Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எதிர்பாராமல் பணவரவு அதிகரிக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 22.07.2023

Priyanka Hochumin Updated:
எதிர்பாராமல் பணவரவு அதிகரிக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 22.07.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 06 ஆம் நாளுக்கான [22 ஜூலை 2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 07.45 - 08.45 மணி வரை

மாலை: 04.45 – 05.45 மணி வரை

எதிர்பாராமல் பணவரவு அதிகரிக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 22.07.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

செய்யும் செயலில் அனுபவம் வெளிப்படும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் - இறக்கம் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் அதிகரிக்கும். புதிய வேலைக்கான தேடல் பணியை மேற்கொள்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். தடை!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

எதிர்பாராமல் பணவரவு அதிகரிக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 22.07.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

உடல் ஆரோக்கியத்தில் இருந்த தொந்தரவு குறையும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தேவையற்ற சிந்தனைகள் குழப்பத்தை ஏற்படுத்தும். மனதில் சில புது எண்ணங்கள் தோன்றும். சொத்து வாங்குவது குறித்து சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கடனை திரும்ப செலுத்தும் வாய்ப்புகள் உண்டாகும். ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

எதிர்பாராமல் பணவரவு அதிகரிக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 22.07.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். டெக்னாலஜி மீது ஆர்வம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழல் ஏற்படும். அரசு வழியில் மதிப்பு மேம்படும். அக்கம் - பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அனுபவத்தால் தெளிவு ஏற்படும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

எதிர்பாராமல் பணவரவு அதிகரிக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 22.07.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

புது நபர்களின் அறிமுகம் ஏற்படும். இழுபறியாக இருந்து வந்த பணவரவு கிடைக்கும். முகத்தில் பொலிவு அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடம் அன்பு மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம் 

அதிர்ஷ்ட எண்: 6

எதிர்பாராமல் பணவரவு அதிகரிக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 22.07.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பத்திரம் தொடர்பான விஷயத்தில் கவனம் வேண்டும். திறமைக்கான வாய்ப்புகள் தேடி வரும். அதனால் அலைச்சல் உண்டாகும். வியாபாரத்தில் எடுக்கப்போகும் முடிவுகளை ரகசியமாக வைக்கவும். உடன் பிறந்தவர்களிடத்தில் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். அசதி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

எதிர்பாராமல் பணவரவு அதிகரிக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 22.07.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போது கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடி உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். திடீர் பயணத்தால் அலைச்சல் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் பொறுமையுடன் இருக்கவும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: லைட் ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 7

எதிர்பாராமல் பணவரவு அதிகரிக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 22.07.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

தனிப்பட்டு செயல்படும் போது கவனமாக இருக்கவும். தடங்கலாக இருந்த பணிகள் நிறைவுக்கு வரும். நெருக்கமானவர்களின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாறுபட்ட சிந்தனைகள் வந்து போகும். மறதி பிரச்சனைகள் குறையும். பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்து கொள்வீர்கள். காப்பீடு சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

எதிர்பாராமல் பணவரவு அதிகரிக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 22.07.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

நண்பர்களின் ஆலோசனை சில மாற்றத்தை ஏற்படுத்தும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். கால்நடை மீது ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வதால் முன்னேற்றம் ஏற்படும். கடமை உணர்வுகளுடன் எல்லா செயலையும் செய்வீர்கள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். கணவன் - மனைவி இடையே அனுசரித்துச் செல்லவும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

எதிர்பாராமல் பணவரவு அதிகரிக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 22.07.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

நெருக்கமானவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஏற்றம் - இறக்கத்துடன் காணப்படும். சுப நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தடைப்பட்ட பணிகள் நிறைவுக்கு வரும். உத்தியோக பணியில் ஆதரவு கிடைக்கும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

எதிர்பாராமல் பணவரவு அதிகரிக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 22.07.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

மாணவர்கள் கவனத்துடன் செயல் பட வேண்டும். பூர்வீக சொத்துக்களில் விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எந்த முடிவை எடுக்கும் முன்பு யோசித்து செயல்படவும். அரசு வழியில் நெருக்கடி வந்து போகும். விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. குழந்தைகளிடம் அனுசரித்து செல்லவும். நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

எதிர்பாராமல் பணவரவு அதிகரிக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 22.07.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

சுபகாரியம் கைகூடி வரும். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் அதிகமாகும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் எண்ணத்தை புரிந்து கொள்வீர்கள். திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அமையும். தெளிவு!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

எதிர்பாராமல் பணவரவு அதிகரிக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 22.07.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

எதிர்பாராத வரவு வந்து சேரும். மறைமுகமாக இருந்த திறமைகளை வெளிப்படுத்து வாய்ப்பு கிடைக்கும். அரசு பணியில் முன்னேற்றம் ஏற்படும். பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்