Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நினைத்தது நிறைவேறும் நாள்.. தொழிலும் சூப்பர்.. | 25 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
நினைத்தது நிறைவேறும் நாள்.. தொழிலும் சூப்பர்.. | 25 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 13 ஆம் நாளுக்கான [25 பிப்ரவரி 2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்:

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

நினைத்தது நிறைவேறும் நாள்.. தொழிலும் சூப்பர்.. | 25 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

நெருங்கிய நண்பர்களின் உதவியுடன், தொழிலில் லாபம் ஈட்டுவீர்கள். நிறைவேறாத ஆசைகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற தொடங்கும். திருமண முயற்சிகளில் ஈடுபட அனுகூலமான நாள். ஒருசிலருக்கு வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். எந்த காரியத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பூர்வீக சொத்து வகையில் பணவரவு காணப்படும். சிலருக்கு குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

நினைத்தது நிறைவேறும் நாள்.. தொழிலும் சூப்பர்.. | 25 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு தாராளமாக கிடைக்கும். பணியிடத்தில் கொடுத்த வேலைகளை கனகச்சிதமாக முடிப்பீர்கள். நீங்க சாதாரணமாக பேசும் வார்த்தைக்கூட மற்றவரை காயப்படுத்தலாம். வார்த்தையில் கவனம். விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் திருமண வாழ்க்கை என்பதை உணரும் நாள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அதே வேளையில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொலைதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

நினைத்தது நிறைவேறும் நாள்.. தொழிலும் சூப்பர்.. | 25 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

பணியிடத்தில் பனிச்சுமை காரணமாக தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும். மேலதிகாரிகளுடன் சின்ன சலசலப்பு ஏற்படும். புதிய முயற்சிகளில் அனுபவமிகுந்தவர்களிடம் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. சுபகாரியம் சம்பந்தமான விஷயங்களில் தடை ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்குவதில் சிக்கல் ஏற்படும். குடும்பத்தில் கருத்துவேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமை முக்கியம். குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

நினைத்தது நிறைவேறும் நாள்.. தொழிலும் சூப்பர்.. | 25 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

சந்தோஷத்திற்கு பஞ்சம் இருக்காது. தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். புதிய பெண்களிடம்  பேசும் போது மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் பேசவும். பணியிடத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களுடன் இருந்து வந்த பிரச்சனை ஒரு முடிவு வரும்.  பூர்வீக சொத்து விவகாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அதேபோல், வாகன பயணத்தின்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

நினைத்தது நிறைவேறும் நாள்.. தொழிலும் சூப்பர்.. | 25 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் முன்னாடி ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. அதிக பணிச்சுமை காரணமாக சோர்வாக உணர்வீர்கள். வியாபாரம் சுமாராக தான் இருக்கும். மாணவர்களுக்கு சிறப்பான நாள் அல்ல. நினைத்த காரியம் நிறைவேற தடை உண்டாகும். சில இடங்களில் சாமர்த்தியமான பேச்சு கைக்கொடுக்கும். நண்பர்களிடம் பேசும்போது அகந்தை பேச்சை தவிர்க்கவும். கண் சார்ந்த பிரச்சனை வரலாம். அசதி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

நினைத்தது நிறைவேறும் நாள்.. தொழிலும் சூப்பர்.. | 25 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணியிடத்தில் கொடுத்த பணியை சரியான நேரத்தில் முடித்துக்கொடுத்து மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சிலருக்கு அரசியல் சார்ந்த நபர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். துணையுடன் வெளியில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

நினைத்தது நிறைவேறும் நாள்.. தொழிலும் சூப்பர்.. | 25 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

சவால்கள் நிறைந்த நாள். பணியிடத்தில் சகஊழியர்களிடையே திறமையை நிரூபிக்க போட்டி போட்டு வேலை செய்வீர்கள். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்துக்கொள்வது சிறந்தது. சிலருக்கு எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறைந்து மனதில் நிம்மதி குடிக்கொள்ளும். குடும்பத்தில் பேச்சினால் பிரச்சனை வரும், முடிந்தவரை விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சாந்தம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

நினைத்தது நிறைவேறும் நாள்.. தொழிலும் சூப்பர்.. | 25 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

நீண்ட நாட்களாக இழுபறியான சில முக்கிய பணிகளை செய்து முடிப்பீர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். சிலருக்கு உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மற்றவர்களிடம் உங்க குடும்ப விஷயத்தை பகிர்ந்துக் கொள்ளாமல் இருப்பது உத்தமம். விருப்பங்கள் நிறைவேறும் நாள். மனதில் தன்பிக்கை அதிகரிக்கும். பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். அனைவரிடமும் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்து வைப்பீர்கள். ஜெயம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

நினைத்தது நிறைவேறும் நாள்.. தொழிலும் சூப்பர்.. | 25 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

தொழிலதிபர்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மனதிற்கு பிடித்தவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். இருப்பினும், பெரிய அளவிலான பண முதலீட்டை தவிர்ப்பது நல்லது. வீண்செலவுகளை தவிர்க்கவும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

நினைத்தது நிறைவேறும் நாள்.. தொழிலும் சூப்பர்.. | 25 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். பணியிடச்சூழல் சுமூகமாக இருக்கும். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காதலர்களுக்குள் இருந்த கருத்துவேறுபாடு நீங்கி, மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். செய்த தவறை உணரும் நாள். நிதி நிலை நன்றாக இருக்கும். குடும்பச் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் அற்புதமாக இருக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

நினைத்தது நிறைவேறும் நாள்.. தொழிலும் சூப்பர்.. | 25 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். கணவன்-மனைவி இடையே பாசம், அன்பு, அக்கறை அதிகரிக்கும். சிலருக்கு நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். சிலருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இதனால், வாழ்க்கையில் முன்னேறுவதற்காக புதிய வழிகளை தேடுவீர்கள். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

நினைத்தது நிறைவேறும் நாள்.. தொழிலும் சூப்பர்.. | 25 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

பொருளாதாரத்தை பொறுத்த வரை அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படலாம். அனைவரிடமும் அன்பாகவும் பணிவாகவும் நடந்துக் கொள்வீர்கள். துணையின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். இரும்பு சார்ந்த தொழில் செய்வோருக்கு அதிர்ஷ்டகரமான நாள். கடன் பிரச்சனை குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மன நிம்மதி அடைவார்கள். இருப்பினும், எதிர்பாலினத்தவரிடம் பேசும் போது கவனம் தேவை. புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 6


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்