Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கடன் பிரச்சனைகள் குறைந்து மனதில் நிம்மதி குடிக்கொள்ளும்.. | 19 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
கடன் பிரச்சனைகள் குறைந்து மனதில் நிம்மதி குடிக்கொள்ளும்.. | 19 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 07 ஆம் நாளுக்கான [19 பிப்ரவரி 2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்:

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 03.30 - 04.30 வரை

கடன் பிரச்சனைகள் குறைந்து மனதில் நிம்மதி குடிக்கொள்ளும்.. | 19 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழிலில் பெரியவர்களின் உதவி கிடைக்கும். பணியிடத்தில் கடினமான வேளைகளையும் ஈஸியாக செய்து முடிப்பீர்கள். தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவது நல்லது. தாய்வழி பந்தங்களால் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

கடன் பிரச்சனைகள் குறைந்து மனதில் நிம்மதி குடிக்கொள்ளும்.. | 19 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

வியாபாரத்தில் எதிர்பார்த்தைவிட அதிகமாகவே லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திக்கொண்டிருந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். புதிய முயற்சியில் ஈடுபவர்களுக்கு வெற்றி நிச்சயம். வம்புக்கு வருபவரிடம் விட்டுக்கொடுத்து போவது சிறந்தது. பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சகபணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். கல்வி சர்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றம் உண்டாகும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

கடன் பிரச்சனைகள் குறைந்து மனதில் நிம்மதி குடிக்கொள்ளும்.. | 19 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

கடன் பிரச்சனைகள் குறைந்து மனதில் நிம்மதி குடிக்கொள்ளும். குடும்பத்தில் பேச்சினால் பிரச்சனை வரும், முடிந்தவரை விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. எந்த காரியத்திலும் பக்குவமாகவும் புத்திசாலித்தனத்துடனும் சூழ்நிலைகளை கையாள வேண்டும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். வரவோடு செலவும் காணப்படும். தொழில் சற்று மந்தமாக காணப்படும். பூர்விக சொத்து விவகாரம் பற்றிய பேச்சு அடிபடும். அசதி!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

கடன் பிரச்சனைகள் குறைந்து மனதில் நிம்மதி குடிக்கொள்ளும்.. | 19 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

தந்தை வழி உறவுகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளுடன் வீண் விவாதங்களை தவிர்த்துக் கொள்ளவும். சிலர் வீண் வார்த்தைகள் பேசுவதன் மூலமாக வேண்டாத பகையை தேடிக் கொள்வார். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. நினைத்த காரியம் நிறைவேற தடங்கல் ஏற்படும். கூட்டு தொழில் செய்வோர் பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வாக்குறிதிகளை கொடுக்கப்பதை தவிர்க்கவும். அவதி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

கடன் பிரச்சனைகள் குறைந்து மனதில் நிம்மதி குடிக்கொள்ளும்.. | 19 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

எந்த செயலையும் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் செய்வீர்கள். பெரியவர்கள் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். துணையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடு விலகும். தனவரவு தாராளமாக இருக்கும். நண்பர்களுடன் வெளியில் செல்ல வாய்ப்புள்ளது. விருந்தினர் வருகையால், குடும்பத்தில் சந்தோசம் பெருகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வண்டியில் செல்லும்போது கவனம் தேவை. துணிவு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

கடன் பிரச்சனைகள் குறைந்து மனதில் நிம்மதி குடிக்கொள்ளும்.. | 19 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

பிரியமானவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. வார்த்தையில் கவனம் வேண்டும். உயர் பதவியில் இருப்பவர்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் பொறுமையாக நடந்துக் கொள்ளுங்கள். தனவரவு திருப்திகரமாக இருக்காது. அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். இருப்பினும், ஒரு இனிமையான செய்தி காத்திருக்கிறது. வழக்கு சார்ந்த விஷயங்களில் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசித்து செயல்படவேண்டும். சினம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

கடன் பிரச்சனைகள் குறைந்து மனதில் நிம்மதி குடிக்கொள்ளும்.. | 19 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

புதிய வாடிக்கையாளர்கள் வருகையால் வியாபாரிகத்தில் லாபம் இரட்டிப்பாகும். சுபச் செய்திகள் மனமகிழ்ச்சியை கொடுக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மன அமைதி பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உயர் அதிகாரிகளின் உதவி மற்றும் ஒத்துழைப்புக்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பெண்கள் மனதிற்கு பிடித்த பொருளை வாங்குவீர்கள். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

கடன் பிரச்சனைகள் குறைந்து மனதில் நிம்மதி குடிக்கொள்ளும்.. | 19 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

உங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை பற்றி புரிந்து கொள்வீர்கள். மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். உறவினர்களிடம் கோபத்தை குறைத்துக்கொண்டு விட்டுக்கொடுத்து செல்லவும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வித்தியாசமான அணுகுமுறையை பயன்படுத்தி வெற்றி காண்பீர்கள். திருமண வாழ்க்கையில் அழகான தருணங்கள் உருவாகும். நல்ல விஷயங்களுக்காக பணம் செலவு செய்வீர்கள். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

கடன் பிரச்சனைகள் குறைந்து மனதில் நிம்மதி குடிக்கொள்ளும்.. | 19 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

தொழிலை விரிவுபடுத்த புதிய யுக்திகளை கையாளுவீர்கள். எதிர்காலம் தொடர்பான புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். சிலருக்கு நண்பர்கள் வழியில் நல்லது நடக்கும். மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும் நாள். மாணவர்களுக்கு உயர்கல்வி சம்பந்தமான விஷயங்களில் பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.  பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். மனதில் புதுவிதமான தெம்பும், தைரியமும் பிறக்கும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

கடன் பிரச்சனைகள் குறைந்து மனதில் நிம்மதி குடிக்கொள்ளும்.. | 19 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

அரசுப் பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து, அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். இழுபறியாக இருந்து வந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மந்தமாக இருந்த வியாபாரம் சூடுபிடிக்கும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். நண்பர்களுடன் வெளியில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். தந்தைவழி உறவினர்களிடம் பணவிஷயத்தால் சின்ன தகராறு எழ வாய்ப்புள்ளது. நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும். உதவி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

கடன் பிரச்சனைகள் குறைந்து மனதில் நிம்மதி குடிக்கொள்ளும்.. | 19 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பணப் பற்றாக்குறை இருந்தாலும் சமாளித்துவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும் நாள். சிலர் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணியிடத்தில் சுறுசுறுப்பாகவும் உத்வேகத்துடனும் செயல்படுவீர்கள். சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான சிந்தனை மேம்படும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். குடும்பத்தில் ஒருவருக்கு மருத்துவ செலவு ஏற்படும். ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

கடன் பிரச்சனைகள் குறைந்து மனதில் நிம்மதி குடிக்கொள்ளும்.. | 19 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

உத்தியோகத்தில் உங்க திறமைக்கேற்ற பரிசும் பாராட்டும் கிடைக்கும். உங்களுக்கு புது நம்பிக்கையும், தைரியமும் ஏற்படுத்தும் நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். வரவும் செலவும் சமமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக நீண்ட நாள் எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த வங்கி கடன் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்