Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும்... | 28 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும்... | 28 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 16 ஆம் நாளுக்கான [28 பிப்ரவரி 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்:

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 - 05.00 வரை

இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும்... | 28 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

சுமாரான நாள். இருந்தாலும், நம்பிக்கை இழக்க வேண்டாம். வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும். சுபகாரியம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் பொறுமை வேண்டும். மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். தம்பதிகளுக்கு இடையே இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படலாம். தொல்லை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும்... | 28 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

எதிர்கால எண்ணங்களால் குழப்பத்தோடே இருப்பீர்கள். ஆன்மீக வழிபாடு மனஅமைதியை கொடுக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் எதிலும் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. சகோதரர்களால் அலைச்சல் ஏற்படும். புதிய முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்கவும். தனவரவு திருப்திகரமாக இருக்காது. தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்க்கவும். பரிவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும்... | 28 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். உடன்பிறந்தவர்களிடம் இருந்து நீங்க எதிர்ப்பார்த்தைவிட அதிகமான ஆதரவு கிடைக்கும். அதேபோல், பிறருடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். அதிக பதட்டம் காரணமாக பணியின் போது தவறுகள் செய்தது போல உணர்வீர்கள். கவனத்தோடு இருங்கள். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். குடும்ப சூழலை சமாளிக்க கடன் வாங்கவும் வாய்ப்புள்ளது. செலவு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும்... | 28 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும். துணையின் விருப்பத்தை நிறைவேற்றி காட்டுவீர்கள். சிலர் தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செய்யலாம். விவசாயம் சார்ந்த தொழில் செய்வோர்க்கு லாபம் மேம்படும். வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சனைகள் குறையும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அன்பு நிறைந்த நாள். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும்... | 28 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். கணவன்-மனைவி இடையே பாசம், அன்பு, அக்கறை அதிகரிக்கும். சிலருக்கு நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். சிலருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இதனால், வாழ்க்கையில் முன்னேறுவதற்காக புதிய வழிகளை தேடுவீர்கள். தெளிவு!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும்... | 28 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

கடின முயற்சியால் சிறந்த வளர்ச்சி காணப்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும் நாள். கணவன், மனைவி இடையே அன்பும், அரவணைப்பும் அதிகரித்தே காணப்படும். தொழிலில் லாபம் இரட்டிபாகும், இதனால் சேமிப்பை உயர்த்த முடியும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும்... | 28 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

எந்த காரியத்திலும் பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம். பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக சொந்த ஊர் பயணம் மேற்கொள்வீர்கள். பணியிடத்தில் சோர்வாக உணர்வீர்கள். குடும்பத்தினருடன் கலந்து பேசி பழைய பிரச்சனைகளுக்கு முடிவு காண்பீர்கள். துணையுடன் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்க அனுசரித்து நடந்துக்கொள்வது நல்லது. தொழிலில் புதிய வாடிக்கையாளர்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்ப சூழலுக்காக கடன் வாங்குவீர்கள். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும்... | 28 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

அதிர்ஷ்டமான நாள். கடினமான பணிகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி காண்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். நெருக்கமானவர்களிடம் சின்ன சின்ன கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். ஆசைப்பட்ட பொருள் வாங்குவீர்கள். பெரியோரிடத்தில் அனுசரித்து செல்லுங்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும்... | 28 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

வேலை செய்யும் இடத்தில் எதை பேசுவதாக இருந்தாலும் யோசித்து பேச வேண்டும். அதேபோல், மேலதிகாரிகளுடன் வீண் விவாதங்களை தவிர்த்துக் கொள்ளவும். தந்தை வழி உறவுகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தோடு இருப்பது நல்லது. சிலருக்கு அஜாக்கிரதை காரணமாக பண நஷ்டம் ஏற்படலாம். சிலர் வீண் வார்த்தைகள் பேசுவதன் மூலமாக வேண்டாத பகையை தேடிக் கொள்வார்கள். பணவரவு சுமாராக இருக்கும். நண்பர்களுடன் சண்டை ஏற்படும் நாள். நோய்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும்... | 28 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

அனுகூலபமான நாள். உங்க திறமைகளை வெளிபடுத்த வாய்ப்புகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் சகபணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். கல்வி சர்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவு வந்து சேரும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். தொழிலில் லாபம் எதிர்பாராத அளவு இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பரிசு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும்... | 28 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

எந்த காரியத்திலும் உணர்ச்சிவசப் படுத்துவதை தவிர்க்க வேண்டும். எதிர்பாராத பணவருகையால் பல நிதி சிக்கல்களில் இருந்து உங்களை விடுவிக்கும். பழைய நினைவுகளால் மனதில் ஒருவிதமான தவிர்ப்பு, குழப்பமான சூழல் நிலவும். ஒரு புதிய நபரால் உங்களுக்கும் உங்க துணைக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படும். அனுசரித்து நடந்துக்கொள்ளுங்கள். அனாவசிய செலவுகளை தவிர்த்து விடுங்கள். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும்... | 28 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

நெருங்கிய நண்பர்களின் உதவியுடன், தொழிலில் இரட்டிப்பு லாபம் ஈட்டுவீர்கள். ஆசைப்பட்ட பொருளை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் ஈடுபட அனுகூலமான நாள். ஒருசிலருக்கு வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். எந்த காரியத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பூர்வீக சொத்து வகையில் பணவரவு காணப்படும். சிலருக்கு குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்