Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

இன்னைக்கு தொழிலில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டியவங்க நீங்க தான்..! | 08.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Gowthami Subramani Updated:
இன்னைக்கு தொழிலில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டியவங்க நீங்க தான்..! | 08.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 25 ஆம் நாளுக்கான [08 மே 2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 06.30 – 07.30 வரை

மாலை: 04.30 – 05.30 வரை

இன்னைக்கு தொழிலில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டியவங்க நீங்க தான்..! | 08.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

நீங்கள் நினைத்த காரியங்கள் நடக்க சற்று தாமதமாகலாம். உறுதியான வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். உத்தியோகப் பணிகளில் நீங்கள் எதிர்பாராத சில பொறுப்புகளில் அமர்த்தப்படுவீர்கள். எனவே, அலைச்சல் உண்டாகலாம். உடன்பிறந்தவர்களால் சிறு கருத்து வேருபாடுகள் ஏற்படலாம். அமைதியுடன் இருப்பது நல்லது. கடன் வாங்குவது தொடர்பான பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பயனற்ற சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. உடனிருப்பவர்களால் நன்மை உண்டாகும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இன்னைக்கு தொழிலில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டியவங்க நீங்க தான்..! | 08.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

பொருளாதாரம் தொடர்பாக ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் நடக்கிறது. புதிய நபர்களின் அறிமுகம் நன்மையைத் தரும். புது இலக்குகளை உருவாக்கி அதனை அடையும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். இருப்பினும் சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்களின் ஆதரவால் நன்மை உண்டாகும். உடல் நலத்தில் சிறப்பு கவனம் தேவை. நண்பர்களின் ஆதரவால் அனுகூலம் கிடைக்கும். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

இன்னைக்கு தொழிலில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டியவங்க நீங்க தான்..! | 08.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

மனதில் மகிழ்ச்சி உண்டாகும் நாள். இருந்த கடன் பிரச்சனைகள் அனைத்தும் குறையும். வாகன மாற்றம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்களது செல்வாக்கு அதிகரிக்கும். பயணங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். சிந்தனைகளில் உங்களுக்கு இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் புதிய மாற்றம் உண்டாகும் நாள். உடல் நலம் சிறப்பாக உள்ளது. புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இன்னைக்கு தொழிலில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டியவங்க நீங்க தான்..! | 08.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். பொருளாதார வரவு மேம்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்களால் சில எதிர்பாராத உதவிகளைப் பெறுவீர். புதிய நபர்களின் அறிமுகம் நன்மையை உண்டாக்கும். நுட்பமான சில விஷயங்களைப் புரிந்து கொள்வதன் மூலம் நன்மை பெறுவீர்கள். தொழிலில் நீங்கள் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய திட்டங்களால் அலைச்சல்கள் ஏற்படும். கணவன், மனைவியிடையே இருந்து வந்த நெருக்கம் அதிகரிக்கும். சாந்தம்!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இன்னைக்கு தொழிலில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டியவங்க நீங்க தான்..! | 08.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். பெற்றோர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வதால் நன்மை கிடைக்கும். பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்த்தவை நடக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அவ்வப்போது எழும். வரவு தாராளமாக இருந்தாலும், அதற்கேற்ற செலவுகள் ஏற்படலாம். எனவே, சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை. மாணவர்கள், கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். . களிப்பு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இன்னைக்கு தொழிலில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டியவங்க நீங்க தான்..! | 08.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு அடைவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கலில் எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் நினைத்த காரியங்களை எளிதில் முடிப்பீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கலாம். தோற்றத்தில் சிறிய மாற்றங்கள் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை. எல்லாவற்றிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. தீவிரமாக ஆழ்ந்து சிந்தித்து செயல்படுவது சிறப்பு பயம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இன்னைக்கு தொழிலில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டியவங்க நீங்க தான்..! | 08.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

குடும்பத்தில் ஏற்பட்ட சிறு சிறு விவாதங்கள் நீங்கி விடும். புதிய நண்பர்கள் கிடைப்பர். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சாதுரியமான பேச்சுக்களால் அனுகூலம் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் மேன்மை அடைவீர்கள். அலைச்சல் உண்டாகலாம். பொருளாதார வரவு மேம்படும். எனினும், சிக்கனத்துடன் செலவு செய்வது நல்லது. மற்றவர்களுக்கு உதவி செய்வதால் நன்மை கிடைக்கும். எதிர்பாராத சில காரியங்களை விரைவில் செய்து முடிப்பீர்கள். உதவி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4

இன்னைக்கு தொழிலில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டியவங்க நீங்க தான்..! | 08.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

இழுபறியான கடன்கள் அனைத்தும் விலகும். தனவரவுகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நெருக்கமான சில நண்பர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். சேமிப்பு தொடர்பான பிரச்சனைகள் விலகி சேமிப்பதில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதற்றமின்றி, நிதானத்துடன் செயல்படுவது நல்லது. எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிப்பதுடன் லாபம் உண்டாகும். கடன் கொடுப்பதில் கவனம் தேவை. லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இன்னைக்கு தொழிலில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டியவங்க நீங்க தான்..! | 08.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

பூர்வீக சொத்துக்களால் இருந்த அலைச்சல்கள் அனைத்தும் விலகும். கணவன், மனைவியிடையே இருந்து வந்த பிரச்சனைகள் விலகி நெருக்கம் அதிகரிக்கும். எளிமையான விஷயங்கள் கூட தாமதமாக முடியலாம். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. விரயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. புதிய நண்பர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்த்த மதிப்பும், மரியாதையும் பெறுவீர். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இன்னைக்கு தொழிலில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டியவங்க நீங்க தான்..! | 08.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

உறவினர்களால் நன்மை பெறுவீர்கள். கணவன், மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் விலகுவதுடன், நன்மைகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்களால் அதிக நன்மை பெறுவீர்கள். தெளிவான முடிவு எடுப்பதில் கவனம் தேவை. கடன் கொடுப்பதில் ஏமாற வாய்ப்புண்டு. உதவி செய்வதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. உடல் நலத்தில் சிறப்பு கவனம் தேவை. மாணவர்கள் உயர்கல்வியில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். இன்று பொருளாதாரத்தில் ஏற்றம் அடைவீர்கள். யோகம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இன்னைக்கு தொழிலில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டியவங்க நீங்க தான்..! | 08.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

புதிய தொழில் தொடர்பான சிந்தனைகள் வெற்றி பெறலாம். சாதகமான முயற்சிகளால் நன்மைகள் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் விலகி நன்மைகள் உண்டாகும். முதலீடு செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. கலை சார்ந்த பணிகளில் அதிக ஈடுபாட்டுடன் காணப்படுவீர்கள். வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, கவனத்துடன் செயல்படுவது நல்லது. செலவு!

அதிர்ஷ்ட நிறம்: இள ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 5

இன்னைக்கு தொழிலில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டியவங்க நீங்க தான்..! | 08.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

பணியிடத்தில் போட்டியுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். ஆன்மீக பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்களின் நட்பு வட்டாரங்கள் பெருகும். பூர்வீக சொத்துக்களால் நன்மைகள் உண்டாகும். தடைபட்ட காரியங்களை விரைவில் செய்து முடிப்பீர்கள். புதிய வீடு வாங்குவது தொடர்பான விஷயத்தில் சிந்தித்து செயல்படுவது சிறப்பு. தனவரவு மேம்பாடு அடையும். எல்லாவற்றிலும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்