Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாளைய ராசிபலன் - செவ்வாய்! | Tomorrow Rasi Palan in Tamil | 18.07.2023

Priyanka Hochumin Updated:
நாளைய ராசிபலன் - செவ்வாய்! | Tomorrow Rasi Palan in Tamil | 18.07.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 02 ஆம் நாளுக்கான [18 ஜூலை 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 07.45 - 08.45 மணி வரை

மாலை: 05.00 – 06.00 மணி வரை

நாளைய ராசிபலன் - செவ்வாய்! | Tomorrow Rasi Palan in Tamil | 18.07.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

உத்தியோக பணியில் அதிகாரம் மேம்படும். கல்வியில் நல்ல முன்னேற்றமான சூழல் ஏற்படும். புது மனை வாங்கும் முயற்சி சாதகமாகும். தனவரவில் இருந்த ஏற்றம், இறக்கம் குறையும். சாதுர்யமாக பேசி நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம் 

அதிர்ஷ்ட எண்: 3

நாளைய ராசிபலன் - செவ்வாய்! | Tomorrow Rasi Palan in Tamil | 18.07.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மேம்படும். நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். இழுபறியான செயல்களை எளிதாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நிதானம் மிக முக்கியம். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். எந்த காரியத்திலும் விவேகத்துடன் செயல்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

நாளைய ராசிபலன் - செவ்வாய்! | Tomorrow Rasi Palan in Tamil | 18.07.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நிதானமான செயல்படுவதன் மூலம் உங்கள் மீது நம்பிக்கை மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் அலைச்சல்கள் ஏற்படும். வீடு, மனை விற்பனையால் லாபம் கிடைக்கும். சாதுரியமான பேச்சால் மேம்பாடு உண்டாகும். கவலை! 

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

நாளைய ராசிபலன் - செவ்வாய்! | Tomorrow Rasi Palan in Tamil | 18.07.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

மனதில் ஒரு விதமான குழப்பம், அமைதியின்மை உண்டாகும். வியாபாரம் ரீதியான பயணங்களில் சாதகமான சூழல் அமையும். துரித வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது. பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சாதனை!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம் 

அதிர்ஷ்ட எண்: 5

நாளைய ராசிபலன் - செவ்வாய்! | Tomorrow Rasi Palan in Tamil | 18.07.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

உத்தியோக பணிகளில் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். மற்றங்கள் கருத்துக்களால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சகோதரர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தெரியாத நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். நண்பர்களுக்கு இடையே அனுசரித்துச் செல்லவும். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிந்த மேம்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் நன்மை கிடைக்கும். சினம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

நாளைய ராசிபலன் - செவ்வாய்! | Tomorrow Rasi Palan in Tamil | 18.07.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

சிலருக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்டமான நாள். காலதாமதமான பணிகளை செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

நாளைய ராசிபலன் - செவ்வாய்! | Tomorrow Rasi Palan in Tamil | 18.07.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

சிந்தனைக்களில் இருந்து வந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். துறை சார்ந்த விஷயங்களில் தெளிவு உண்டாகும். தாயார் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். கல்வித்துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விருத்தி!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

நாளைய ராசிபலன் - செவ்வாய்! | Tomorrow Rasi Palan in Tamil | 18.07.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். விவசாயம் சார்ந்த துறையில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்கும் சூழ்நிலை அமையும். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான முயற்சிகளில் பொறுமை வேண்டும். அலைச்சல்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

நாளைய ராசிபலன் - செவ்வாய்! | Tomorrow Rasi Palan in Tamil | 18.07.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். காப்பீடு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வர்த்தக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதையும் சமாளிக்கும் திறன் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தடை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

நாளைய ராசிபலன் - செவ்வாய்! | Tomorrow Rasi Palan in Tamil | 18.07.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் அறிமுகம் கிடைக்கும். முகப்பொலிவுடன் காணப்படுவீர்கள். புது விதமான உணவுகளை உண்டு மனம் மகிழ்வீர்கள்.  சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம் 

அதிர்ஷ்ட எண்: 8

நாளைய ராசிபலன் - செவ்வாய்! | Tomorrow Rasi Palan in Tamil | 18.07.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். இயந்திர பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் பதட்டம் இன்றி செயல்படவும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்  

அதிர்ஷ்ட எண்: 3

நாளைய ராசிபலன் - செவ்வாய்! | Tomorrow Rasi Palan in Tamil | 18.07.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதுவிதமான ஆசைகள் உண்டாகும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சிறு சிறு விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். உலகியல் வாழ்க்கை பற்றிய புரிதலும், புதிய கண்ணோட்டமும் பிறக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். யோகம்!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்