Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நண்பர்களே எதிரியாக மாறக்கூடிய நாள்.. பேச்சில் கவனம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.04.2023

Nandhinipriya Ganeshan Updated:
நண்பர்களே எதிரியாக மாறக்கூடிய நாள்.. பேச்சில் கவனம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.04.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 05 ஆம் நாளுக்கான [18 ஏப்ரல் 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

நண்பர்களே எதிரியாக மாறக்கூடிய நாள்.. பேச்சில் கவனம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.04.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

வியாபாரம் சார்ந்த அலைச்சல்கள் உண்டாகும். திடீர் ஆன்மீக நாட்டம் ஏற்படும். அரசு தொடர்பான காரியங்களில் சில விரயங்கள் வரலாம். பணியிடத்தில் போட்டி அதிகரிக்கும். ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். வழக்குகளில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். கடன் வாங்க வேண்டாம். பணவரவு சுமாராக இருக்கும். வீண் செலவுகளை தவிர்க்கவும். நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும். குடும்பத்தினருடன் பேசும் போது வார்த்தையில் கவனம் தேவை. போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 3

நண்பர்களே எதிரியாக மாறக்கூடிய நாள்.. பேச்சில் கவனம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.04.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

தள்ளிப்போன காரியங்கள் நடந்து முடியும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராமல் செய்த உதவியால் சமூகத்தில் மரியாதை கிடைக்கும். நீண்ட நாள் நண்பர்களை சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும். தொழில் நிமிர்த்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். துணையுடன் இருந்து வந்த மனக்கசப்பு முடிவுக்கு வரும். தூரத்து சொந்தங்களால் நற்செய்தி கிடைக்கும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 1

நண்பர்களே எதிரியாக மாறக்கூடிய நாள்.. பேச்சில் கவனம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.04.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

வியாபாரத்தில் எதிர்பாரா லாபம் கிடைக்கும். கடனாக கொடுத்த பணம் வசூலாகும். சிலருக்கு புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியிடத்தில் மற்றவர்களின் வேலையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் வரும். இருந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். தொலைதூர பயணங்களை தவிர்க்கவும். துணையின் விருப்பதை நிறைவேற்றி வைப்பீர்கள். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 8

நண்பர்களே எதிரியாக மாறக்கூடிய நாள்.. பேச்சில் கவனம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.04.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

குடும்பத்தில் அமைதி உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில அனுபவங்களின் மூலம் தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் கீழ்பணிபுரிபவர்களால் ஆதாயம் உண்டு. விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. அசதி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

நண்பர்களே எதிரியாக மாறக்கூடிய நாள்.. பேச்சில் கவனம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.04.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

சந்தேக புத்தியால் நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டாகும். மற்றவர்களை நம்பி வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். எளிமையான பணிகள்கூட தாமதமாகும். புதிய நபர்களால் குடும்பத்தில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பணியிடத்தில் சகஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். எதிர்பாரா பணவரவுக்கு வாய்ப்புண்டு. நினைத்தது நடக்க இழுத்தடிக்கும். தனம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 5

நண்பர்களே எதிரியாக மாறக்கூடிய நாள்.. பேச்சில் கவனம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.04.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

சகோதர்களின் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சில காரியங்களில் காரிய தடை வரலாம். எதிர்பாலினத்தவரால் புதிய பிரச்சனையில் சிக்குவீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். சிலர் விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகஊழியர்களால் அனுகூலம் உண்டு. திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். காதலர்களுக்கு இடையில் புதிய நபரால் பிரச்சனை வரும். கவனம் தேவை. அதிக பணம் முதலீடு செய்வதை தவிர்க்கவும். அச்சம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 3

நண்பர்களே எதிரியாக மாறக்கூடிய நாள்.. பேச்சில் கவனம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.04.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

திறமைகளை வெளிபடுத்தி பாராட்டு பெறுவீர்கள். கலை சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். தொழிலுக்கு எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். தாய்வழி பந்தங்களால் குடும்பத்தில் புதிய பிரச்சனை வரும். வார்த்தையில் கவனம். சிலருக்கு கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நீண்ட நாள் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். திருமண வாழ்க்கை சிறப்பு. பிள்ளைகளால் வீண்செலவுகள் ஏற்படும். பணவிஷயத்தில் எச்சரிக்கை வேண்டும். மலைசார்ந்த இடங்களுக்க செல்ல வேண்டாம். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 1

நண்பர்களே எதிரியாக மாறக்கூடிய நாள்.. பேச்சில் கவனம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.04.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

மின்சாரம் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை வேண்டும். உறவினர்களின் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். நுட்பமான சில விஷயங்களை புரிந்துக் கொள்வீர்கள். அனைத்து காரியங்களையும் சுறுசுறுப்புடன் ஆற்றுவீர்கள். வியாபாரிகள் பணவிஷயத்தில் மற்றவர்களை நம்ப வேண்டாம். சிலருக்கு விருப்பங்கள் நிறைவேறுவதில் தடை வரும். வாகனத்தில் செல்லும்போது பொறுமை முக்கியம். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

நண்பர்களே எதிரியாக மாறக்கூடிய நாள்.. பேச்சில் கவனம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.04.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. நீண்ட நாட்களாக காத்திருந்த ஒரு விஷயம் ஏமாற்றத்தை தரும். சிலருக்கு வீடு, மனை சார்ந்த முதலீடுகளில் ஆர்வம் ஏற்படும். மேலதிகாரிகளுக்கு உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். கூர்மையான ஆயுதங்களை கையாளும்போது ஜாக்கிரதை. புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும்போது நிதானம் வேண்டும். ஏமாற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

நண்பர்களே எதிரியாக மாறக்கூடிய நாள்.. பேச்சில் கவனம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.04.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

பாகப்பிரிவினை சார்ந்த முயற்சிகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறிகள் விலகும் நாள். குடும்பத்துடன் ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சனை முடிவுக்கு வரும். உங்க வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். சிலருக்கு விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாரா பணவரவு வாய்ப்புண்டு. நண்பர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வைப்பீர்கள். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

நண்பர்களே எதிரியாக மாறக்கூடிய நாள்.. பேச்சில் கவனம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.04.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்படும். நீங்க அனுசரித்துக் கொள்வது உத்தமம். பணியிடத்தில் சகஊழியர்களால் பிரச்சனை தோன்றி மறையும். வியாபாரத்தில் இருந்த மந்த தன்மை விலகி, லாபம் மிகும். உறவினர்களால் இன்பச் செய்தி வந்து சேரும். நீண்ட நாள் கழித்து நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

நண்பர்களே எதிரியாக மாறக்கூடிய நாள்.. பேச்சில் கவனம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.04.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்துக் கொள்ளவும். எதிலும் முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். சிலருக்கு எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயரதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. நண்பர்களே எதிரியாக மாறக்கூடிய நாள். எனவே, எதை பேசுவதாக இருந்தாலும் வார்த்தையில் நிதானம் தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் செலுத்தவும். பகை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்:  3


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்