புகள் தேடி வரும். கடன்களை திருப்பி வாங்கும் போது கனிவான பேச்சு அவசியம். துணையுடன் சேர்ந்து நீண்ட நாள் பிரச்சனைக்கு முடிவு எடுப்பீர்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனக்குறைவால் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. எச்சரிக்கையாக இருங்கள். கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். சினம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.. ஆனா சிம்ம ராசியினருக்கு? | 16 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் பங்குக்கொள்வீர்கள். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். இருப்பினும், சிலருக்கு பழைய நினைவுகளால் மனதில் கவலை குடிக்கொள்ளும். இதை தவிர்க்க ஆன்மீக வழிபாடு செய்ய முயற்சிக்கலாம். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டிய நாள். பணப்புழக்கம் சிறப்பாகவே உள்ளது. எதிர்பாலினத்தவரால் நன்மை உண்டு. ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.. ஆனா சிம்ம ராசியினருக்கு? | 16 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

எண்ணத்தில் தெளிவு வேண்டும். கண்டதையும் நினைத்து கொண்டு, முக்கியமான காரியங்களில் கோட்டைவிட்டு விட வேண்டாம். பணியிடத்தில் நற்பெயர் சம்பாதிக்க கடினமான உழைக்க வேண்டியிருக்கும். தாராளமான தனவரவின் மூலம் சேமிப்பு மேம்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழிலில் பெரியவர்களின் உதவி கிடைக்கும். வாகனப் பயணத்தின் போது எச்சரிக்கை வேண்டும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.. ஆனா சிம்ம ராசியினருக்கு? | 16 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு சிறப்பான நாள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சுபகாரியம் சம்பந்தமான முயற்சிகள் கைகூடி வரும். பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். சேமிப்பு உயரும். சில விஷயங்களில் துணையின் பேச்சை கேட்டு நடப்பது உங்களுக்கு நல்லது. பாசம்!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 8

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.. ஆனா சிம்ம ராசியினருக்கு? | 16 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

வியாபார பணிகளில் பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் செயல்படவும். சுபகாரியம் சம்பந்தமான அலைச்சல்கள் ஏற்படும். பணியிடத்தில் சகஊழியர்களிடம் கோபமாக நடந்துக்கொள்வீர்கள். கணவன்- மனைவிக்கு இடையே அனுசரித்து செல்வது உத்தமம். வர்த்தக பணிகளில் அதிகமாக முதலீடு செய்வதை குறைத்துக் கொள்ளவும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். பகை!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.. ஆனா சிம்ம ராசியினருக்கு? | 16 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

புதிய முயற்சி நல்ல பலன்களை அளிக்கும். உங்க மனதில் புது தைரியம் பிறக்கும். எந்த காரியத்தையும் துணிவுடன் செய்வீர்கள். கடின உழைப்பிற்கு தக்க பரிசு காத்திருக்கிறது. குடும்பத்தில் அன்பு, அரவணைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் தேடி வரும். கால்நடை சம்பந்தமான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். பணபுழக்கம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை செய்வீர்கள். உங்களையே அரியாமல் பிறருக்கு உதவி செய்வீர்கள். உதவி!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.. ஆனா சிம்ம ராசியினருக்கு? | 16 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

பிள்ளைகளால் பாராட்டு உண்டு. உறவினர்களின் வழியில் அனுகூலமான செய்திகள் தேடி வரும். பணியிடத்தில் சிலருக்கு பதவி உயர்வுக்கான சூழல் ஏற்படும். மற்றவரை விமர்சிப்பதால் தேவையற்ற இன்னல்களை சந்திக்க நேரிடலாம். நீண்ட நாட்கள் கட்ட முடியாமல் தவிர்த்த கடனை அடைக்க முயற்சி செய்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். காதலர்களுக்கு அற்புதமான நாள். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: வெண் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்