Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,718.77
229.78sensex(0.32%)
நிஃப்டி22,047.30
51.45sensex(0.23%)
USD
81.57
Exclusive

பெரிய வள்ளல் போல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினால், அவஸ்தை பட வேண்டிருக்கும்... | 05 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
பெரிய வள்ளல் போல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினால், அவஸ்தை பட வேண்டிருக்கும்... | 05 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 21 ஆம் நாளுக்கான [05 மார்ச் 2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்:

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 03.30 - 04.30 வரை

பெரிய வள்ளல் போல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினால், அவஸ்தை பட வேண்டிருக்கும்... | 05 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

உங்களுக்கு கிடைக்கும் புதிய வாய்ப்புகளின் மூலம் வெற்றி காண்பீர்கள். பணி சம்பந்தமான பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. பணிகளை விரைவாகவும் திறமையாகவும் செய்து முடிப்பீர்கள். பணவரவு உண்டு, இதனால் உங்களுடைய வங்கியிருப்பு அதிகரிக்கும். மனைவி அல்லது காதலியுடன் வெளியிடங்களுக்கு செல்ல வாய்ப்பு உண்டு. வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்வோருக்கு வருமானம் அமோகமாக இருக்கும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

பெரிய வள்ளல் போல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினால், அவஸ்தை பட வேண்டிருக்கும்... | 05 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

அப்பாடா என்று உட்காரும் நாள். இவ்வளவு அலையோ அலைனு அலஞ்சி, எல்லாவற்றிற்கும் ஒரு கும்பிடு போட்டு மகிழ்ச்சியுடனும் மன நிம்மதியுடனும் நாளை செலவழிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு பல நிதி சிக்கல்களை நீக்கும். நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். சுவையான டின்னர் மற்றும் நிம்மதியான தூக்கத்தை எதிர்ப்பார்க்கலாம். கணவன், மனைவி இடையே சலசலப்பு இருக்கும். ஆனால், சமாளித்துவிடுவீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்த வரை சூப்பரோ சூப்பர். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

பெரிய வள்ளல் போல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினால், அவஸ்தை பட வேண்டிருக்கும்... | 05 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். எனவே, குடும்பத்திடன் கோபத்தை காட்டிவிட வேண்டாம். சற்று சுமாரான நாளாக தான் இருக்கும். ஆனால், அமைதியோடு கையாள வேண்டும். காதலர்களிடையே அன்பு பெருகும். உறவினர்களுடனோ அல்லது நண்பர்களுடனோ ஆன்மீக பயணம் செய்ய வாய்ப்புள்ளது. ஒரு புதிய நபர்களால் வியாபாரத்தில் சின்ன தடுமாற்றம் ஏற்படும் ஜாக்கிரதையாக இருந்துக் கொள்ளவும். மேலும், பெரிய வள்ளல் போல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிவிடாதீர்கள், அப்பறம் அவஸ்தை பட வேண்டிருக்கும். அச்சம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

பெரிய வள்ளல் போல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினால், அவஸ்தை பட வேண்டிருக்கும்... | 05 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

அலுவலகத்தில் இருந்து பிரச்சனைகள் தீரும். உங்களை மட்டம் தட்டி பேசியவர்கள் எல்லாம் உங்களை தேடி வந்து உதவி கேட்பார்கள். வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக குறுக்கு வழியை மட்டும் கையாள வேண்டாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த இடம் மாறுதல் கிடைக்கும். எந்த தொழிலில் இறங்கினாலும் வெற்றி உங்களுக்குதான். நீண்ட நாளாக உங்களை தொந்தரவு செய்து வந்த எதிர்ப்புகள் விலகும். செலவு செய்யும்போது மட்டும் கொஞ்சம் சிக்கனம் தேவை. சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

பெரிய வள்ளல் போல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினால், அவஸ்தை பட வேண்டிருக்கும்... | 05 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். மேலதிகாரிகள் உங்களின் பணித்திறனை பார்த்து பாராட்டுவார்கள். புதிய தொழில் செய்ய உதவிகள் தேடி வரும். இவ்வளவு நாளாக வீணாக கிடந்த நிலம் நல்ல விலைக்கு போகும். ஒரு சிலருக்கு காதல் மனைவியையே கறம் பிடிக்கும் வாய்ப்பு உண்டு. தெரியாதவர்களிடன் அநாவசியமாக பேச வேண்டாம். மற்றவர்களுக்கு உதவியை வாரி வழங்குவீர்கள். இதனால், உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. வரவு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

பெரிய வள்ளல் போல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினால், அவஸ்தை பட வேண்டிருக்கும்... | 05 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

பணம் தொடர்பான பிரச்சனைகள் உங்களை மனமுடைய செய்யலாம். நண்பர்கள், குடும்பத்தினரின் உதவி உங்களை தேடி வரும். புதிய வேலை தொடங்குவதற்கான வாய்ப்பு உண்டு. எனவே, அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை செய்து தொழிலை ஆரம்பிப்பது நல்லது. குழந்தைகளால் அலைச்சல் ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பழைய நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். அலைச்சல்!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

பெரிய வள்ளல் போல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினால், அவஸ்தை பட வேண்டிருக்கும்... | 05 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

தனலட்சுமி வீடு தேடி வர போகிறாள். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். திருமண தள்ளிப்போனவர்களுக்கு அவர்களே வந்து பேசுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையை பொறுத்த வரையில் ஆஹா. உங்களுடைய ஆசை அனைத்து நிறைவேறும் நாள். எதிர்பாராத பண வரவுகள் மகிழ்ச்சியை கொடுக்கும். ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கிறது. ஜெயம்!

அதிர்ஷ்ட நிறம்: மயில்பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

பெரிய வள்ளல் போல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினால், அவஸ்தை பட வேண்டிருக்கும்... | 05 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

வேலையில் ஏற்படும் அழுத்தம் எரிச்சலை ஏற்படுத்தும். உங்களுடைய வார்த்தைக்கு உறவினர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசும்போது சற்று கவனத்தோடு பேசுங்கள். இல்லையெனில் அதுவே நட்பை முறித்துவிடும். எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும். நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும். அக்கம்பக்கத்தினரால் சின்ன சலசலப்பு ஏற்படும். சுதாரித்துக் கொள்ளவும். சிலருக்கு பிடித்த இடங்களுக்கு செல்வதில் தடை ஏற்படும். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

பெரிய வள்ளல் போல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினால், அவஸ்தை பட வேண்டிருக்கும்... | 05 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் நண்பர்களுடன் இணைந்து பல சவால்களை முறியடித்து நல்ல லாபம் அடைவீர்கள். சிலர் தங்களுடைய பிள்ளைகளின் படிப்பிற்காக நிறைய பணம் செலவிட வேண்டியிருக்கும். திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும். காதலர்களுக்கு இடையே அன்பும், பாசமும், புரிதல்களும் அதிகரிக்கும் நாள். உடன்பிறந்தவர்கள் உதவி கிடைக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பீர்கள். நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

பெரிய வள்ளல் போல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினால், அவஸ்தை பட வேண்டிருக்கும்... | 05 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

கடினமான வேலையை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். புதிய வீடு, மனை அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. பொறாமை குணத்தால் மனதில் நிம்மதி இருக்காது. அதாவது இது நீங்களே ஏற்படுத்திக் கொள்ளும் காயம். எனவே, மற்றவர்களின் மகிழ்ச்சி மற்றும் ஆனந்தத்தில் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நெருங்கிய நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ வியாபாரம் செய்பவர்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டிய நாள். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

பெரிய வள்ளல் போல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினால், அவஸ்தை பட வேண்டிருக்கும்... | 05 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். இதனால், மனதில் டென்ஷன் அதிகமாகும். வெளிப்புற வேலைகள் களைப்படைய செய்யும். புதிய நண்பர்களுடன் உறவு ஏற்படும் நாள். யாரிடமும் சொல்லாமல் சின்ன விழாவை நடத்துவீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். பயணம் செய்யும்போது விலையுயர்ந்த பொருட்களின் கவனமாக இருக்க வேண்டும். கண் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம், கவனமாக இருக்கணும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

பெரிய வள்ளல் போல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினால், அவஸ்தை பட வேண்டிருக்கும்... | 05 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

பணவரவு திருப்தியை கொடுக்கும். இதனால், பல சிக்கல்களில் இருந்து மீண்டு வருவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த தேவைகள் அனைத்தும் நிறைவடையும். உங்கள் அன்புகுரியவரிடம் இருந்து எதிர்பாராத பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் சகஊழியர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை முடிவுக்கு வரும். திடீர் விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 8


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்