Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாள் நல்லா இல்ல.. கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.03.2023

Nandhinipriya Ganeshan Updated:
நாள் நல்லா இல்ல.. கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.03.2023Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 14 ஆம் நாளுக்கான [28 மார்ச் 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

நாள் நல்லா இல்ல.. கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.03.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டிய நாள். வாழ்க்கை துணை பற்றிய சிந்தனைகளின் மூலம் குழப்பம் தோன்றி மறையும். பணியிடத்தில் சகஊழியர்களின் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் குறையும். லாபம் இரட்டிப்பாகும். வியாபாரம் சம்பந்தமான பயணங்கள் அனுகூலப் பலன்களை தரும். கடன் சம்பந்தமான விஷயங்களில் பொறுமையுடனும் கவனத்துடனும் செயல்படவும். பணவரவு தாராளமாகவே இருக்கும். சாந்தம்!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

நாள் நல்லா இல்ல.. கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.03.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

பூர்வீக சொத்தால் சில பிரச்சனைகளை சந்தீப்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். கணவன்-மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் நடக்கும். எவ்வளவு சமாதானப்படுத்தினாலும் மனைவியிடம் நல்ல பெயர் எடுக்க முடியாது. சுபகாரியம் சம்பந்தமான அலைச்சல்கள் ஏற்படும். பணியிடத்தில் சகஊழியர்களிடம் கோபமாக நடந்துக்கொள்வீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும். குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

நாள் நல்லா இல்ல.. கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.03.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

குடும்பத்தின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். சிலருக்கு எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும். மணல், செங்கல் வியாபாரம் செய்பவர்களுக்கு கொள்ளை லாபம். சொந்தபந்தங்களுடன் வியாபாரம் செய்பவர்கள் மட்டும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் நன்றாகவே இருக்கிறது. நீண்ட நாள் கழித்து நெருக்கமானவரை சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும். வாகனப் பயணத்தின்போது நிதானம் தேவை. திடம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

நாள் நல்லா இல்ல.. கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.03.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சி நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் இருந்த விவகாரம் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் அடுத்தவரின் பேச்சை கேட்பதை தவிர்க்க வேண்டும். சிலருக்கு வேலை உயர்வும் ஏற்படவும் வாய்ப்புண்டு. நீண்டதூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். துணையால் அனுகூலப் பலன் உண்டு. அரசு சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

நாள் நல்லா இல்ல.. கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.03.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

எதிலும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். பணியில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது, எனவே திட்டமிட்டு நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பணவரவு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இருக்காது. இருப்பினும், சமாளிப்பீர்கள். சுபகாரியம் சம்பந்தமான விஷயங்களில் தடை வரும். நிலம் வாங்கி விற்கும் தொழில், இரும்பு வியாபாரம் செய்வோருக்கு அதிர்ஷ்டகரமான நாள். பெண்களுக்கு விலையுயர்ந்த பொருள் வாங்கும் யோகம் உண்டு. பெற்றோரிடம் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். சிரத்தை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

நாள் நல்லா இல்ல.. கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.03.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

யாருக்கு கடன் கொடுத்தாலும் எழுத்து வடிவில் பரிவர்த்தனை செய்வது நல்லது. இல்லையென்றால் ஏமாற்றம் உங்களுக்கு தான். சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. திருமண காரியங்களில் இருந்த சிக்கல் விலகும். பண தேவை பூர்த்தியாகும். கடினமான காரியங்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள்.வாகனத்தில் செல்லும்போது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். தூரத்து சொந்தபந்தங்களிடம் இருந்து நற்செய்தி தேடி வரும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். காதலில் அன்பு பெருகும். மறதி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

நாள் நல்லா இல்ல.. கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.03.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் பங்குக்கொள்வீர்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு சகஊழியர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உற்பத்தி தொடர்பான துறைகளில் லாபம் மேம்படும். குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். பணப்புழக்கம் சிறப்பாகவே உள்ளது. பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

நாள் நல்லா இல்ல.. கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.03.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

பணியிடத்தில் வேலையை சிறப்பாக செய்து முதலாளியின் பாராட்டை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் தனவரவு உண்டு. சண்டையால் பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரும். தம்பதிக்குள் அன்பு, அக்கறை அதிகரிக்கும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள், எந்த காரியத்தையும் வழக்கத்தைவிட மிக விரைவாக செய்து முடிப்பீர்கள். துணையின் மனதை புரிந்துக் கொண்டு அவர்களின் விருப்பதை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் ஏற்றம் இரக்கமின்றி சீராக இருக்கும். காதல் வாழ்க்கையில் ஒரு சூப்பரான திருப்பத்தை காண்பீர்கள். துணிவு!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 6

நாள் நல்லா இல்ல.. கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.03.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

அனைவரிடமும் அனுசரித்து போவது நல்லது. தேவையற்ற விஷயங்களுக்கு கோபப்படுவதை தவிர்த்துவிடுங்கள். கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான். அரசு சார்ந்த துறையில் பணிபுரிவோர்களுக்கு பொறுப்பும், அதிகாரமும் அதிகரிக்கும். துணையுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடுமையான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. பணஇழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பணத்தை கவனமாக கையாளுங்கள். எந்த முக்கிய முடிவை எடுப்பதற்கு முன்பும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக் கொள்ளுங்கள். சோதனை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

நாள் நல்லா இல்ல.. கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.03.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

தன்நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். பணியிடத்தில் கடின உழைப்புக்கு தகுந்து அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருத்தம் ஏற்படும். புதிய முயற்சிகள் அதிர்ஷ்டமான பலன்களை தேடி தரும். உறவினர்கள், நண்பர்களின் உதவி கிடைக்கும். சக ஊழியர்களுடன் நட்பாக பழகுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிலருக்கு வீடு, நிலம் வாங்கும் யோகமும் உண்டு. சுமாராக சென்ற வியாபாரத்தில் திடீர் லாபம் கிடைக்கும். விலங்குகளிடம் இருந்து ஒதுங்கி இருக்கவும். கீர்த்தி!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

நாள் நல்லா இல்ல.. கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.03.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவு எதிர்ப்பார்த்ததை விட அதிகமாகவே இருக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். குடும்பத்தில் பிரச்சனை குறைந்து ஒற்றுமை மேம்படும். தூரத்து சொந்தம் வழியாக நல்ல செய்தி காதுக்கு வரும். நெருக்கமானவரிடம் சின்ன சலசலப்பு ஏற்பட வாய்ப்புண்டு. திருமண வாழ்க்கையை பொறுத்த வரையில், மனைவியின் விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது உத்தமம். பழைய நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். பணிவு!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

நாள் நல்லா இல்ல.. கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 28.03.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

சிறிய முதலீட்டின் மூலம் பெரிய லாபத்தை பார்ப்பீர்கள். நண்பர்களும், குடும்பத்தினரும் உதவியாக இருப்பார்கள். புதிய தொழில் தொடங்க நல்ல நாள். பெண்களால் ஆதாயம் உண்டு. வெளியூர் பயணங்களின் போது பணம் பத்திரம். பங்குச்சந்தை நல்ல பலனை கொடுக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்ப்பது உத்தமம். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். சிலர் மனதிற்கு பிடித்த இடங்களுக்கு செல்ல வாய்ப்புக் கிடைக்கும். பரிசு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்