Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொறுமையின் சிகரமாக இருந்தால் வீண் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.. | 11 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
பொறுமையின் சிகரமாக இருந்தால் வீண் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.. | 11 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 27 ஆம் நாளுக்கான [11 மார்ச் 2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்:

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

பொறுமையின் சிகரமாக இருந்தால் வீண் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.. | 11 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளுடன் சின்ன சலசலப்பு ஏற்படும். வார்த்தையில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவரின் அனுசரித்து நடந்து கொள்ளவும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் அனுபவமிகுந்தவர்களிடம் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. எழுத்து சம்பந்தமான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான நாள். வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளவும். சாந்தம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

பொறுமையின் சிகரமாக இருந்தால் வீண் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.. | 11 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

விருப்பங்கள் நிறைவேறும் நாள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பணியிடத்தில் மற்றவர்களை நம்பாமல், தானே பணிகளை மேற்கொண்டால் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தம்பதிகளுக்கு இடையே அன்பு, அரவணைப்பும் அதிகரிக்கும் நாள். பணவரவு தாராளமாகவே உள்ளது. சேமிப்பு உயரும். ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். எதிர்பாரா உறவினர் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

பொறுமையின் சிகரமாக இருந்தால் வீண் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.. | 11 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

வியாபார பணிகளில் பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் செயல்படவும். சுபகாரியம் சம்பந்தமான அலைச்சல்கள் ஏற்படும். பணியிடத்தில் சகஊழியர்களிடம் கோபமாக நடந்துக்கொள்வீர்கள். கணவன்- மனைவிக்கு இடையே அனுசரித்து செல்வது உத்தமம். வர்த்தக பணிகளில் அதிகமாக முதலீடு செய்வதை குறைத்துக் கொள்ளவும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். கோபம்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 5

பொறுமையின் சிகரமாக இருந்தால் வீண் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.. | 11 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழிலில் லாபம் மேம்படும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும், திட்டமிட்டு செயல்படுவது நல்லது. துணையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சனைகள் குறையும். இருப்பினும், செலவுகள் அதிகரிக்கும் நாள். கண் மற்றும் பல் சார்ந்த பிரச்சனை ஏற்படலாம். புதிய உறவுகள் தேடி வருவார்கள். தாய்வழி பந்தங்களால் மனமகிழ் செய்தி வந்து சேரும். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

பொறுமையின் சிகரமாக இருந்தால் வீண் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.. | 11 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

ஏமாற்றம் மிகுந்த நாள், அதனால் அதிகமாக எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். பணியிடத்தில் பணிசுமை அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு புதிய மனை, வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும். பிரீதி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

பொறுமையின் சிகரமாக இருந்தால் வீண் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.. | 11 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பண தேவை பூர்த்தியாகும். சேமிப்பதற்கான வாய்ப்பு உண்டு. உறவினர்களின் ஆதரவு பெருகும். கடினமான காரியங்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இதனால், மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 7

பொறுமையின் சிகரமாக இருந்தால் வீண் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.. | 11 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் பங்குக்கொள்வீர்கள். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். இருப்பினும், சிலருக்கு பழைய நினைவுகளால் மனதில் கவலை குடிக்கொள்ளும். இதை தவிர்க்க ஆன்மீக வழிபாடு செய்ய முயற்சிக்கலாம். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டிய நாள். மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். பணப்புழக்கம் சிறப்பாகவே உள்ளது. உறுதி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

பொறுமையின் சிகரமாக இருந்தால் வீண் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.. | 11 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

பொறுமையின் சிகரமாக இருந்தால் வீண் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். வியாபாரத்தில் தள்ளிப்போன சில வாய்ப்புகள் தேடி வரும். கடன்களை திருப்பி வாங்கும் போது கனிவான பேச்சு அவசியம். துணையுடன் சேர்ந்து நீண்ட நாள் பிரச்சனைக்கு முடிவு எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனக்குறைவால் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. எச்சரிக்கையாக இருங்கள். செலவுகள் அதிகரித்து காணப்படும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3

பொறுமையின் சிகரமாக இருந்தால் வீண் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.. | 11 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

வெற்றியை அடைய வேண்டுமென்றால் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். அதேபோல், எந்த செயலையும் உறுதியுடன் செய்தால் வெற்றி நிச்சயம். வீண் சந்தேகங்களை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்களிடம் உங்க குடும்ப விஷயத்தை பகிர்ந்துக் கொள்ளாமல் இருப்பது உத்தமம். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். எதிர்பாராத பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். தோல் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. பணப்புழக்கம் சுமாராக தான் இருக்கும். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

பொறுமையின் சிகரமாக இருந்தால் வீண் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.. | 11 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். பணியிடத்தில் திறமையாக செயல்பட்டு, மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். உங்க துணையின் வழியில் ஆதரவு கிடைக்கும். பணவரவில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயணங்கள் கைக்கூடும். தொழிலில் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 3

பொறுமையின் சிகரமாக இருந்தால் வீண் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.. | 11 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

எண்ணத்தில் தெளிவு வேண்டும். கண்டதையும் நினைத்து கொண்டு, முக்கியமான காரியங்களில் கோட்டைவிட்டு விட வேண்டாம். பணியிடத்தில் நற்பெயர் சம்பாதிக்க கடினமான உழைக்க வேண்டியிருக்கும். தாராளமான தனவரவின் மூலம் சேமிப்பு மேம்படும். புத்துணர்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழிலில் பெரியவர்களின் உதவி கிடைக்கும். தனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

பொறுமையின் சிகரமாக இருந்தால் வீண் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.. | 11 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

அனுகூலப் பலன்களை அனுபவிக்க எதையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். வார்த்தையில் கவனம் தேவைப்படும் நாள். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் தேடிவரும். அனாவசிய செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். தடங்கல்!

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 8


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்