Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த ராசியினர் வீண் வார்த்தைகளால் விரோதங்களை தேடிக்கொள்வார்கள்.. | 23 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இந்த ராசியினர் வீண் வார்த்தைகளால் விரோதங்களை தேடிக்கொள்வார்கள்.. | 23 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 11 ஆம் நாளுக்கான [23 பிப்ரவரி 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்:

காலை: 10.30 - 11.30 வரை

மாலை: இல்லை

இந்த ராசியினர் வீண் வார்த்தைகளால் விரோதங்களை தேடிக்கொள்வார்கள்.. | 23 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

புதிய முயற்சிகளுக்கு பலன் உண்டு. சிந்தனையின் போக்கில் உங்களிடம் உறுதியும் உத்வேகமும் உண்டாகும். உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும் நாள். வியாபாரம் சார்ந்த பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். பணியிடத்தில் சகஊழியர்களின் உதவி கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். நிதிநிலைமை அமோகமாக இருக்கும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. நண்பர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசியினர் வீண் வார்த்தைகளால் விரோதங்களை தேடிக்கொள்வார்கள்.. | 23 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

வேலை செய்யும் இடத்தில் வேலைகள் அடுக்கிக் கொண்டே போகும், அதனால் முக்கிய பணிகள் தள்ளிப் போகும். உங்களை சந்தோசமாக வைத்துக் கொள்ள குடும்பத்தினர் போராடுவார்கள். பொது இடத்தில் எதை பேசும்போதும் கவனமாக பேச வேண்டும். நண்பர்களுடனான சந்திப்பை தவிர்ப்பது நல்லது. பயணத்தின் போது பணத்தை தொலைக்க வாய்ப்புள்ளது பார்த்து ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். நீரால் ஆபத்து உண்டு. எனவே, நீர்நிலைகளுக்கு செல்லாமல் இருப்பது உத்தமம். இன்சொல்!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசியினர் வீண் வார்த்தைகளால் விரோதங்களை தேடிக்கொள்வார்கள்.. | 23 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

சகஊழியர்களிடத்தில் இருந்துவந்த மனகசப்பு நீங்கும். பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை காணப்படும். உங்களின் நேர்மை குணம் பாராட்டப்படும் விதமாக ஒரு சம்பவம் நிகழும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கணவன்-மனைவி இடையே பாசம், நெருக்கம் அதிகரிக்கும். பணவரத்து சிறப்பாகவே இருக்கும். பிள்ளைகளின் ஆசைகளுக்கு மதிப்பளியுங்கள். பூர்வீக சொத்து விவகாரம் நல்ல பலனை கொடுக்கும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இந்த ராசியினர் வீண் வார்த்தைகளால் விரோதங்களை தேடிக்கொள்வார்கள்.. | 23 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

கடினமான பணிகளைக்கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். எல்லா செயலும் சுறுசுறுப்புடனும், தைரியத்துடனும் ஈடுபடுவீர்கள். பணியிடத்தில் புதிய யுக்தியை கையாண்டு உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். சிலருக்கு பரிசுக்கூட கிடைக்க வாய்ப்புள்ளது. பல நாட்களாக இழுத்தடித்த சுபகாரியம் நல்ல முறையில் நடைபெறும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் வருகை தருவார்கள். சாதகமான நாள். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இந்த ராசியினர் வீண் வார்த்தைகளால் விரோதங்களை தேடிக்கொள்வார்கள்.. | 23 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

நண்பர்களுடன் நேரம் செலவிடுவீர்கள். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளுடன் வீண் விவாதங்களை தவிர்த்துக் கொள்ளவும். தந்தை வழி உறவுகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தோடு இருப்பது நல்லது. பெண்கள் மனதிற்கு பிடித்த பொருளை வாங்குவீர்கள். சிலர் வீண் வார்த்தைகள் பேசுவதன் மூலமாக வேண்டாத பகையை தேடிக் கொள்வார்கள். வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். எதிர்பாலினத்தவரால் சிக்கல் உண்டு. வாகனத்தில் செல்லும்போது கவனம். சலனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

இந்த ராசியினர் வீண் வார்த்தைகளால் விரோதங்களை தேடிக்கொள்வார்கள்.. | 23 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

எந்த விஷயத்திலும் கவனத்தோடும் பொறுமையுடனும் செயல்பட வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் உங்களை வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பார்கள். எனவே, புத்திசாலிதனமாக செயல்பட வேண்டும். யாருடம் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். தேவையற்ற செலவுகள் வரும். சுருக்கமாக சொல்லப்போனால் உங்க பொறுமையை சோதிக்கும் நாள் என்றே சொல்லலாம். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இந்த ராசியினர் வீண் வார்த்தைகளால் விரோதங்களை தேடிக்கொள்வார்கள்.. | 23 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும் நாள். கணவன், மனைவி இடையே அன்பும், அரவணைப்பும் அதிகரித்தே காணப்படும். தொழிலில் லாபம் இரட்டிபாகும், இதனால் சேமிப்பை உயர்த்த முடியும். சிலர் திடீர் ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசியினர் வீண் வார்த்தைகளால் விரோதங்களை தேடிக்கொள்வார்கள்.. | 23 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

சிந்தனையின் போக்கில் உங்களிடம் உறுதியும் உத்வேகமும் உண்டாகும். உங்களுடைய வார்த்தைகளுக்கு குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும் நாள். வியாபாரம் சார்ந்த பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். பணியிடத்தில் சகஊழியர்களின் ஆதரவு பெருகும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு செல்ல வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்து சார்ந்த பேச்சு அடிபடும். ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

இந்த ராசியினர் வீண் வார்த்தைகளால் விரோதங்களை தேடிக்கொள்வார்கள்.. | 23 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

கனவுகள் நனவாகும் நாள். எந்த காரியத்தை சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரித்து காணப்படும். தாய்மாமன் வழியில் ஆதாயம் கிடைக்கும். கணவன், மனைவி இடையே மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். கைமாறாக வாங்கிய பணம் திரும்ப கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பயணத்தின்போது விலையுயர்ந்த பொருட்களின் மீது கவனம் தேவை. களிப்பு!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த ராசியினர் வீண் வார்த்தைகளால் விரோதங்களை தேடிக்கொள்வார்கள்.. | 23 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

எந்த செயலையும் உறுதியுடன் செய்தால் வெற்றி நிச்சயம். வீண் சந்தேகங்களை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்களிடம் உங்க குடும்ப விஷயத்தை பகிர்ந்துக் கொள்ளாமல் இருப்பது உத்தமம். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். எதிர்பாராத பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உறவினர் வழியில் மகிழ்ச்சிகரமான செய்தி காத்திருக்கிறது. காதலர்கள் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும். ஜெயம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

இந்த ராசியினர் வீண் வார்த்தைகளால் விரோதங்களை தேடிக்கொள்வார்கள்.. | 23 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகையால் சாதகமான சூழல் ஏற்படும். சிலருக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வம்புக்கு வருபவரிடம் விட்டுக்கொடுத்து போவது சிறந்தது. பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும் நாள். ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏதும் இருக்காது. துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். உதவி!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசியினர் வீண் வார்த்தைகளால் விரோதங்களை தேடிக்கொள்வார்கள்.. | 23 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

பணியிடத்தில் அஜாக்கிரதையால் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். பணஉதவி கிடைப்பதில் காலத்தாமதம் ஏற்படும். இதனால் ஏமாற்றம் அடைவீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதில் தடை வரும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது. எந்த செயலையும் செய்வதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசித்து செயல்படவேண்டும். புதிய நபர்களால் குடும்பத்தில் புதிய பிரச்சனை வரும். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 3


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்