Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வாழ்க்கையில் சந்தித்த முக்கிய நபரை பிரிய வேண்டிய சூழல் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 30.03.2023

Nandhinipriya Ganeshan Updated:
வாழ்க்கையில் சந்தித்த முக்கிய நபரை பிரிய வேண்டிய சூழல் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 30.03.2023Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 16 ஆம் நாளுக்கான [30 மார்ச் 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 10.30 - 11.00 வரை

மாலை: இல்லை

வாழ்க்கையில் சந்தித்த முக்கிய நபரை பிரிய வேண்டிய சூழல் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 30.03.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும். எனவே எந்த காரியத்திலும் பக்குவமாகவும் புத்திசாலித்தனத்துடனும் சூழ்நிலைகளை கையாள வேண்டும். தொழில் சற்று மந்தமாக காணப்படும். அண்டைவீட்டாரை அனுசரித்து நடந்துக்கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் வேலை அதிகமாக இருக்கும். விலங்குகளிடம் இருந்து தள்ளி நிற்கவும்.  பண வரவு சற்று குறைவாக தான் இருக்கும். அனாவசிய செலவை குறைக்கவும். துணையிடம் கேலியாக பேசுவதை தவிர்க்கவும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

வாழ்க்கையில் சந்தித்த முக்கிய நபரை பிரிய வேண்டிய சூழல் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 30.03.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

புதிய வாய்ப்புகள் தேடி வரும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இவ்வளவு நாட்களாக எதற்கு ஆசைப்பட்டீர்களோ, அதை அடைய வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பொறுமை தேவை. தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய நபர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உடன்பிறந்தவர்களிடம் எதிர்பார்த்த சில விஷயம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: மயில் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

வாழ்க்கையில் சந்தித்த முக்கிய நபரை பிரிய வேண்டிய சூழல் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 30.03.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

அதிக பணிச்சுமை காரணமாக சோர்வாக உணர்வீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் முன்னாடி ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். வாகன பயணத்தின் போது கவனமாக இருக்கவும். மாணவர்களுக்கு சிறப்பான நாள் அல்ல. பொறாமை குணத்தால் மனதில் நிம்மதி இருக்காது. நெருங்கிய நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ வியாபாரம் செய்பவர்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டிய நாள். கணவன், மனைவி இடையே கருத்துமோதல்கள் ஏற்படும். தடங்கல்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

வாழ்க்கையில் சந்தித்த முக்கிய நபரை பிரிய வேண்டிய சூழல் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 30.03.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

முன்கோபத்தால் பல வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தேவையில்லாத சிந்தனை மூலம் தூக்கமின்மை ஏற்படும். பணியிடத்தில் சகஊழியர்களிடம் பார்த்து நடந்துக் கொள்ளவும். பணயிழப்பிற்கு வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் எதிரிகள் அதிகரிப்பார்கள். தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும்.  ஒருசிலருக்கு தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். விபத்தில் சிக்கல் வாய்ப்புள்ளது வாகன பயணத்தின் போது எச்சரிக்கையாக இருக்கவும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

வாழ்க்கையில் சந்தித்த முக்கிய நபரை பிரிய வேண்டிய சூழல் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 30.03.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

கணக்கு வழக்குகளை ஒழுங்காக கவனிக்காமல் சிறு நஷ்டம் அடைவீர்கள். தந்தையின் ஆரோக்கியத்தில் சிக்கல் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த எண்ணங்கள் கவலையை ஏற்படுத்தும். வாழ்க்கையில் சந்தித்த முக்கிய நபரை பிரிய வேண்டிய சூழல் ஏற்படும். சகோதரர்கள் வாகன விபத்தில் சிக்க நேரிடும். கவனத்தோடு இருக்க வேண்டும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும்.  நன்மதிப்பிற்கு பங்கம் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே, ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். எதிலும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மறதி!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 4

வாழ்க்கையில் சந்தித்த முக்கிய நபரை பிரிய வேண்டிய சூழல் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 30.03.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

வேலை செய்யும் இடத்தில் நிறைய போட்டி இருக்கும். ஆனால், அதையெல்லாம் சாமாளிச்சி பாராட்டு பெறுவீர்கள். கணவன்-மனைவி உறவில் அன்பு அதிகரிக்கும். பணவரவு உண்டு. மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும்.எல்லா செயலும் சுறுசுறுப்புடனும், தைரியத்துடனும் ஈடுபடுவீர்கள். பல நாட்களாக இழுத்தடித்த சுபகாரியம் நல்ல முறையில் நடைபெறும். சிலருக்கு கடிதம் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். பணியிடத்தில் சகபணியாளர்களுக்கு பக்கபலமாக இருப்பீர்கள். உறுதி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

வாழ்க்கையில் சந்தித்த முக்கிய நபரை பிரிய வேண்டிய சூழல் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 30.03.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

மேலிடத்திடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். எதிர்பாலினத்தவரிடம் வீண் வாக்கவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் சார்ந்த பயணத்தால் அலைச்சல் உருவாகும். வாழ்க்கை துணையால் குடும்பத்தில் பிரச்சனை வரும். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். மருத்துவ செலவுகள் உருவாகும். பயணத்தின் போது விலையுயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசும்போது சற்று கவனத்தோடு பேசுங்கள். பகை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

வாழ்க்கையில் சந்தித்த முக்கிய நபரை பிரிய வேண்டிய சூழல் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 30.03.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

பெரிய வள்ளல் போல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிவிடாதீர்கள், அப்பறம் அவஸ்தை பட வேண்டிருக்கும். தாய்மாமன் உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு ஜாக்கிரதை. வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். மேலதிகாரிகள் உங்களின் பணித்திறனை பார்த்து பாராட்டுவார்கள். திருமண முயற்சிகளில் ஈடுபட அனுகூலமான நாள். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை உண்டாகும்.  அநாவசியமாக தெரியாதவர்களிடன் பேச வேண்டாம். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பரிவு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

வாழ்க்கையில் சந்தித்த முக்கிய நபரை பிரிய வேண்டிய சூழல் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 30.03.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

பணியிடச்சூழல் சுமூகமாக இருக்கும். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காதலர்களுக்குள் இருந்த கருத்துவேறுபாடு நீங்கி, மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். செய்த தவறை உணரும் நாள். நிதி நிலை நன்றாக இருக்கும். குடும்பச் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் அற்புதமாக இருக்கும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் வழியில் நல்ல செய்தி வரும். பிரீதி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

வாழ்க்கையில் சந்தித்த முக்கிய நபரை பிரிய வேண்டிய சூழல் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 30.03.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

பொருளாதாரத்தை பொறுத்த வரை அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படலாம். அனைவரிடமும் அன்பாகவும் பணிவாகவும் நடந்துக் கொள்வீர்கள். துணையின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களுடன் வெளியில் செல்ல வாய்ப்பு கிடியக்கும். கடன் பிரச்சனை குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மன நிம்மதி அடைவார்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். இருப்பினும், பெரிய அளவிலான பண முதலீட்டை தவிர்ப்பது நல்லது. வாழ்வு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

வாழ்க்கையில் சந்தித்த முக்கிய நபரை பிரிய வேண்டிய சூழல் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 30.03.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு தாராளமாக கிடைக்கும். பணியிடத்தில் கொடுத்த வேலைகளை கனகச்சிதமாக முடிப்பீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொலைதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணவிஷயத்தில் ஏமாற வாய்ப்புள்ளது. சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். வீட்டில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

வாழ்க்கையில் சந்தித்த முக்கிய நபரை பிரிய வேண்டிய சூழல் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 30.03.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். விட்டுக்கொடுத்து போகும் அணுகுமுறையால் குடும்பத்திலும், பிற இடத்திலும் உங்களின் மதிப்பு உயரும். பணப்புழக்கம் அமோகமாக இருக்கும். சேமிப்பு உயரும். சிலருக்கு அரசியல் சார்ந்த நபர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். துணையுடன் வெளியில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். காப்பீடு சார்ந்த விஷயங்களில் அனுகூலமான பலன் கிடைக்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்