Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,953.43
464.44sensex(0.64%)
நிஃப்டி22,132.90
137.05sensex(0.62%)
USD
81.57
Exclusive

இந்த மகா சிவராத்திரி உங்களுக்கு எப்படி இருக்கும்? | 18பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இந்த மகா சிவராத்திரி உங்களுக்கு எப்படி இருக்கும்? | 18பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 06 ஆம் நாளுக்கான [18 பிப்ரவரி 2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்:

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

இந்த மகா சிவராத்திரி உங்களுக்கு எப்படி இருக்கும்? | 18பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

பழைய நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை கொடுக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் அனுகூலம் உண்டாகும். குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பணியிடச்சூழல் சாதகமாக இருக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். நம்பிக்கை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த மகா சிவராத்திரி உங்களுக்கு எப்படி இருக்கும்? | 18பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

தேவைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். எதிர்பாராமல் செய்த உதவியால் பாராட்டு கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். சமூக பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். குடும்பத்துடன் ஆன்மீக வழிபாடு மேற்கொள்வீர்கள். வியாபார ஒப்பந்தங்களில் கூட்டாளிகளிடம் ஆலோசித்து முடிவு எடுக்கவும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இந்த மகா சிவராத்திரி உங்களுக்கு எப்படி இருக்கும்? | 18பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

புதிய முயற்சிகளில் நிதானத்துடன் செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் அலைச்சல்களுக்கு பின்பு கிடைக்கும். நபர்களின் தன்மையை அறிந்து நட்பு கொள்வது நல்லது. கடன் பிரச்சனையால் கணவன் - மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்படும். விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத செலவுகள் கவலையை ஏற்படுத்தும். வாகனத்தில் செல்லும்போது கவனம். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இந்த மகா சிவராத்திரி உங்களுக்கு எப்படி இருக்கும்? | 18பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

விலையுயர்ந்த பொருட்களில் ஆர்வம் அதிகரிக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். சிலருக்கு வியாபாரம் சார்ந்த வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். தள்ளிப்போன சில காரியங்கள் மீண்டும் நடைபெறும். சுபக்காரியங்களில் கலந்துக்கொள்வீர்கள். வீடு, வாகனம் சீர் செய்வது தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். பணியிடத்தில் சூழ்நிலைகளை அறிந்து முடிவு எடுக்கவும். சகஊழியர்களின் ஆதரவு மேம்படும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 1

இந்த மகா சிவராத்திரி உங்களுக்கு எப்படி இருக்கும்? | 18பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோக பணிகளில் மேன்மை ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. சிலருக்கு மனதிற்கு பிடித்த இடங்களுக்கு சென்றுவர வாய்ப்பு கிடைக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். நெருக்கமானவர்களின் விருப்பதை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். தெளிவு!

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

இந்த மகா சிவராத்திரி உங்களுக்கு எப்படி இருக்கும்? | 18பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பயணங்களின் போது விலையுயர்ந்த பொருட்களின் மீது கவனம் வேண்டும். புதிய நபர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபாரம் சார்ந்த விஷயங்களில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்வது சிறந்தது. காதல்களுக்கு அற்புதமான நாள். சுபம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த மகா சிவராத்திரி உங்களுக்கு எப்படி இருக்கும்? | 18பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். மலைசார்ந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். பணியிடத்தில் சகஊழியர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்க்கவும். மனைவியுடன் கடன்சார்ந்த பிரச்சனைகளை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். மனதில் இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிக்கு குடும்பத்தின் ஆதரவு பெருகும். சிலருக்கு கடனாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். இரக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இந்த மகா சிவராத்திரி உங்களுக்கு எப்படி இருக்கும்? | 18பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். தனவரவு சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேற காலதாமதம் ஏற்படும். பணியிடத்தில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டியிருக்கும். வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். நீண்ட நாள் எதிர்பார்த்த ஒரு விஷயம் கிடைக்கும். நண்பர்களில் வழியில் நல்ல செய்தி வரும். அவதி!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

இந்த மகா சிவராத்திரி உங்களுக்கு எப்படி இருக்கும்? | 18பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

தேவையில்லாத சிந்தனைகளால் மனதில் குழப்பம் தோன்றி மறையும். திட்டமிட்ட பணிகள் அலைச்சல்களுக்கு பின்பே ஈடேறும். தந்தையிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளியில் உணவு உண்பதை தவிர்க்கவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்துக் கொள்ளவும். வியாபாரம் சுமாராகவே இருக்கும். எதிர்களால் சில இன்னல்கள் ஏற்படும். கூர்மையான ஆயுதங்களை கையாளும்போது கவனம். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

இந்த மகா சிவராத்திரி உங்களுக்கு எப்படி இருக்கும்? | 18பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

அமைதியின் சிகரமாக இருக்க வேண்டிய நாள். எந்த செயலிலும் நிதானத்துடன் இருக்கவும். பழைய சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும். குடும்பத்தினரால் மனக்கவலை அதிகரிக்கும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். உங்கள் மீது அவ்வப்போது வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். சுபக்காரியங்கள் சார்ந்த விஷயங்களில் தடை ஏற்படும். வியாபாரத்தில் வசூழ் கைக்கு வர இழுத்தடிக்கும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 4

இந்த மகா சிவராத்திரி உங்களுக்கு எப்படி இருக்கும்? | 18பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

உறவினர்களின் சந்திப்பால் ஒருவிதமான கவலை குடிக்கொள்ளும். ஆடம்பர செலவுகளில் நெருக்கடிகள் உண்டாகும். சிலருக்கு நண்பர்களால் வீண் பிரச்சனையும், அலைச்சலும் ஏற்படும். முக்கியமான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். துணையிடம் அவசரப்பட்டு வார்த்தையை விட்டுவிட வேண்டும். தாய்வழி பந்தங்களால் ஆதாயம் உண்டு. வாகனத்தில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கை வேண்டும். பெயர் தெரியாவதர்களிடம் ஒதுங்கி இருப்பது நல்லது. குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இந்த மகா சிவராத்திரி உங்களுக்கு எப்படி இருக்கும்? | 18பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

எதிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். நெருக்கமானவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளால் பாராட்டு உண்டு. சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. எதிர்பாரா விருந்தினர் வருகையால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். உத்தியோக பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் அமையும். எதையும் சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் ஏற்படும். தொழில் சார்ந்த உதவிகல் கிடைக்கும். சாந்தம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 6


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்