Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Aavani Matha Viruchigam Rasi Palan 2022: தொழில், படிப்பு எல்லாத்திலும் சூப்பர்…! ஆனா இந்த ஒரு குறையால ஆபத்து வரலாம்.. கேர்ஃபுலா இருங்க…

Gowthami Subramani August 08, 2022 & 19:30 [IST]
Aavani Matha Viruchigam Rasi Palan 2022: தொழில், படிப்பு எல்லாத்திலும் சூப்பர்…! ஆனா இந்த ஒரு குறையால ஆபத்து வரலாம்.. கேர்ஃபுலா இருங்க…Representative Image.

எந்தவொரு செயலையும் துணிவுடன் செய்யும் விருச்சிக ராசிக்காரர்களே..! நிகழும் இந்த சுபகிருது வருடம் 2022 ஆம் ஆண்டின் ஐந்தாவது தமிழ் மாதமான ஆவணி மாதத்தில் விருச்சிக ராசி நேயர்கள் எந்த விதமான பலன்களைப் பெறப்போகிறார்கள் என்பது பற்றியும் இந்தப் பதிவில் காணலாம்.

விருச்சிகம் ஆவணி மாத ராசிபலன் 2022 (Aavani Matha Viruchigam Rasi Palan 2022)

பொது பலன்: நேர்மைக்குத் தவறாக எதையும் செய்யாதவர்கள் நீங்கள். உங்களுக்கு சனீஸ்வர பகவானின் பார்வைக்கும், ஆளுமைக்கும் உட்படுபவர் நீங்கள். இந்த மாதம் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் நிகழக் கூடிய மாதமாக உள்ளது. நல்ல மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். அதன் மூலம் நல்ல அனுகூலம் கிடைக்கக் கூடிய மாதமாக இந்த மாதம் உள்ளது. வாழ்க்கையில் ஒரு பக்குவத்தை உணர்வீர்கள்.

குடும்ப வாழ்க்கை: சில மாதங்களாக, குடும்பத்தில் எதாவதொரு வகையில் நிகழ்ந்த பிரச்சனை அனைத்துமே விலகி விடும். யாருக்கு எந்த உதவி வேண்டும் என்றாலும், துணிந்து செயல்படுபவர்கள் நீங்கள். விருச்சிக ராசி நேயர்களுக்கு இந்த மாதம் நீங்கள் காதலிப்பவர்களைக் கரம்பிடிக்கும் காலமாக உள்ளது. இன்னும் சிலருக்கு உறவினர்கள் மூலமாக வரன் அமையும். வீட்டில் நிலவி வந்த சிறு சிறு பிரச்சனைகள் விலகும்.

தொழில்: இந்த கால கட்டத்தில், விருச்சிக ராசிக்காரர்கள் தான் அதிகமாக அரசு சார்ந்த வேலைகளில் அமர்வர். போட்டித் தேர்வுகளில் இந்த மாதம் வெற்றியைக் குவித்துத் தள்ளும் ராசிக்காரர்கள் நீங்கள் தான். முன்னோர்கள் விட்டுப்போன தொழில்களை நீங்கள் எடுத்துச் செய்வீர்கள். திடீர் பணவரவுகள் கண்டிப்பாக கிடைக்கும். தள்ளிப்போன வேலைவாய்ப்புகள் அனைத்தும் விரைவாக முடியும் காலம் இது. பொருளாதாரத்தில் நல்ல ஏற்றத்தைக் காண்பீர்கள்.

உடல்நலம்: உணவுக்குழாயில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். இருப்பினும், உடல் நிலை சார்ந்த பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. உடல்நலம் சார்ந்தவற்றில் சிறு விஷயமாக இருந்தாலும், அதில் மிகவும் அதிகமாக கவனம் கொள்வது முக்கியம் ஆகும்.

பரிகாரம்: .மூன்று தேங்காயை வாங்கிக் கொண்டு அதை ஈசான மூலையிலும், வட கிழக்கு மூலையிலும் வைக்க வேண்டும். தேங்காயை மஞ்சளால் கழுவி, குங்குமத்தால் பொட்டு வைத்து, அதனுடன் அருகம்புல் மாலையை வைத்து விட வேண்டும். அந்த மூன்று தேங்காய்களையும் எடுத்து விநாயகர் கோவிலுக்குச் சென்று கற்பூரம் காட்டி அதனை அங்கே விட்டு வர வேண்டும்.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 21, 22, 23 மற்றும் செப்டம்பர் 18, 19

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: வெங்கட்ரமண சுவாமி

 

மேஷம்  ரிஷபம் 
மிதுனம்    கடகம்   
 சிம்மம்      கன்னி    
துலாம்       விருச்சிகம்     
தனுசு          மகரம்     
கும்பம்          மீனம்     

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Aavani Matha Viruchigam Rasi Palan 2022 | Aavani Matha Viruchigam Rasi Palan | Viruchigam Aavani Matha Rasi Palan In Tamil | Aavani Month 2022 Rasi Palan In Tamil | Viruchigam Aavani Matha Rasi Palan | Aavani Matha Viruchigam Rasi Palan 2022 | Viruchigam Aavani Month 2022 Rasi Palan | Viruchigam Aavani Month 2022 Rasi Palan Tamil | Aavani Viruchigam 2022 Rasipalan | Avani Month Viruchigam Rasi Palan 2022 | Aavani Matha 2022 Rasi Palan In Tamil | Aavani Matha Rasi Palan 2022 Viruchigam | விருச்சிகம் ஆவணி மாத ராசிபலன் 2022 | ஆவணி மாத ராசிபலன் 2022 விருச்சிகம்  | ஆவணி மாத ராசிபலன் விருச்சிகம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்