Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீண்ட நாட்களாக எண்ணிய காரியம் நிறைவேறும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.07.2023

Nandhinipriya Ganeshan Updated:
நீண்ட நாட்களாக எண்ணிய காரியம் நிறைவேறும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.07.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 05 ஆம் நாளுக்கான [21 ஜூலை 2023, வெள்ளி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 09.15 - 10.15 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

நீண்ட நாட்களாக எண்ணிய காரியம் நிறைவேறும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.07.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

கனவுகள் நனவாகும் நாள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எதிர்பாலினத்தவரால் ஆதாயம் ஏற்படும். பணவரவு அதிகமாகவே இருக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பணியிடத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் பிரச்சனை குறைந்து ஒற்றுமை மேம்படும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

நீண்ட நாட்களாக எண்ணிய காரியம் நிறைவேறும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.07.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

சிறிய முதலீட்டின் மூலம் பெரிய லாபத்தை பார்ப்பீர்கள். புதிய தொழில் தொடங்க நல்ல நாள். நண்பர்களும், குடும்பத்தினரும் உதவியாக இருப்பார்கள். பணவரவு தாராளமாக இருக்கும். கடன் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பெண்களால் ஆதாயம் உண்டு. வெளியூர் பயணங்களின் போது பணம் பத்திரம். முதுகு வலி பிரச்சனை ஏற்படலாம். ஆன்மீக வழிபாடு மனநிம்மதியை கொடுக்கும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

நீண்ட நாட்களாக எண்ணிய காரியம் நிறைவேறும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.07.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

சாதுர்யமான பேச்சால் முன்னேற்றம் ஏற்படும் நாள். பணவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சேமிப்பு கூடும். தானியம் சம்பந்தமான வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். பார்வை சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படும். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 4

நீண்ட நாட்களாக எண்ணிய காரியம் நிறைவேறும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.07.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

கலை சார்ந்த துறையில் வாய்ப்புகள் தேடி வரும். துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. பங்கு வர்த்தகத்தில் கவனத்துடன் செயல்படுவது சிறந்தது. நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். வயதில் மூத்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது அனுகூலப் பலன்களை தரும். சிலருக்கு எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

நீண்ட நாட்களாக எண்ணிய காரியம் நிறைவேறும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.07.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டிய நாள். உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். வாழ்க்கை துணை பற்றிய சிந்தனைகளின் மூலம் குழப்பம் தோன்றி மறையும். பணியிடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. செலவுகள் மிகுந்த நாளாக இருக்கும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

நீண்ட நாட்களாக எண்ணிய காரியம் நிறைவேறும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.07.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். உடல் அளவில் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பணியிடத்தில் சகஊழியர்களின் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் குறையும். கடன் சம்பந்தமான விஷயங்களில் பொறுமையுடனும் கவனத்துடனும் செயல்படவும். கணவன்-மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பணவரவு தாராளமாகவே இருக்கும். தெளிவு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

நீண்ட நாட்களாக எண்ணிய காரியம் நிறைவேறும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.07.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

யாருக்கு கடன் கொடுத்தாலும் எழுத்து வடிவில் பரிவர்த்தனை செய்வது நல்லது. பணியிடத்தில் திட்டமிட்டு செயல்பட்டால், அனுகூலப் பலன்களை பெறலாம். சிலருக்கு புதிய தொழில்நுட்ப சாதனம் வாங்கும் யோகம் உண்டு. தூரத்து சொந்தபந்தங்களிடம் இருந்து நற்செய்தி தேடி வரும். காதலில் அன்பு பெருகும். வியாபாரம் பிரமாதமாக நடக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

நீண்ட நாட்களாக எண்ணிய காரியம் நிறைவேறும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.07.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

பணியிடத்தில் கடின உழைப்புக்கு தகுந்து அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருத்தம் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் காலதாமதமாகும். துணையுடன் வீண் வாக்குவாதங்களை குறைத்துக்கொண்டு, அனுசரித்து போவது நல்லது. வீண் செலவுகள் வீடு தேடி வரும். ஆக மொத்தம் சோதனை நிறைந்த நாளாக இருக்கும். தொலைதூர பயணங்களை தவிர்க்கவும். சிரமம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

நீண்ட நாட்களாக எண்ணிய காரியம் நிறைவேறும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.07.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

எதிலும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்துவந்த பிரச்சனை குறையும். சுபகாரியம் சம்பந்தமான விஷயங்களில் தடை வரும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணவரவு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இருக்காது. இருப்பினும், சமாளிப்பீர்கள். களிப்பு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

நீண்ட நாட்களாக எண்ணிய காரியம் நிறைவேறும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.07.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வாய்ப்புகள் தேடி வரும். பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு சகஊழியர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். வாகனத்தில் செல்லும் போது வேகத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உற்பத்தி தொடர்பான துறைகளில் லாபம் மேம்படும். குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

நீண்ட நாட்களாக எண்ணிய காரியம் நிறைவேறும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.07.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

அனைவரிடமும் அனுசரித்து போவது நல்லது. தேவையற்ற விஷயங்களுக்கு கோபப்படுவதை தவிர்த்துவிடுங்கள். அரசு சார்ந்த துறையில் பணிபுரிவோர்களுக்கு பொறுப்பும், அதிகாரமும் அதிகரிக்கும். சிலருக்கு பூர்விக சொத்து மூலம் பணவரவு உண்டு. புதிய முயற்சிகளில் பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். முக்கிய காரியங்களில் நீடித்த தடை, தாமதம் குறையும். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

நீண்ட நாட்களாக எண்ணிய காரியம் நிறைவேறும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.07.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

நீண்ட நாட்களாக எண்ணிய காரியம் நிறைவேறும் நாள். புதிய முயற்சிகள் அதிர்ஷ்டமான பலன்களை தேடி தரும். உறவினர்கள், நண்பர்களின் உதவி கிடைக்கும். பணியிடத்தில் கொடுத்த வேலையை குறித்த செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களுடன் நட்பாக பழகுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிலருக்கு வீடு, நிலம் வாங்கும் யோகமும் உண்டு. சுமாராக சென்று வியாபாரத்தில் திடீர் லாபம் கிடைக்கும். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 2


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்