Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த 5 ராசியினருக்கும் அமோகமா இருக்கும்.. ஆனா மிதுனத்துக்கு மட்டும்? | 09 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இந்த 5 ராசியினருக்கும் அமோகமா இருக்கும்.. ஆனா மிதுனத்துக்கு மட்டும்? | 09 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 25 ஆம் நாளுக்கான [09 மார்ச் 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்:

காலை: 10.30 - 11.30 வரை

மாலை: இல்லை

இந்த 5 ராசியினருக்கும் அமோகமா இருக்கும்.. ஆனா மிதுனத்துக்கு மட்டும்? | 09 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

உங்கள் விருப்பங்கள் எந்த தடையுமின்றி நிறைவேறும். தொலைத்துரத்தில் இருந்து நல்ல செய்தி உங்களை தேடி வரும். இதனால் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. பணி சம்பந்தமான பயணம் மேற்கொள்வீர்கள். பணப்புழக்கம் சீராக இருக்கும். இருந்தாலும் செலவு செய்யும் போது கவனத்தோடு இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணியிடத்தில் திறமையாக செயல்படுவீர்கள். நண்பர்களுடன் வெளியில் செல்ல வாய்ப்புண்டு. வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 9

இந்த 5 ராசியினருக்கும் அமோகமா இருக்கும்.. ஆனா மிதுனத்துக்கு மட்டும்? | 09 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

குடும்பத்தினரின் நலன் குறித்த எண்ணங்கள் மனதில் அவ்வப்போது வந்துபோகும். எதிர்காலத்தை பற்றிய சிந்தனையால் பணியில் தீவிரமாக இறங்குவீர்கள். நீதிமன்ற வழக்குகள் சாதகமான பலனை கொடுக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்தி வந்தடையும். ஆனால், உங்களிடம் ஏதாவது உதவியை எதிர்பார்ப்பார்கள்.வியாபாரம் சுமாராக தான் இருக்கும். காதலர்களுக்கு இடையில் இருந்த சண்டை முடிவுக்கு வரும். நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும். தெளிவு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இந்த 5 ராசியினருக்கும் அமோகமா இருக்கும்.. ஆனா மிதுனத்துக்கு மட்டும்? | 09 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

ரொம்ப சிந்திப்பதை தவிர்ப்பது நல்லது. பணியில் பதட்டம் காணப்படும். நிதானத்தோடு செயல்பட வேண்டும். குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்கள் காணப்படும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எதிர்பாரா செலவுகள் வரும், பார்த்து பக்குவமாக செலவு செய்யுங்கள். ஆரோக்கியம் சுமாராக இருக்கும். எனவே, உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதால் பெரிய செலவுகளை தவிர்க்க முடியும். தொழில் மந்தமாக தான் இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. பிரீதி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இந்த 5 ராசியினருக்கும் அமோகமா இருக்கும்.. ஆனா மிதுனத்துக்கு மட்டும்? | 09 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

உங்களுடைய அனுசரனையான அணுகுமுறை வெற்றியை தேடி தரும். வீட்டில் ரொம்ப நாட்களாக நின்று போயிருந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். இதனால் மனதில் ஒரு நிம்மதி உண்டாகும். உறவினர், நண்பர்களுடன் சந்தோசமான தருணத்தை அனுபவிப்பீர்கள். பல வாய்ப்புகள் தேடி வரும். சின்ன வாய்ப்பாக இருந்தாலும் புத்திசாலி தனமாக சிந்தித்து அவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள முயற்சிப் பண்ணுங்க. வியாபாரத்தில், தொழிலில் அதிக லாபம் ஈட்டும் நாள். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த 5 ராசியினருக்கும் அமோகமா இருக்கும்.. ஆனா மிதுனத்துக்கு மட்டும்? | 09 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

இலக்குகளை நிர்ணயித்து முயற்சி செய்தால் வெற்றி உங்களுக்கு தான். வேலை செய்யும் இடத்தில் சவால்கள் நிறைய இருக்கும். ரொம்ப கவனத்தோடு நம்பிக்கையோடு பணியை செய்யுங்க. உங்களின் திறமைகளை நீங்களே அறியும் நாள். எதிர்பாராத நேரத்தில் பணஉதவி உங்களை தேடி வரும். தொழில், வியாபாரத்தில் நீங்க நினைத்தபடி லாபம் இருக்கும். புதிய நபரால் அனுகூலம் கிட்டும். தடைப்பட்டு நின்ற சுபக்காரியங்கள் நல்ல முறையில் நடந்து முடியும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இந்த 5 ராசியினருக்கும் அமோகமா இருக்கும்.. ஆனா மிதுனத்துக்கு மட்டும்? | 09 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

பரந்த மனம் உள்ளவராக, நல்லது செய்பவராக இருங்க. இவ்வளவு நாளா நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த ஆசைகள் நிறைவேறும். ஆனால், சில போராட்டங்களுக்கு பிறகே அது சாத்தியம். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் சகஊழியர்கள் உங்களுடைய வேலையை பாராட்டுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். துணையிடம் இருந்த பிரச்சனை விலகி, அன்பு, பாசம் அதிகரிக்கும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த 5 ராசியினருக்கும் அமோகமா இருக்கும்.. ஆனா மிதுனத்துக்கு மட்டும்? | 09 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

வேலை செய்யும் இடத்தில் நல்லபேர் கிடைக்கும். வீட்டில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். எதிர்பாரா செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். எதையும் நம்பிக்கையோடு செய்தால் வெற்றி உங்கள் கையில். எந்த நிலையிலும் பொறுமையை மட்டும் இழந்துவிட கூடாது. இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பணவரவு உண்டு. சேமித்து வைக்க முயற்சி செய்யுங்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத லாபங்கள் உங்கள் மனதை குளிர்விக்கலாம். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இந்த 5 ராசியினருக்கும் அமோகமா இருக்கும்.. ஆனா மிதுனத்துக்கு மட்டும்? | 09 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். குடும்ப பொறுப்புகள் அதிகமாக காணப்படும். கவனக்குறைவால் வேலை செய்யும் இடத்தில் சின்ன சலசலப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. துணையால் குடும்பத்தில் பிரச்சனை ஓங்கும். நீங்க அட்ஜஸ் செய்து கொள்வது உங்களுக்கு நல்லது. வியாபாரம் சுமாராக இருக்கும். தாயின் உடல்நிலையில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. நண்பர்களால் அலைச்சல் ஏற்படும். ஆகமொத்தம் சோதனைமிகுந்த நாள். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த 5 ராசியினருக்கும் அமோகமா இருக்கும்.. ஆனா மிதுனத்துக்கு மட்டும்? | 09 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

குடும்ப வளர்ச்சிக்கான செயல்களை ஆரம்பிக்க சிறந்த நாள். உங்களுடைய திறமையை பயன்படுத்தி பணியில் வெற்றி பெறுவீர்கள். உடன் பணிபுரிவர்கள் உங்களுடைய திறமையை பார்த்து வியந்து பாராட்டுவார்கள். முன்னோர்கள் சொத்து கிடைப்பது பற்றிய செய்தி வந்து சேரும். உங்களுடைய துணை உங்களின் மீது அன்பையும் பாசத்தையும் பொழிந்து தள்ளுவார். நண்பர்களிடம் இருந்து ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்தடையும். வியாபாரத்தில் முதலில் சில தடைகள் வந்தாலும் பின்னர் முன்னேற்றம் காணப்படும் ஜெயம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இந்த 5 ராசியினருக்கும் அமோகமா இருக்கும்.. ஆனா மிதுனத்துக்கு மட்டும்? | 09 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

தன்னம்பிக்கையை அதிகம் வளர்த்துக் கொள்ள வேண்டிய நாள். உங்களுடைய இலக்கை அடைய  கொஞ்சம் கடினமாக உழைக்க நேரிடும். கொடுத்த வேலையை கொடுத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்து மூலம் பண வரவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய செலவுகள் ஏற்படும். திடீர் விருந்தனர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணம் உருவாகும். சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உள்ளது. கனவுகள் நிறைவேரும் நாள். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த 5 ராசியினருக்கும் அமோகமா இருக்கும்.. ஆனா மிதுனத்துக்கு மட்டும்? | 09 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

எதிர்பாரா பணவரவால்,  உடனடி செலவுகளை சமாளிப்பீங்க. எதிர்காலம் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். பணியிடத்தில் சகபணியாளர்களிடம் இருந்த சங்கடம் விலகும். அதிக வேலை காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. துணையின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். சகோதர்களால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் கழித்து பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்புண்டு. மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: மயில் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

இந்த 5 ராசியினருக்கும் அமோகமா இருக்கும்.. ஆனா மிதுனத்துக்கு மட்டும்? | 09 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

எதையும் சரியாக திட்டமிட்டு, நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பெற்றோரிடமும், துணையுடனும் சில விஷயங்களில் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.  வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் இருக்கும். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும். யாருக்காவும் உங்களுடைய முயற்சியை விட்டுக்கொடுக்காதீர்கள். சிலருக்கு தொழில் சார்ந்த பயணங்கள் ஏற்படும். நீண்ட நாள் கழித்து பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். மனதிற்கு பிடித்த பொருளை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். சாந்தம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்