Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

புதிய நபர்களால் காதலர்களுக்கு இடையே பிரச்சனை தலைதூக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.03.2023

Nandhinipriya Ganeshan Updated:
புதிய நபர்களால் காதலர்களுக்கு இடையே பிரச்சனை தலைதூக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.03.2023Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ஆம் நாளுக்கான [29 மார்ச் 2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 09.30 - 10.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

புதிய நபர்களால் காதலர்களுக்கு இடையே பிரச்சனை தலைதூக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.03.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். சண்டையால் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். வேலை செய்யும் இடத்தில் சகபணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்திலும் வருமானம் நல்ல முறையில் இருக்கும். மனைவியின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். சிலருக்கு புதிய தொழில் தொடங்குவது சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். எதிர்பாராத பணவருகையால் பல நிதி சிக்கல்களில் இருந்து உங்களை விடுவிக்கும். நீங்கள் செய்யும் ஒருசில காரியங்கள் மற்றவர்களுக்கு பேருதவியாக அமையும். விவேகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

புதிய நபர்களால் காதலர்களுக்கு இடையே பிரச்சனை தலைதூக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.03.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். பணப்புழக்கம் சுமாராக தான் இருக்கும். தாய்வழி உறவினர்களால் எதிர்பாரா செலவுகள் வரும். முக்கிய காரியங்களில் தடை, தாமதம் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்கள் காணப்படும். எதை பேசினாலும் கவனமாக பேசவும். நண்பர்களுடனான சந்திப்பை தவிர்ப்பது நல்லது. பயணத்தின் போது பணத்தை தொலைக்க வாய்ப்புள்ளது. தொழில் மந்தமாக தான் இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. புதிய நபர்களால் காதலர்களுக்கு இடையே பிரச்சனை தலைதூக்கும். நோய்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

புதிய நபர்களால் காதலர்களுக்கு இடையே பிரச்சனை தலைதூக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.03.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

எதிலும் தெம்போடு செயல்படுவீர்கள். கடின உழைப்பிற்கு தக்க பரிசு காத்திருக்கிறது. கால்நடை சம்பந்தமான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். பணபுழக்கம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் பல நாட்களாக இருந்த வந்த பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். குறைந்த முயற்சியில் பெரிய வெற்றியை அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பேச்சு சகபணியாளர்களுக்கு மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். ஆரோக்கியம் சிறப்பு. விருப்பங்கள் நிறைவேறும் நாள். ஊக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

புதிய நபர்களால் காதலர்களுக்கு இடையே பிரச்சனை தலைதூக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.03.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

எல்லா பணிகளையும் குறித்த நேரத்தில் செய்து முடித்து, மேலதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் தனவரவு உண்டு. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபார பணியில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள், ஆனால் லாபம் சுமாராக தான் இருக்கும். தம்பதிக்குள் அன்பு, அக்கறை அதிகரிக்கும். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும்போது பொறுமை வேண்டும். சிலருக்கு எதிர்பாலினத்தவரின் அறிமுகம் கிடைக்கும். ஜெயம்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 8

புதிய நபர்களால் காதலர்களுக்கு இடையே பிரச்சனை தலைதூக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.03.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

தன்னம்பிக்கையுடம் அனைத்து காரியங்களையும் செய்வீர்கள். பணியிடத்தில் மற்றவர்களை நம்பாமல், தானே பணிகளை மேற்கொண்டால் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். வர்த்தக பணிகளில் அதிகமாக முதலீடு செய்வதை குறைத்துக் கொள்ளவும். சுபநிகழ்ச்சிகளில் பங்குக்கொள்வீர்கள். உங்களின் மீதே உங்களுக்கு புது நம்பிக்கை பிறக்கும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. விலங்குகளிடம் இருந்து தள்ளி இருப்பது நல்லது. பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: மயில் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

புதிய நபர்களால் காதலர்களுக்கு இடையே பிரச்சனை தலைதூக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.03.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அலைச்சல் ஏற்படும். பணியிடத்தில் மறைமுக விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். தனவரவு திருப்திகரமாக இருக்காது. அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தினரின் நலன் குறித்த எண்ணங்கள் மனதில் அவ்வப்போது வந்துபோகும். நீதிமன்ற வழக்குகள் சாதகமான பலனை கொடுக்கும். காதலர்களுக்கு இடையில் இருந்த சண்டை முடிவுக்கு வரும். நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும். வீட்டில் ஒருவருக்கு மருத்துவ செலவு ஏற்படும். சிலருக்கு புதிய நபர்களின் உதவி கிடைக்கும். இரக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

புதிய நபர்களால் காதலர்களுக்கு இடையே பிரச்சனை தலைதூக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.03.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

நாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். எதையும் எடுத்தோம் கவுத்தோம் என்று இருக்காமல், பொறுமையுடன் முடிவெடுக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் சகப்பணியாளர்களிடத்தில் வாக்குவாதம் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். சிலர் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட இடத்திற்கு சென்றுவருவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். சுமாராக இருந்த தொழிலில் திடீர் லாபம் அதிகரிக்கும். துணையிடம் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். தெளிவு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

புதிய நபர்களால் காதலர்களுக்கு இடையே பிரச்சனை தலைதூக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.03.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

அனைத்து விஷயத்திலும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். பணியிடத்தில் கீழ் பணிபுரிவர்களால் பிரச்சனை ஏற்படலாம். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்து வைப்பீர்கள். மனகுழப்பத்தை துணையுடன் பகிர்ந்துக் கொள்வீர்கள். சிலர் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

புதிய நபர்களால் காதலர்களுக்கு இடையே பிரச்சனை தலைதூக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.03.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். துணையுடன் பேசும்போது தேவையில்லாத வார்த்தையை விடாமல் இருப்பது நல்லது. எதிர்பாலினத்தவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிர்பாராத செலவுகள் நெருக்கடியை உண்டாக்கலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மற்றவர்களை பற்றி குறைக்கூறுவதை தவிர்ப்பதன் மூலம் வீண் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். ஆக மொத்தம் பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டிய நாள். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

புதிய நபர்களால் காதலர்களுக்கு இடையே பிரச்சனை தலைதூக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.03.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

தொழிலில் அடுத்தவர் பேச்சை கேட்பதை தவிர்க்க வேண்டும். அரசு சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சி நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். விருப்பங்கள் எந்த தடையுமின்றி நிறைவேறும். சிலருக்கு தொலைத்துரத்தில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். பணப்புழக்கம் சீராக இருக்கும். நண்பர்களுடன் வெளியில் செல்ல வாய்ப்புண்டு. காதல் வாழ்க்கையில் புது திருப்பம் ஏற்படும் நாள். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

புதிய நபர்களால் காதலர்களுக்கு இடையே பிரச்சனை தலைதூக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.03.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

துணையின் விருப்பத்தை நிறைவேற்ற கொஞ்சம் சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும். இழுபறியாக இருந்த தனவரவு கைக்கு வந்து சேரும், இதனால் சேமிப்பு கூடும். தானியம் சம்பந்தமான வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் தேடிவரும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சனைகள் குறையும். திடீர் விருந்தினர் வருகையாக குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

புதிய நபர்களால் காதலர்களுக்கு இடையே பிரச்சனை தலைதூக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.03.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

கூட்டு தொழில் மூலம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்ப்பது உத்தமம். சகஊழியர்களை அனுசரித்து போவதால், அவர்களின் ஒத்துழைப்பை பெறமுடியும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உடன் பிறந்தவர்களின் வழியாக சுபசெய்திகள் வீடு தேடி வரும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பெயர் தெரியாதவர்களிடம் வீண் பேச்சை தவிர்ப்பது நல்லது. துணையின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 8


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்