Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை மகிழ்ச்சியையும் மாற்றத்தையும் தரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 09.06.2023

Nandhinipriya Ganeshan Updated:
குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை மகிழ்ச்சியையும் மாற்றத்தையும் தரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 09.06.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம் 26 ஆம் நாளுக்கான [09 ஜூன் 2023, வெள்ளி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 09.30 - 10.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை மகிழ்ச்சியையும் மாற்றத்தையும் தரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 09.06.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டிய நாள். பிள்ளைகள் தந்தையிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். பணியிடத்தில் சகபணியாளர்களின் செயல் கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே, எது பேசினாலும் வார்த்தையில் கவனம் வேண்டும். வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட சண்டை பிரச்சனை தீரும். நண்பர்களால் அலைச்சல் ஏற்படும். சிலரின் சோம்பேறி தனத்தால் முக்கிய விஷயம் கைநழுவி போகும். குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்கவும். பணிவு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை மகிழ்ச்சியையும் மாற்றத்தையும் தரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 09.06.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடன் செய்வீர்கள். கடின உழைப்பிற்கு உண்டான பரிசு கிடைக்கும். பணபுழக்கம் திருப்திகரமாக இருக்கும். பொன், பொருள் சேர்க்கை உருவாகும். பணியிடத்தில் ஏற்படும் சவால்களை ஈஸியாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை செய்யலாம். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். இழுபறியாக இருந்த தனவரவு வந்து சேரும். நீர்நிலை சார்ந்த இடங்களுக்கு செல்ல வேண்டாம். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை மகிழ்ச்சியையும் மாற்றத்தையும் தரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 09.06.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

பணியிடத்தில் கீழ் பணிபுரிவர்களால் பிரச்சனை வரலாம். எதிர்பாராத அலைச்சல்கள் சோர்வை ஏற்படுத்தும். சிலருக்கு எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும். மற்றவர்களிடம் குடும்ப விஷயத்தை பகிர்ந்துக் கொள்ளாமல் இருப்பது உத்தமம். துணையின் முழுமையான கவனிப்பு கிட்டும். வியாபாரத்தில் இருந்துவந்த தடை தாமதம் விலகும். ஃபோன் மூலம் நற்செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். கடன் கொடுப்பத்தை தவிர்க்கவும். சோர்வு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை மகிழ்ச்சியையும் மாற்றத்தையும் தரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 09.06.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

பணியிடத்தில் பணிச்சுமை அதிகரித்து காணப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள். குடும்பத்தில் கருத்துவேறுபாடு காரணமாக புதுப்பிரச்சனை தலைதூக்கும். முடிந்த வரை வாயை திறக்காமல் இருப்பது சிறப்பு. பயணம் செய்யும்போது பணம் விஷயத்தில் ஜாக்கிரதை. வீட்டில் ஒருவருக்கு திடீர் மருத்துவ செலவு ஏற்படும். தந்தையிடம் அனுசரித்து நடந்துக்கொள்ளுங்கள். சினம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை மகிழ்ச்சியையும் மாற்றத்தையும் தரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 09.06.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

நீண்ட நாள் மனதில் இருந்த குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும். தன்னம்பிக்கையுடம் அனைத்து காரியங்களையும் செய்வீர்கள். பணியிடத்தில் சகஊழியர்களின் உதவி கிடைக்கும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. திடீர் விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். எதிரிகள் நண்பர்களாகலாம். புதிய முயற்சிகளில் துணிந்து இறங்குவீர்கள். விலங்குகளிடம் இருந்து தள்ளி இருப்பது நல்லது. ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை மகிழ்ச்சியையும் மாற்றத்தையும் தரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 09.06.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். எழுத்து சம்பந்தமான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான நாள். சிலர் மனதிற்கு பிடித்த இடத்திற்கு செய்ய வாய்ப்பு கிட்டும். பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். பயணம்!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை மகிழ்ச்சியையும் மாற்றத்தையும் தரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 09.06.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

பணியிடத்தில் மற்றவர்களை நம்பாமல், தானே பணிகளை மேற்கொள்வது நல்லது. பணவரவு தாராளமாகவே உள்ளது. சேமிப்பு உயரும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு. ஆரோக்கியம் அற்புதம். சுபநிகழ்ச்சிகளில் பங்குக் கொள்வீர்கள். நெருங்கிய உறவினர் ஒருவரால் நன்மை ஏற்படும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இரவு நேர பயணத்தை தவிர்க்கவும். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை மகிழ்ச்சியையும் மாற்றத்தையும் தரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 09.06.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

யாரிடம் பேசும் போதும் பேச்சில் பொறுமையும், நிதானமும் வேண்டும். எதிர்பாராத செலவுகள் கவலையை தரும். முக்கிய பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்படும். பயணங்களின் போது விலையுயர்ந்த பொருட்களின் மீது கவனம். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். நெருங்கிய நண்பர் ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். இரக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை மகிழ்ச்சியையும் மாற்றத்தையும் தரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 09.06.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

எல்லா பணிகளையும் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தவரால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் புதிய நபரால் மகிழ்ச்சி சூழல் உண்டாகும். இக்கட்டான சூழ்நிலையில் சகஊழியர்களின் உதவி கிடைக்கும். தந்தையின் பேச்சை நடந்துக் கொள்ளவும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை மகிழ்ச்சியையும் மாற்றத்தையும் தரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 09.06.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

அனைவரிடமும் நேர்மையாக நடந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும் நாள். உறவினர்களிடையே இருந்துவந்த பிரச்சனை நீங்கும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்து வைப்பீர்கள். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு உற்சாகத்தை தரும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ளலாம். தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டு. வாகனத்தில் செல்லும் போது நிதானம் வேண்டும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை மகிழ்ச்சியையும் மாற்றத்தையும் தரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 09.06.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

கூட்டு தொழிலில் லாபம் மேம்படும். அனுசரனையான வார்த்தைகளின் மூலம் பிறரை கவர்வீர்கள். தொட்டது துலங்கும் நாள். குழந்தைகளால் பாராட்டு உண்டு. பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். சிலர் நல்ல விஷயங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு விஷயத்தில் நல்ல செய்து வந்து சேரும். உறவினர்கள் வீட்டிற்கு சென்றுவர வாய்ப்புண்டு. கணவன், மனைவி எதார்த்தமாக பேசிக்கொள்வதை தவிர்க்கவும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 4

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை மகிழ்ச்சியையும் மாற்றத்தையும் தரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 09.06.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

பூர்வீக சொத்து விற்பனை தொடர்பாக காரியங்கள் சாதகப் பலனை தரும். நண்பர்களிடம் விளையாட்டான பேச்சை தவிர்ப்பது நல்லது. ஒரு சிலர் மற்றவரை விமர்சிப்பதால் தேவையற்ற இன்னல்களை சந்திக்க நேரிடலாம். தனவரவு திருப்திகரமாகவே இருக்கும். வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். குளிர்ந்த உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 5


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்