Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த ராசியினருக்கு அவர்களின் துணையிடம் இருந்து ஒரு இன்பதிர்ச்சி காத்திருக்கிறது... | 03 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இந்த ராசியினருக்கு அவர்களின் துணையிடம் இருந்து ஒரு இன்பதிர்ச்சி காத்திருக்கிறது... | 03 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 19 ஆம் நாளுக்கான [03 மார்ச் 2023, வெள்ளி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்:

காலை: 09.30 - 10.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

இந்த ராசியினருக்கு அவர்களின் துணையிடம் இருந்து ஒரு இன்பதிர்ச்சி காத்திருக்கிறது... | 03 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

எதிர்பாராத வழியில் பணம் உங்களை தேடி வரும். குடும்பத்தினரிடம் எதிர்பார்ப்புகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. நெருக்கமானவரிடம் சின்ன சலசலப்பு ஏற்பட வாய்ப்புண்டு. திருமண வாழ்க்கையை பொறுத்த வரையில், மனைவியின் விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது உத்தமம். சிலர் தொழில் சார்ந்த புதிய முயற்சியில் இறங்குவீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். கடனாக கொடுத்த பணம் வசூலாகும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசியினருக்கு அவர்களின் துணையிடம் இருந்து ஒரு இன்பதிர்ச்சி காத்திருக்கிறது... | 03 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

சுறுசுறுப்பாக இருப்பீர்கள், எந்த காரியத்தையும் வழக்கத்தைவிட மிக விரைவாக செய்து முடிப்பீர்கள். உங்க பேரக் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். காதல் வாழ்க்கையில் ஒரு சூப்பரான திருப்பத்தை காண்பீர்கள். இதுவரை கடுகடுவென்று நடந்துக்கொண்ட உங்க பாஸ் கூலாக நடந்துக் கொள்வார். உங்களுடைய துணையின் மனதை புரிந்துக் கொண்டு அவர்களின் விருப்பதை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் ஏற்றம் இரக்கமின்றி சீராக இருக்கும். ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இந்த ராசியினருக்கு அவர்களின் துணையிடம் இருந்து ஒரு இன்பதிர்ச்சி காத்திருக்கிறது... | 03 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. நீண்டதூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. யாருடைய குடும்ப விஷயங்களிலும் தலையிடாமல் இருப்பது உத்தமம். நாள் முழுவதும் ஆபிஸில் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் பணியை மேற்கொள்வீர்கள். உங்களுடைய துணை உங்களின் பலவீனத்தை பற்றி அறிந்துக் கொண்டு அதற்கேற்றவாறு நடந்துக் கொள்வார். குடும்பத்தில் திடீர் சுப காரியம் நடைபெற வாய்ப்புள்ளது. நண்பர்களிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இந்த ராசியினருக்கு அவர்களின் துணையிடம் இருந்து ஒரு இன்பதிர்ச்சி காத்திருக்கிறது... | 03 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

வியாபாரத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வெற்றி பெருவீர்கள். குழந்தைகளால் பாராட்டு உண்டு. குடும்பத்தில் எந்த பிரச்சனை இருந்தாலும் மனைவியுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இது உங்களுக்கிடையிலான அன்பையும், அந்நூநியத்தையும் அதிகரிக்கும். ஒரு முக்கியமான விஷயத்தில் உங்களுடைய துணை உங்களுக்கு உதவியாக இருப்பார். பணியிடத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணபரிவர்த்தனை மூலம் லாபம் உண்டு. சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 8

இந்த ராசியினருக்கு அவர்களின் துணையிடம் இருந்து ஒரு இன்பதிர்ச்சி காத்திருக்கிறது... | 03 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

பணிவான நடத்தையை அனைவரும் வியந்து பாராட்டுவார்கள். வீட்டில் பெரிய மாற்றங்களை உங்களுக்கு பிடிச்ச மாதிரி செய்வீர்கள். அநாவசிய செலவை குறைத்துக் கொள்வது நல்லது. நட்பில் சிறிய விரிசல் ஏற்பட வாய்ப்புண்டு. ஜாக்கிரதையாக இருங்கள். இதுவரை போரடித்து வந்த ஆபீஸ் வேலையில் ஒரு திடீர் நல்ல மாற்றம் ஏற்படும். தேவையில்லாத காரணத்துக்காக துணையுடன் சின்ன சின்ன சலசலப்பு, வாக்குவாதம் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் உறவினர்கள் உங்களுக்கு பக்கத்துணையாக இருப்பார்கள். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

இந்த ராசியினருக்கு அவர்களின் துணையிடம் இருந்து ஒரு இன்பதிர்ச்சி காத்திருக்கிறது... | 03 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

பணியிடத்தில் உங்களுடைய ஆலோசனைகளை மற்றவர்கள் எதிர்ப்பார்த்து காத்திருப்பார்கள். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களால் நன்மை பிறக்கும். கல்வி சார்ந்த பெரிய நபர்களின் ஆலோசனை கிடைக்கும். குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இருக்காது. மகிழ்ச்சி மட்டுமே இருக்கும். வாகன பயணத்தின் போது நிதானம் அவசியம். நண்பர்களால் அலைச்சல் ஏற்படும். துணையுடன் இருந்த மனக்கசப்பு நீங்கி, அன்பு, நெருக்கம் அதிகரிக்கும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசியினருக்கு அவர்களின் துணையிடம் இருந்து ஒரு இன்பதிர்ச்சி காத்திருக்கிறது... | 03 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

மன ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணத்தை எப்படி சேமிப்பது என்று கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். யாரிடமும் அவசரபட்டு எந்த வாக்குறுதியும் தராதீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த சில விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். பூர்வீக சொத்து விஷயத்தில் குடும்பத்தினரால் சலசலப்பு தோன்றும். எதிர்பாலினத்தவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் மேலிடம் பற்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசியினருக்கு அவர்களின் துணையிடம் இருந்து ஒரு இன்பதிர்ச்சி காத்திருக்கிறது... | 03 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

உறவினர்களிடம் அல்லது நண்பர்களிடம் இருந்து பணவரவு உண்டு. குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிரிந்த சொந்தபந்தம் மீண்டும் வந்து பேசுவார்கள். நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். எதிர்காலம் சார்ந்த சிந்தனை மேலோங்கும். பணம் சார்ந்த விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் ஏற்படும். காதல் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். இரும்பு தொழில் செய்வோருக்கு அமோகமாக இருக்கும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த ராசியினருக்கு அவர்களின் துணையிடம் இருந்து ஒரு இன்பதிர்ச்சி காத்திருக்கிறது... | 03 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், இதனால் முகத்தில் ஒரே புன்னகை தான். அதிகம் பழக்கம் இல்லாதவர்களிடம் உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை ஷேர் செய்ய வேண்டாம். சிலருக்கு தொழிலில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து முன்னேற்றம் உண்டாகும். திருமணம் நிச்சயமானவர்கள், நீங்க திருமணம் செய்து கொள்ள போகும் நபரால் அதிக மகிழ்ச்சி அடைவீர்கள். தேவையில்லாத விஷயங்களில் விலகி இருப்பது நல்லது. பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசியினருக்கு அவர்களின் துணையிடம் இருந்து ஒரு இன்பதிர்ச்சி காத்திருக்கிறது... | 03 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே, திட்டமிட்டுக்கொள்வது சிறந்தது. உங்களுடைய பழைய உறவு உங்களை தேடி வருவார்கள். மகிழ்ச்சியான நாளாக மாறும். உங்களை குறை சொல்ல உங்கக்கூடவே ஒருவர் இருப்பார், பார்த்து பக்குவமாக இருந்துக் கொள்ளுங்கள். புதிய நபர்களால் கணவன்-மனைவி இடையே பிரச்சனை வெடிக்கும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வங்கி பணிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டிய நாள். தடங்கல்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இந்த ராசியினருக்கு அவர்களின் துணையிடம் இருந்து ஒரு இன்பதிர்ச்சி காத்திருக்கிறது... | 03 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

எந்த முயற்சியிலும் வெற்றி காண்பீர்கள். பணிச்சுமை அதிகம் இருக்காது. எப்பவும் போல கேஸுவலாக இருப்பீர்கள். ஆசைகள் நிறைவேறும் நாள். உங்க துணையிடம் இருந்து உங்களுக்கு ஒரு இன்பதிர்ச்சி காத்திருக்கிறது. தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டு. நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும் நாள். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரிகளுக்கு புதிய பார்ட்னர் கிடைப்பார்கள். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இந்த ராசியினருக்கு அவர்களின் துணையிடம் இருந்து ஒரு இன்பதிர்ச்சி காத்திருக்கிறது... | 03 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் பார்ட்னர்ஸிப் வேண்டாம், ஏனெனில் அவர்கள் உங்களை காரியத்திற்கு பயன்படுத்தி கொள்வார்கள். உங்களுடைய பழைய நண்பர்கள் பணஉதவி கேட்டு வருவார்கள். உங்களிடம் இருக்கும் பணயிருப்பை பொறுத்து உதவி செய்யலாம். குடும்பத்தில் சில முக்கிய விஷயமான முடிவுகள் எடுப்பீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களால் மனவருத்தம் அளிக்கும் வகையில் சம்பவம் நடக்கும். கொடுக்கல், வாங்கலில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நஷ்டம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்