Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த ராசியினர் முன்கோபத்தால் விரயங்களை தேடிக்கொள்வீர்கள்.. | 22 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இந்த ராசியினர் முன்கோபத்தால் விரயங்களை தேடிக்கொள்வீர்கள்.. | 22 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 10 ஆம் நாளுக்கான [22 பிப்ரவரி 2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்:

காலை: 09.30 - 10.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

இந்த ராசியினர் முன்கோபத்தால் விரயங்களை தேடிக்கொள்வீர்கள்.. | 22 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

வியாபாரத்திற்காக எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். சுபகாரியங்களில் அனுசரித்து நடந்துக் கொள்ளவும். மாணவர்கள் படிப்பில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டிய நாள். எதிர்கால சிந்தனைகளின் மூலம் மனதில் ஒருவித குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பணியிடத்தில் உடனிருப்பவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். நண்பர்களால் இன்பம் தரும் செய்தி வந்தடையும். நெருக்கமானவர்களின் மூலம் செலவு அதிகரிக்கும். பேராசை!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த ராசியினர் முன்கோபத்தால் விரயங்களை தேடிக்கொள்வீர்கள்.. | 22 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

முயற்சிக்கு ஏற்ப பலன் உண்டு. தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நடந்து முடியும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் புதிய பொறுப்புகளால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வியாபாரம் நன்றாக இருக்கும். பணியிடத்தில் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். இருந்தாலும், துணையுடன் விளையாட்டான பேச்சை தவிர்ப்பது உத்தமம். வாகனப் பயணத்தின்போது நிதானம் அவசியம். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இந்த ராசியினர் முன்கோபத்தால் விரயங்களை தேடிக்கொள்வீர்கள்.. | 22 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். ஆசைப்பட்ட விஷயம் நிறைவேறுவதில் தடை ஏற்படும். எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உதவிகள் கிடைக்காமல் ஏமாற்றம் அளிக்கும். பணிபுரியும் இடத்தில் வீண்பேச்சை தவிர்க்கவும். மனை சார்ந்த பணிகளில் தடை, தாமதம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய பிரச்சனை தலை தூக்கும். நீர்நிலை சார்ந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். தோல்வி!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசியினர் முன்கோபத்தால் விரயங்களை தேடிக்கொள்வீர்கள்.. | 22 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். பணவரவு அமோகமாக இருக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். புதிய முடிவுகளில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீக பணிகளின் ஆர்வம் அதிகரிக்கும். தாய்வழி பந்தங்களால ஆதாயம் பிறக்கும். சகஊழியர்களிடம் இருந்துவந்த மனக்கசப்பு விலகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இந்த ராசியினர் முன்கோபத்தால் விரயங்களை தேடிக்கொள்வீர்கள்.. | 22 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

நெருக்கமானவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துக் கொள்ளவும். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். புதிய நபர்களிடம் குடும்ப விவகாரங்கள் பகிர்வதை தவிர்க்கவும். வியாபாரம் சார்ந்த திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். நண்பர்களுடன் வெளியில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். எண்ணிய பணிகள் நல்ல நிறைவேறும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த ராசியினர் முன்கோபத்தால் விரயங்களை தேடிக்கொள்வீர்கள்.. | 22 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தடைப்பட்டு நின்ற சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வாழ்க்கை துணையின் வழியில் ஆதரவு ஆதாயமும் கிடைக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு உண்டு. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தெம்பு பிறக்கும். சகோதரர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

இந்த ராசியினர் முன்கோபத்தால் விரயங்களை தேடிக்கொள்வீர்கள்.. | 22 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

அரசு பணியில் இருந்த இழுபறிகள் நீங்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வர கொஞ்சம் சிக்கல். பணிபுரியும் இடத்தில் உங்க கருத்துக்கு மதிப்பு குறையும். கோபத்தை குறைத்துக்கொள்வது சிறந்தது. திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உறவினர்கள் வழியில் புதிய பிரச்சனை தலை தூக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆன்மீக வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை தரும். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசியினர் முன்கோபத்தால் விரயங்களை தேடிக்கொள்வீர்கள்.. | 22 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். பணியிடத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். குடும்ப பெரியோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. எதிர்பாராத விருந்தினர் வருகையால் குடும்பத்தில் ஒற்றுமை சூழல் நிலவும். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். நினைத்தது நடக்கும். தேர்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசியினர் முன்கோபத்தால் விரயங்களை தேடிக்கொள்வீர்கள்.. | 22 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

மனதில் நினைத்த பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். குழந்தைகளால் அலைச்சல் உண்டாகும். தாய்மாமன் வழியில் கருத்துமோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரத்தில் நெருக்கடியான சூழல் ஏற்படும். பெரிய அளவிலான முதலீடுகளை தவிர்க்கவும். பணியிடத்தில் சகஊழியர்களிடம் மேலிடம் குறித்த பேச்சை தவிர்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் ஒருவருக்கு மருத்துவ செலவு ஏற்படும். இக்கட்டான சூழ்நிலையை ஈடுசெய்ய கடன் வாங்குவீர்கள். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இந்த ராசியினர் முன்கோபத்தால் விரயங்களை தேடிக்கொள்வீர்கள்.. | 22 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் ஆனந்தம் பொங்கும். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகள் சாதகமான பலனை கொடுக்கும். பொருளாதாரம் அமோகமாக இருக்கும். நண்பர்களிடம் இருந்து ஒரு இன்பச் செய்தி காத்திருக்கிறது. எதிர்பாலினத்தவரால் அனுகூலம் கிட்டும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு அற்புதமான நாள். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இந்த ராசியினர் முன்கோபத்தால் விரயங்களை தேடிக்கொள்வீர்கள்.. | 22 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

குடும்ப உறுப்பினர்களால் சிறு சிறு கருத்து மோதல் தோன்றி மறையும். புதிய நபரால் கணவன் - மனைவி இடையே தேவையில்லாத பிரச்சனை வரும். முக்கியமான பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். வழக்கு சார்ந்த விஷயத்தில் அவரசம் வேண்டாம். முன்கோபத்தால் சில விரயங்கள் நேரிடும். பூர்விக சொத்து விவகாரத்தில் சிக்கல் ஏற்படும். முதலீடு சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பணியிடத்தில் ஊழியர்களை அனுசரித்து நடந்துக்கொள்ளவும். அவதி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த ராசியினர் முன்கோபத்தால் விரயங்களை தேடிக்கொள்வீர்கள்.. | 22 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

புதிய நபர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். போட்டி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை தீர ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ளவும். நீண்ட நாள் கழித்து நெருக்கமானவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகள் ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். கண்சார்ந்த பிரச்சனைகள் நீங்கும். தூரத்து சொந்தங்களால் மகிழ்ச்சிகரமான செய்து வந்து சேரும். நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்