Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த ராசியினர் கடன் கொடுப்பதையோ வாங்குவதையோ தவிர்க்க வேண்டும். | Tomorrow Rasi Palan in Tamil | 11.05.2023

Nandhinipriya Ganeshan Updated:
இந்த ராசியினர் கடன் கொடுப்பதையோ வாங்குவதையோ தவிர்க்க வேண்டும். | Tomorrow Rasi Palan in Tamil | 11.05.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 28 ஆம் நாளுக்கான [11 மே 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 10.30 - 11.30 வரை

மாலை: இல்லை

சந்திராஷ்டமம்: மிருகசீருஷம், திருவாதிரை

இந்த ராசியினர் கடன் கொடுப்பதையோ வாங்குவதையோ தவிர்க்க வேண்டும். | Tomorrow Rasi Palan in Tamil | 11.05.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

வியாபாரத்தில் பணியாளர்களாலும், பங்குதாரர்களாலும் சில சங்கடங்களை சமாளிக்க வேண்டி வரும். எதிர்பார்த்ததை விட பணவரவு சற்று குறைவாகவே இருக்கும். அனாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. நினைத்த காரியம் நிறைவேறுவதில் தாமதம் வரும். துணையுடன் பேசும் பேச்சில் கவனம் தேவை. வயிறு சம்பந்தமான பிரச்சனை வரலாம். உணவு முறையில் கவனம் செலுத்தவும். எதிர்பாலினத்தவரால் புது மாற்றங்கள் நிகழும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

இந்த ராசியினர் கடன் கொடுப்பதையோ வாங்குவதையோ தவிர்க்க வேண்டும். | Tomorrow Rasi Palan in Tamil | 11.05.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

பண வரவுகளும் தேவைக்கேற்றபடி இருக்கும். தந்தைவழி உறவுகளால் சங்கடம் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சொந்தக்காரர் வழியில் இன்ப செய்திகள் வரும். நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 8

இந்த ராசியினர் கடன் கொடுப்பதையோ வாங்குவதையோ தவிர்க்க வேண்டும். | Tomorrow Rasi Palan in Tamil | 11.05.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். குடும்பப் பெரியவர்களிடம் பேசும்போது பொறுமை மிக அவசியம். வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். பணியிடத்தில் அதிகாரிகளால் சில சங்கடங்கள் உண்டாகும். செய்யும் வேலையில் அதிகம் கவனம் தேவை. கடன் கொடுப்பதையோ வாங்குவதையோ தவிர்ப்பது நல்லது. போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 3

இந்த ராசியினர் கடன் கொடுப்பதையோ வாங்குவதையோ தவிர்க்க வேண்டும். | Tomorrow Rasi Palan in Tamil | 11.05.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் சில மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வார்த்தையில் கவனம் தேவை. முதலீடுகள் செய்வதை தள்ளிப் போடுவது நல்லது. கோப்புகள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. பணிச்சுமை அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் பணம் சம்பந்தமாக பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சலனம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 1

இந்த ராசியினர் கடன் கொடுப்பதையோ வாங்குவதையோ தவிர்க்க வேண்டும். | Tomorrow Rasi Palan in Tamil | 11.05.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும். உயர் பதவியில் இருப்பவர்கள் பணியாளர்களிடம் பொறுமையாக நடந்துக் கொள்ளவும். வியாபாரத்தில் பணம் வசூலாவதில் இழுபறிகள் வரும். தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வாகனத்தில் செல்லும்போது நிதானத்தை கடைப்பிடிக்கவும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 9

இந்த ராசியினர் கடன் கொடுப்பதையோ வாங்குவதையோ தவிர்க்க வேண்டும். | Tomorrow Rasi Palan in Tamil | 11.05.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். கடன் தொல்லை பற்றிய மன சஞ்சலங்கள் நீங்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாள். சிலருக்கு எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும். மலை சார்ந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டிய நாள். நினைத்தது நிறைவேறும். உதவி!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த ராசியினர் கடன் கொடுப்பதையோ வாங்குவதையோ தவிர்க்க வேண்டும். | Tomorrow Rasi Palan in Tamil | 11.05.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சாதூரியமான பேச்சால் காரியங்கள் கைகூடும். மனைவி வழி பந்தங்களால் ஆதாயம் உண்டு. நீண்ட நாட்களாக மனதை உறுத்திக்கொண்டிருந்த குழப்பம் நீங்கும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். விலங்குகளால் ஆபத்து வரலாம், ஜாக்கிரதையாக இருக்கவும். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசியினர் கடன் கொடுப்பதையோ வாங்குவதையோ தவிர்க்க வேண்டும். | Tomorrow Rasi Palan in Tamil | 11.05.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

அனைவரிடமும் அன்பாகப் பழகுவீர்கள். சிறுசிறு இடையூறுகளைச் சந்திக்க நேர்ந்தாலும் எல்லா பணிகளையும் திறம்படச் செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சுபச் செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

இந்த ராசியினர் கடன் கொடுப்பதையோ வாங்குவதையோ தவிர்க்க வேண்டும். | Tomorrow Rasi Palan in Tamil | 11.05.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

கடன்கள் குறையும். புதிய மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகமும் உண்டாகும். பணியிடத்தில் இக்கட்டான சூழலை சமாளிக்க சகஊழியர்களின் உதவி கிடைக்கும். நண்பர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை மேம்படும். பெண்களுக்கு நினைத்த காரியங்களை நிறைவேற்ற வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாட்களாக சந்திக்காமல் இருந்த காதலர்கள் சந்திக்க வாய்ப்புண்டு. சுபநிகழ்ச்சிகளில் பங்குக்கொள்வீர்கள். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த ராசியினர் கடன் கொடுப்பதையோ வாங்குவதையோ தவிர்க்க வேண்டும். | Tomorrow Rasi Palan in Tamil | 11.05.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

மாலையில் குடும்பத்துடன் உற்சாகமாகப் பேசி மகிழ்வீர்கள். எதிரிகள் பணிந்து போவார்கள். எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். புதிய வாடிக்கையாளர் வருகையால் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசியினர் கடன் கொடுப்பதையோ வாங்குவதையோ தவிர்க்க வேண்டும். | Tomorrow Rasi Palan in Tamil | 11.05.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

தொழிலில் முதலீடுகள் செய்ய ஏற்ற நாள். பொருளாதார பிரச்சனைகள் சரியாகும். முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். திடீர் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி சூழல் நிலவும். நீண்ட நாட்களாக கண்ட கனவுகள் நினைவாகும். சிலருக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும். புதிய முயற்சிகள் அனுகூலப் பலன் தரும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை பலப்படும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

இந்த ராசியினர் கடன் கொடுப்பதையோ வாங்குவதையோ தவிர்க்க வேண்டும். | Tomorrow Rasi Palan in Tamil | 11.05.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். மற்றவர்களிடம் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம். சிலர் நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபரை சந்திப்பீர்கள். எதிர்பாரா பணவரவுக்கு வாய்ப்புள்ளது. சகோதரனால் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே நடைபெறும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தள்ளிப்போடவும். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: மயில் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 1


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்