Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த இரண்டு ராசிக்காரங்க மட்டும் கவனமா இருங்க.. | 06 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இந்த இரண்டு ராசிக்காரங்க மட்டும் கவனமா இருங்க.. | 06 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 22 ஆம் நாளுக்கான [06 மார்ச் 2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்:

காலை: 06.30 - 07.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

இந்த இரண்டு ராசிக்காரங்க மட்டும் கவனமா இருங்க.. | 06 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

உங்களால் முடியும் என்றால் மட்டும் வாக்குறுதி கொடுங்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை கூறும்போது எச்சரிக்கையாக இருங்கள். இல்லையென்றால், அதுவே உங்களுக்கு ஆப்பாக திரும்பும். துணையுடன் அகந்தை பேச்சை குறைத்துக்கொள்ளவும். பணப்புழக்கம் சுமாராக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது மிகவும் கவனம் தேவை. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் திருட்டு போக வாய்ப்புள்ளது. கவலை!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இந்த இரண்டு ராசிக்காரங்க மட்டும் கவனமா இருங்க.. | 06 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். கணவன்-மனைவி இடையே பாசம், அன்பு, அக்கறை அதிகரிக்கும். சிலருக்கு நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். சிலருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இதனால், வாழ்க்கையில் முன்னேறுவதற்காக புதிய வழிகளை தேடுவீர்கள். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 2

இந்த இரண்டு ராசிக்காரங்க மட்டும் கவனமா இருங்க.. | 06 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

எதிர்கால எண்ணங்களால் குழப்பத்தோடே இருப்பீர்கள். ஆன்மீக வழிபாடு மனஅமைதியை கொடுக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் எதிலும் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. சகோதரர்களால் அலைச்சல் ஏற்படும். புதிய முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்கவும். தனவரவு திருப்திகரமாக இருக்காது. தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்க்கவும். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இந்த இரண்டு ராசிக்காரங்க மட்டும் கவனமா இருங்க.. | 06 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

சவால்கள் நிறைந்த நாள். பணியிடத்தில் சகஊழியர்களிடையே திறமையை நிரூபிக்க போட்டி போட்டு வேலை செய்வீர்கள். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்துக்கொள்வது சிறந்தது. சிலருக்கு எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறைந்து மனதில் நிம்மதி குடிக்கொள்ளும். குடும்பத்தில் பேச்சினால் பிரச்சனை வரும், முடிந்தவரை விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பிரீதி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இந்த இரண்டு ராசிக்காரங்க மட்டும் கவனமா இருங்க.. | 06 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

நெருங்கிய நண்பர்களின் உதவியுடன், தொழிலில் இரட்டிப்பு லாபம் ஈட்டுவீர்கள். நிறைவேறாத ஆசைகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற தொடங்கும். திருமண முயற்சிகளில் ஈடுபட அனுகூலமான நாள். ஒருசிலருக்கு வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். எந்த காரியத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பூர்வீக சொத்து வகையில் பணவரவு காணப்படும். சிலருக்கு குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 3
 

இந்த இரண்டு ராசிக்காரங்க மட்டும் கவனமா இருங்க.. | 06 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

சந்தோஷத்திற்கு பஞ்சம் இருக்காது. தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். புதிய பெண்களிடம்  பேசும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் பேசவும். பணியிடத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களுடன் இருந்து வந்த பிரச்சனை ஒரு முடிவு வரும்.  பூர்வீக சொத்து விவகாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வாகன பயணத்தின்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். பாசம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த இரண்டு ராசிக்காரங்க மட்டும் கவனமா இருங்க.. | 06 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

நீண்ட நாட்களாக இழுபறியான சில முக்கிய பணிகளை செய்து முடிப்பீர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். சிலருக்கு உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மற்றவர்களிடம் உங்க குடும்ப விஷயத்தை பகிர்ந்துக் கொள்ளாமல் இருப்பது உத்தமம். விருப்பங்கள் நிறைவேறும் நாள். மனதில் தன்பிக்கை அதிகரிக்கும்.பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். அனைவரிடமும் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்து வைப்பீர்கள். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: மயில் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

இந்த இரண்டு ராசிக்காரங்க மட்டும் கவனமா இருங்க.. | 06 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

வேலை செய்யும் இடத்தில் எதை பேசுவதாக இருந்தாலும் யோசித்து பேச வேண்டும். அதேபோல், மேலதிகாரிகளுடன் வீண் விவாதங்களை தவிர்த்துக் கொள்ளவும். தந்தை வழி உறவுகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தோடு இருப்பது நல்லது. சிலருக்கு அஜாக்கிரதை காரணமாக பண நஷ்டம் ஏற்படலாம். சிலர் வீண் வார்த்தைகள் பேசுவதன் மூலமாக வேண்டாத பகையை தேடிக் கொள்வார்கள். பணவரவு சுமாராக இருக்கும். நண்பர்களுடன் சண்டை ஏற்படும் நாள். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இந்த இரண்டு ராசிக்காரங்க மட்டும் கவனமா இருங்க.. | 06 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

விட்டுக்கொடுத்து போகும் அணுகுமுறையால் குடும்பத்திலும், பிற இடத்திலும் உங்களின் மதிப்பு உயரும். பணப்புழக்கம் அமோகமாக இருக்கும். சேமிப்பு உயரும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். காப்பீடு சார்ந்த விஷயங்களில் அனுகூலமான பலன் கிடைக்கும். எந்த செயலிலும் ஒரு உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். அன்புக்குரியவர்களுக்கு பரிசு வாங்கிக் கொடுப்பீர்கள். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த இரண்டு ராசிக்காரங்க மட்டும் கவனமா இருங்க.. | 06 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும். துணையின் விருப்பத்தை நிறைவேற்றி காட்டுவீர்கள். சிலர் தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். விவசாயம் சார்ந்த தொழில் செய்வோர்க்கு லாபம் மேம்படும். வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சனைகள் குறையும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அன்பு நிறைந்த நாள். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இந்த இரண்டு ராசிக்காரங்க மட்டும் கவனமா இருங்க.. | 06 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

தொழிலதிபர்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மனதிற்கு பிடித்தவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். இருப்பினும், பெரிய அளவிலான பண முதலீட்டை தவிர்ப்பது நல்லது. வீண்செலவுகளை தவிர்க்கவும். ஊக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

இந்த இரண்டு ராசிக்காரங்க மட்டும் கவனமா இருங்க.. | 06 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணியிடத்தில் கொடுத்த பணியை சரியான நேரத்தில் முடித்துக்கொடுத்து மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சிலருக்கு அரசியல் சார்ந்த நபர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். துணையுடன் வெளியில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பயணம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்