Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இந்த ராசியினர் கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சனை இருக்காது.. | 02 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இந்த ராசியினர் கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சனை இருக்காது.. | 02 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 18 ஆம் நாளுக்கான [02 மார்ச் 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்:

காலை: 10.30 - 11.30 வரை

மாலை: இல்லை

இந்த ராசியினர் கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சனை இருக்காது.. | 02 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

பணியிடத்தில் சுமூகமான சூழல் நிலவாது. பொறுமை இழக்க வேண்டாம். நிலம் வாங்கி விற்கும் தொழில், இரும்பு வியாபாரம் மிகப்பெரிய வருமானத்தை கொடுக்கும். கடன் பிரச்சனையில் இருந்து வெளியில் வருவீர்கள். பெற்றோரிடம் கோபத்தை குறைத்துக் கொள்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கலாம். பெண்களுக்கு விலையுயர்ந்த பொருள் வாங்கும் யோகம் உண்டு. ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 1

இந்த ராசியினர் கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சனை இருக்காது.. | 02 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் பங்குக்கொள்வீர்கள். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். இருப்பினும், சிலருக்கு பழைய நினைவுகளால் மனதில் கவலை குடிக்கொள்ளும். இதை தவிர்க்க ஆன்மீக வழிபாடு செய்ய முயற்சிக்கலாம். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டிய நாள். மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். பணப்புழக்கம் சிறப்பாகவே உள்ளது. பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசியினர் கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சனை இருக்காது.. | 02 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

பணவரவு தாரளமாக இருப்பதால், தொழிலை சாமர்த்தியமாக நடத்துவீர்கள். கூட்டு தொழில் மூலம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டுவீர்கள். இருப்பினும், அனாவசிய செலவை குறைத்துகொள்வது நல்லது. பங்குச்சந்தை நல்ல பலனை கொடுக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்ப்பது உத்தமம். சகஊழியர்களை அனுசரித்து போவதால், அவர்களின் ஒத்துழைப்பை பெறமுடியும். தன்நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டிய நாள். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இந்த ராசியினர் கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சனை இருக்காது.. | 02 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

வழக்கு சம்பந்தமான விஷயங்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும். பணியில் வேலையை சிறப்பாக செய்து முதலாளியின் பாராட்டை பெறுவீர்கள். இருப்பினும், கவனமாக இருக்க வேண்டும். பணியிடை நீக்கம் ஏற்படலாம். தொழிலில் லாபம் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்களால் தனவரவு உண்டு. குவாரி வைத்திருப்பவர்களுக்கு பொற்காலம் தான். சண்டையால் பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரும். தம்பதிக்குள் அன்பு, அக்கறை அதிகரிக்கும். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இந்த ராசியினர் கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சனை இருக்காது.. | 02 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

அரசு சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். அடுத்தவரின் பேச்சை கேட்பதை தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் சற்று நிதானத்தை காட்டுங்கள். சிலருக்கு வேலை உயர்வும் ஏற்படவும் வாய்ப்புண்டு. வீட்டில் சுப காரிய நிகழ்ச்சி நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் இருந்த விவகாரம் முடிவுக்கு வரும். குடும்ப உறுப்பினருடன் விட்டுக் கொடுத்து நடந்து பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்வீர்கள். நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசியினர் கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சனை இருக்காது.. | 02 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை பின்பற்றுவதன் மூலம் லாபத்தை அதிகரிக்கலாம். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பலன் உண்டு. மணல், செங்கல் வியாபாரம் செய்பவர்களுக்கு கொள்ளை லாபம். உறவினர்களிடம் அனுசரித்து போவதன் மூலம் குடும்பத்தில் சிக்கலை தவிர்க்கலாம். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். சொந்தபந்தங்களுடன் வியாபாரம் செய்பவர்கள் மட்டும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் நன்றாகவே இருக்கிறது. வரவு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இந்த ராசியினர் கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சனை இருக்காது.. | 02 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

ஹோட்டல் தொழில் செய்பவர்களுக்கு விற்பனை அபாரமான லாபத்தை கொடுக்கும். பூர்வீக சொத்தால் சில பிரச்சனைகளை சந்தீப்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். ஏனென்றால் அது நல்ல பலனை தாராது. கணவன்-மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் நடக்கும். எவ்வளவு சமாதானப்படுத்தினாலும் மனைவியிடம் நல்ல பெயர் எடுக்க முடியாது. அரசு வேலையில் இருப்பவர்கள் பைலில் கையெழுத்து போடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சோதனை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த ராசியினர் கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சனை இருக்காது.. | 02 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பண தேவை பூர்த்தியாகும். சேமிப்பதற்கான வாய்ப்பு உண்டு. உறவினர்களின் ஆதரவு பெருகும். கடினமான காரியங்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இதனால், மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும்போது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஆரோக்கியம் சிறப்பு. சாந்தம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

இந்த ராசியினர் கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சனை இருக்காது.. | 02 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் லாபம் அதிகரிக்கும். துணையுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடுமையான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. பணஇழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பணத்தை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் பொறுமை அவசியம். கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான். எந்த முக்கிய முடிவை எடுப்பதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக் கொள்ளுங்கள், வெளியூர் வேலைகளில் அலைச்சலும் உடல் அசதியும் ஏற்படும். சுபவிரைய செலவுகள் ஏற்படும். சிரமம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

இந்த ராசியினர் கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சனை இருக்காது.. | 02 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

வியாபார பணிகளில் பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் செயல்படவும். சுபகாரியம் சம்பந்தமான அலைச்சல்கள் ஏற்படும். பணியிடத்தில் சகஊழியர்களிடம் கோபமாக நடந்துக்கொள்வீர்கள். கணவன்- மனைவிக்கு இடையே அனுசரித்து செல்வது உத்தமம். வர்த்தக பணிகளில் அதிகமாக முதலீடு செய்வதை குறைத்துக் கொள்ளவும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும். ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசியினர் கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சனை இருக்காது.. | 02 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

எண்ணத்தில் தெளிவு வேண்டும். கண்டதையும் நினைத்து கொண்டு, முக்கியமான காரியங்களில் கோட்டைவிட்டு விட வேண்டாம். பணியிடத்தில் நற்பெயர் சம்பாதிக்க கடினமான உழைக்க வேண்டியிருக்கும். தாராளமாக தனவரவின் மூலம் சேமிப்பு மேம்படும். புத்துணர்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழிலில் பெரியவர்களின் உதவி கிடைக்கும். திடீர் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இந்த ராசியினர் கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சனை இருக்காது.. | 02 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

ஏதாவது ஒரு பிரச்சனை மனதில் ஏறி அமர்ந்து கொண்டு உங்களை சங்கடத்தில் ஆழ்த்தும். நண்பர்கள் வழியில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். வியாபாரம் சுமாராக தான் இருக்கும். பணியிடத்தில் சகஊழியர்களிடம் தேவையற்ற பேச்சை குறைத்துக்கொள்வதன் மூலம் வீண் சிக்கல்களை தவிர்க்கலாம். மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கடன் வாங்குவதையும், கடன் கொடுப்பதையும் தவிர்க்கவும். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்