Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உங்க பொறுமையை சோதிக்கும் நாள்.. பாத்து உஷாரு இருந்துக்கோங்க! | 07 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
உங்க பொறுமையை சோதிக்கும் நாள்.. பாத்து உஷாரு இருந்துக்கோங்க! | 07 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 23 ஆம் நாளுக்கான [07 மார்ச் 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்:

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

உங்க பொறுமையை சோதிக்கும் நாள்.. பாத்து உஷாரு இருந்துக்கோங்க! | 07 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

சில விஷயங்கள் உங்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். சிலருக்கு பணியிடத்தில் திறமைக்கு கேற்ற பரிசு காத்திருக்கிறது. எதிர்பாலினத்தவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் புதிய பிரச்சனை தலைதூக்கும். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

உங்க பொறுமையை சோதிக்கும் நாள்.. பாத்து உஷாரு இருந்துக்கோங்க! | 07 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

வழக்கு சம்பந்தமான விஷயங்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும். பணியில் வேலையை சிறப்பாக செய்து முதலாளியின் பாராட்டை பெறுவீர்கள். தொழிலில் லாபம் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்களால் தனவரவு உண்டு. குவாரி வைத்திருப்பவர்களுக்கு பொற்காலம் தான். தம்பதிக்குள் அன்பு, அக்கறை அதிகரிக்கும். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும்போது பொறுமை வேண்டும். ஜெயம்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

உங்க பொறுமையை சோதிக்கும் நாள்.. பாத்து உஷாரு இருந்துக்கோங்க! | 07 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

புதிய தொடர்புகள் மற்றும் நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். சண்டையால் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். வேலை செய்யும் இடத்தில் சகபணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்திலும் வருமானம் நல்ல முறையில் இருக்கும். தந்தைவழி உறவினரால் ஆதாயம் உண்டு. மனைவியின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். சிலருக்கு புதிய தொழில் தொடங்குவது சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

உங்க பொறுமையை சோதிக்கும் நாள்.. பாத்து உஷாரு இருந்துக்கோங்க! | 07 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டிய நாள். துணையுடன் பேசும்பொழுது வார்த்தையை விடாமல் இருப்பது நல்லது.  எதிர்பாராத செலவுகள் நெருக்கடியை உண்டாக்கலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மற்றவர்களை பற்றி குறைக்கூறுவதை தவிர்ப்பதன் மூலம் வீண் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். சிலருக்கு எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

உங்க பொறுமையை சோதிக்கும் நாள்.. பாத்து உஷாரு இருந்துக்கோங்க! | 07 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

அரசு சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். தொழிலில் அடுத்தவர் பேச்சை கேட்பதை தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் சற்று நிதானத்தை காட்டுங்கள். சிலருக்கு பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சி நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் இருந்த விவகாரம் முடிவுக்கு வரும். குடும்ப உறுப்பினருடன் விட்டுக் கொடுத்து நடந்து பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்வீர்கள். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

உங்க பொறுமையை சோதிக்கும் நாள்.. பாத்து உஷாரு இருந்துக்கோங்க! | 07 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

எதை பேசும்போதும் கவனமாக பேச வேண்டும். நண்பர்களுடனான சந்திப்பை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் வேலைகள் அடுக்கிக் கொண்டே போகும், இதனால் முக்கிய பணிகள் தள்ளிப் போகும். சிலர் புதிய வியாபாரம் தொடங்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். இன்று உங்கள் துணை உங்களை கடுப்பாக்குவார். டென்ஷன் ஆக வேண்டாம். பயணத்தின் போது பணத்தை தொலைக்க வாய்ப்புள்ளது பார்த்து ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். தடங்கல்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

உங்க பொறுமையை சோதிக்கும் நாள்.. பாத்து உஷாரு இருந்துக்கோங்க! | 07 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

எதிலும் தெம்போடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் பல நாட்களாக இருந்த வந்த பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு. குறைந்த முயற்சியில் பெரிய வெற்றியை அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பேச்சு சகபணியாளர்களுக்கு மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். ஆரோக்கியம் சிறப்பு. களிப்பு!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

உங்க பொறுமையை சோதிக்கும் நாள்.. பாத்து உஷாரு இருந்துக்கோங்க! | 07 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

நாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். எதையும் எடுத்தோம் கவுத்தோம் என்று இருக்காமல், பொறுமையுடன் முடிவெடுக்க வேண்டும். பணத்தை கையாளும்போது அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். குடும்பத்தில் அனுசரித்து சென்றால் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கலாம். வேலை செய்யும் இடத்தில் சகப்பணியாளர்களிடத்தில் சின்ன சின்ன சண்டைகள் ஏற்படும். கணவன் - மனைவி இடையே தேவையற்ற பேச்சுக்களால் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

உங்க பொறுமையை சோதிக்கும் நாள்.. பாத்து உஷாரு இருந்துக்கோங்க! | 07 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

சாதுர்யமான பேச்சால் முன்னேற்றம் ஏற்படும் நாள். பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். உங்க துணையின் விருப்பத்தை நிறைவேற்ற கொஞ்சம் சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இழுபறியாக இருந்த தனவரவு கைக்கு வந்து சேரும், இதனால் சேமிப்பு கூடும். தானியம் சம்பந்தமான வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

உங்க பொறுமையை சோதிக்கும் நாள்.. பாத்து உஷாரு இருந்துக்கோங்க! | 07 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

எந்த விஷயத்திலும் கவனத்தோடும் பொறுமையுடனும் செயல்பட வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் உங்களை வேண்டுமென்றே வம்புக்கு இழுபார்கள். எனவே, புத்திசாலிதனமாக செயல்பட வேண்டும். யாருடம் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. தேவையற்ற செலவுகள் வரும். சுருக்கமாக சொல்லப்போனால் பொறுமையை சோதிக்கும் நாள் என்றே சொல்லலாம். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

உங்க பொறுமையை சோதிக்கும் நாள்.. பாத்து உஷாரு இருந்துக்கோங்க! | 07 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

பணவரவு தாரளமாக இருப்பதால், தொழிலை சாமர்த்தியமாக நடத்துவீர்கள். கூட்டு தொழில் மூலம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டுவீர்கள். அனாவசிய செலவை குறைத்துகொள்வது நல்லது. பங்குச்சந்தை நல்ல பலனை கொடுக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்ப்பது உத்தமம். சகஊழியர்களை அனுசரித்து போவதால், அவர்களின் ஒத்துழைப்பை பெறமுடியும். தன்நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டிய நாள். சாதனை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

உங்க பொறுமையை சோதிக்கும் நாள்.. பாத்து உஷாரு இருந்துக்கோங்க! | 07 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

உத்தியோகத்தில் திறமையாக செயல்பட்டால் நல்ல பலன்களை பெறலாம். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரித்து காணப்படும். சவாலான சூழ்நிலைகளை சமாளிக்க நேரிடும். வியாபாரத்தில் லாபம் ஏறி, இறங்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உடன் பிறந்தவர்களின் வழியாக சுபசெய்திகள் வீடு தேடி வரும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பெயர் தெரியாதவர்களிடம் வீண் பேச்சை தவிர்ப்பது நல்லது. மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்