Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நடப்பவை அனைத்தும் உங்களுக்கு சாதமாகவே இருக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.05.2023

Nandhinipriya Ganeshan Updated:
நடப்பவை அனைத்தும் உங்களுக்கு சாதமாகவே இருக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.05.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம் 01 ஆம் நாளுக்கான [0151 மே 2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 06.30 - 07.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

நடப்பவை அனைத்தும் உங்களுக்கு சாதமாகவே இருக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.05.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

நீண்ட நாட்களாக பொன், பொருள் வாங்கும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இன்றைய தினம் வாங்குவீர்கள். சுபகாரியம் சம்பந்தமான முயற்சிகள் ஈடேறும். புதிய நபரின் சந்திப்பு ஏற்படும். பணியிடத்தில் உங்க திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். வியாபாரத்தில் வருமானம் சுமாராக தான் இருக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். இழுபறியாக இருந்த கடன் வசூலாகும். அனைவரிடமும் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். நன்மை!

நடப்பவை அனைத்தும் உங்களுக்கு சாதமாகவே இருக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.05.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

அதிர்ஷ்டமான நாள். எந்த காரியத்தையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். நடப்பவை அனைத்தும் உங்களுக்கு சாதமாகவே இருக்கும். வியாபாரத்தில் அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையால் சூப்பரான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. வெற்றி!

நடப்பவை அனைத்தும் உங்களுக்கு சாதமாகவே இருக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.05.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

முன்னேற்றகரமான நாளாக இருக்கும். எந்த காரியத்திலும் தைரியமாகவும், உறுதியாகவும் இருப்பீர்கள். பணியிடத்தில் இதுவரை இருந்துவந்த மந்தநிலை நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழிலில் புதிய யுக்தியை கையாண்டு லாபத்தை ஈட்டுவீர்கள். வங்கி கணக்கில் சேமிப்பு உயரும். பாடாய் படுத்திய கடன் தொல்லையில் இருந்து விடிவுகாலம் கிடைக்கப்பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். யோகம்!

நடப்பவை அனைத்தும் உங்களுக்கு சாதமாகவே இருக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.05.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

பணியிடத்தில் எல்லா வேலைகளையும் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். எடுக்கும் புதிய முயற்சிகளின் உடனிருப்பவர்களை அனுசரித்து போவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்து மூலமாக அனுகூலப் பலன் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டிய நாள். குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆதாயம்!

நடப்பவை அனைத்தும் உங்களுக்கு சாதமாகவே இருக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.05.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

எதிலும் வெற்றி தோல்வி என்பது முக்கியமல்ல, முயற்சி செய்வதே முக்கியமானது. அதன்படி, தோற்றுவிடுவோமோ என்று எண்ணாமல் எதிலும் துணிந்து இறங்குங்கள். அதுவே உங்களின் வெற்றி. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். வெற்றி உங்க பக்கம் தான். உங்க குடும்ப விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். அனைவரிடமும் அன்பாக நடந்துக்கொள்வீர்கள். சிலருக்கு வீடு, மனை வாங்கும் அதிர்ஷ்டம் உண்டு. ஆர்வம்!

நடப்பவை அனைத்தும் உங்களுக்கு சாதமாகவே இருக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.05.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க சிறந்த நாள். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய வீடு, மனை வாங்கும் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். சிலருக்கு பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வும் ஏற்படும். கணவன்-மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். பத்திரம் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். மகிழ்ச்சி!

நடப்பவை அனைத்தும் உங்களுக்கு சாதமாகவே இருக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.05.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

மிகவும் அனுகூலமான நாள். விருப்பங்கள் நிறைவேறும். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். திருமண வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். சுய தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் காண்பீர்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் பண சம்பந்தமான விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். லாபம்!

நடப்பவை அனைத்தும் உங்களுக்கு சாதமாகவே இருக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.05.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

பதட்டமும் கவலையும் காணப்படும். எந்த செயலிலும் புத்தியை பயன்படுத்தி செயலாற்றுவது அனுகூலப் பலன்களை பெற்று தரும். பணிச்சுமை அதிகரித்து காணப்படும். உயர் பதவியில் இருப்பவர்கள் பணியாளர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்க்கவும். சில விஷயங்களை துணையுடன் பகிர்ந்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. பங்கு வர்த்தகம் மூலம் பணவரவு கிடைக்கப் பெறுவீர்கள். இருப்பினும் செலவும் அதிகரிக்கும். செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரம் சுமாராக தான் இருக்கும். பொறுமை!

நடப்பவை அனைத்தும் உங்களுக்கு சாதமாகவே இருக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.05.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

புதிய முயற்சிகள் வெற்றிகளை தேடி கொடுக்கும். எந்த காரியத்திலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. ரொம்ப நாட்களாக இழுபறியாக இருந்த கடன் கைக்கு வரும். சிலருக்கு தாங்கள் ஆசைப்பட்ட வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். இதனால், சுபசெலவுகள் அதிகரித்து காணப்படும். உறவினர்களுடன் வியாபாரம் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சேமிப்பு உயரும். சுகம்!

நடப்பவை அனைத்தும் உங்களுக்கு சாதமாகவே இருக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.05.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

சில விஷயங்களில் விளையாட்டுத்தனமாக இருப்பதை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. எந்த காரியத்திலும் ஈடுபடுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்க அனுசரித்து போவது நல்லது. தேவையற்ற செலவுகளால் கவலை ஏற்படும். வியாபாரமும் மந்தமாக தான் இருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எதிர்காலத்தை பற்றிய சிந்தனை வந்துபோகும். பக்தி!

நடப்பவை அனைத்தும் உங்களுக்கு சாதமாகவே இருக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.05.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

உங்களுக்கு பிடித்தமான வேலை வாய்ப்புகள் உங்களை தேடிவரும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் நாள். கனவில் கண்ட ஒருவரை நேரில் சந்திக்கலாம். தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். கணவன் - மனைவி இடையே இருந்துவந்த பிரச்சனை குறையும். பணியிடத்தில் சகபணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்து வகையில் பணவரவு உண்டாகும். சேமிப்பு அதிகரிக்கும். மேன்மை!

நடப்பவை அனைத்தும் உங்களுக்கு சாதமாகவே இருக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.05.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

தடைகளையும் கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும். தொடர்ந்து முயற்சி செய்தால், வெற்றி உங்கள் பக்கம். பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஆனால், பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அவசரமாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாய்ப்புகள் தேடி வரும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். நன்மை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்