Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த மூன்று விஷயம் இந்த ராசிக்காரருக்குப் பிரச்சனைய தான் ஏற்படுத்தும்..! | 26 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Gowthami Subramani Updated:
இந்த மூன்று விஷயம் இந்த ராசிக்காரருக்குப் பிரச்சனைய தான் ஏற்படுத்தும்..! | 26 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 14 ஆம் நாளுக்கான [26 பிப்ரவரி 2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்

காலை: 07.30 - 8.30 மணி வரை

மாலை: 03.30 - 4.30 மணி வரை

இந்த மூன்று விஷயம் இந்த ராசிக்காரருக்குப் பிரச்சனைய தான் ஏற்படுத்தும்..! | 26 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள். அதிக வருமானம் ஈட்டுவீர்கள். இருப்பினும், சிக்கனமாகச் செலவு செய்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். புதிய நண்பர்களால் ஆதரவு பெருகும். பணியிடத்தில் போட்டி உண்டாகலாம். எதையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். போட்டி போட்டு செயல்பட்டு காரியத்தில் சாதிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவீர். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

இந்த மூன்று விஷயம் இந்த ராசிக்காரருக்குப் பிரச்சனைய தான் ஏற்படுத்தும்..! | 26 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

மன தைரியத்துடன் போராடி உயரிய சிந்தனை கொண்டவராகத் திகழ்வீர்கள். உங்களது சிந்தனைக்கேற்ற பலன் கிடைக்கும். நம்பிக்கை மேலோங்கி எல்லா விஷயத்திலும் முயன்று செயல்படுவீர்கள். முயற்சி செய்து செய்யும் செயலில் வெற்றி காணும் நாள் இந்நாள். அதிக வருமானம் ஈட்டும் தினமாக அமையும். முதலீடு செய்து அதில் லாபத்தை ஈட்டும் தினம். தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 5

இந்த மூன்று விஷயம் இந்த ராசிக்காரருக்குப் பிரச்சனைய தான் ஏற்படுத்தும்..! | 26 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

மிதுன ராசிக்காரர்களுக்கு, இன்று சிறப்பான நாள். புதிய நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்கள் மூலம் அனுகூலமான பயன்களைப் பெறுவீர்கள். நண்பர்களின் உதவி அனுகூலமான பலன்களைத் தரும். உடன் பிறந்த சகோதரர்களிடம் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். அதிக வருமானம் கிடைக்கும். உடல் நலத்தில் ஆரோக்கியம் தேவை. உதவி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

இந்த மூன்று விஷயம் இந்த ராசிக்காரருக்குப் பிரச்சனைய தான் ஏற்படுத்தும்..! | 26 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

இன்று சிறப்பான நாள். எல்லா வகையிலும் நன்மை உண்டான நாள். பொறுமையாகவும், நிதானமாகவும் இருப்பது அவசியம். முன்னரே செய்த உதவி, உங்களுக்கு நன்மையைத் தரும் தினம். உங்களின் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். பணியிடத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, கவனமாக பணியாற்ற வேண்டும். ஆரோக்கியத்தில் எந்த வித பாதிப்பும் இல்லை. நலம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 7
 

இந்த மூன்று விஷயம் இந்த ராசிக்காரருக்குப் பிரச்சனைய தான் ஏற்படுத்தும்..! | 26 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

உறுதியான முயற்சியுடன், கஷ்டமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். இன்று சாதகமான நாளாக அமையும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். பணத்தைச் சேமிக்கும் சூழல் ஏற்படும். உடல்நலத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்  

அதிர்ஷ்ட எண்: 3

இந்த மூன்று விஷயம் இந்த ராசிக்காரருக்குப் பிரச்சனைய தான் ஏற்படுத்தும்..! | 26 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

பணியில் கவனம் தேவை. உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும். பணியிடம் உங்களுக்குச் சாதகமாக இருக்காது. நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். மனக்குழப்பம் நீங்க, பக்தி அதிகரிக்கும். பணிகளைத் திட்டமிட்டு, பணியாற்ற வேண்டும். குடும்பத்தாரிடம் வெளிப்படையாகப் பேச வேண்டும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

இந்த மூன்று விஷயம் இந்த ராசிக்காரருக்குப் பிரச்சனைய தான் ஏற்படுத்தும்..! | 26 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

பணியில் பொறுப்புகள் அதிகம் இருக்கும். உங்களின் திறமையை கண்டு உயரதிகாரிகளிடமிருந்து பாராட்டு கிடைக்கும். உறவினர்களின் நல்லுறவை பேணிக் காப்பது. பண வரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திறமைக்கேற்ற பலன்களை பெறுவீர்கள். தீவிர முயற்சியுடன் செயல்படுவது நல்லது. முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை நிறம் 

அதிர்ஷ்ட எண்: 9

இந்த மூன்று விஷயம் இந்த ராசிக்காரருக்குப் பிரச்சனைய தான் ஏற்படுத்தும்..! | 26 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

பணிச்சுமை அதிகமாக இருக்கும். உயரதிகாரிடமிருந்து பிரச்சனை ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. திடீர் வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். உடல் அசதி ஏற்படும். அதிக அளவிலான ஓய்வு தேவைப்படும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இந்த மூன்று விஷயம் இந்த ராசிக்காரருக்குப் பிரச்சனைய தான் ஏற்படுத்தும்..! | 26 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

பணியில் சக பணியாளர்களால் பிரச்சனை ஏற்படும். துணையுடன் நட்பாக நடந்து கொள்வது அவசியம். பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பது இயலாததாகும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது கவனமாக பேச வேண்டும். வேலையிடத்தில் அதிக பளு உண்டு. குறித்த நேரத்தில் முடிக்க இயலாததால், உயர் அதிகாரிகளிடம் பிரச்சனை ஏற்படலாம். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இந்த மூன்று விஷயம் இந்த ராசிக்காரருக்குப் பிரச்சனைய தான் ஏற்படுத்தும்..! | 26 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

இன்று உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் அல்லது சுப நிகழ்ச்சிகள் குறித்த செய்திகள் தேடி வரும். உடனிருப்பவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். அதிக வருமானம் ஈட்டுவீர்கள். முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 4

இந்த மூன்று விஷயம் இந்த ராசிக்காரருக்குப் பிரச்சனைய தான் ஏற்படுத்தும்..! | 26 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். வீண் செலவு வரும். உடல்நலத்தில் அதிக அக்கறை தேவை. நிதிநிலைமை சற்று கடினமாக உள்ளது. கடன் வாங்குவது, கொடுப்பதிலிருந்து தவிர்த்து இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பண விஷயத்தில் அதிக கவனத்துடன் இருப்பது நல்லது. அவதி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9
 

இந்த மூன்று விஷயம் இந்த ராசிக்காரருக்குப் பிரச்சனைய தான் ஏற்படுத்தும்..! | 26 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்களின் உதவியால், இதுவரை இருந்த பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வேலையிடத்தில் பணிச்சுமை குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். சிக்கனத்துடன் செயல்படுவீர்கள். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 1


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்