Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 73,437.01
493.33sensex(0.68%)
நிஃப்டி22,313.45
165.55sensex(0.75%)
USD
81.57
Exclusive

இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் சிக்கல் வரும்.. உஷார்! | 10 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் சிக்கல் வரும்.. உஷார்! | 10 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 26 ஆம் நாளுக்கான [10 மார்ச் 2023, வெள்ளி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்:

காலை: 09.30 - 10.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் சிக்கல் வரும்.. உஷார்! | 10 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

புதிய வாய்ப்புகள் தேடி வரும், பயன்படுத்த மறந்துவிடாதீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த பணஉதவிகள் எளிதில் கிடைக்கும். ஆசைப்பட்ட விஷயம் எதிர்பாராமல் கிடைக்கும். இதனால், நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்ப வாழ்க்கை சிறப்பு. மந்தமாக இருந்த வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வி சார்ந்த முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற பரிசும் பாராட்டும் கிடைக்கும் நாள். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் சிக்கல் வரும்.. உஷார்! | 10 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளுடன் வீண் விவாதங்களை தவிர்த்துக் கொள்ளவும். தந்தை வழி உறவுகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தோடு இருப்பது நல்லது. பெண்கள் மனதிற்கு பிடித்த பொருளை வாங்குவீர்கள். சிலர் வீண் வார்த்தைகள் பேசுவதன் மூலமாக வேண்டாத பகையை தேடிக் கொள்வார்கள். வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். எதிர்பாலினத்தவரால் சிக்கல் உண்டு. வாகனத்தில் செல்லும்போது கவனம். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் சிக்கல் வரும்.. உஷார்! | 10 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதாரத்தை பொறுத்த வரை அற்புதமாக இருக்கும். துணையின் விருப்பப்படி நடந்துக்கொள்வதன் மூலம் நல்லுறவு மேம்படும். சிலருக்கு தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். கடன் பிரச்சனையால் அவதிப்படுவோருக்கு ஆறுதலான நாள். பழைய பாக்கிகள் வசூலாகும். எலியும் பூனையுமாய் இருந்த கணவன் – மனைவிக்குள் நல்ல புரிதல்கள் ஏற்பட்டு அன்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். சுபம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் சிக்கல் வரும்.. உஷார்! | 10 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகவே இருக்கும். எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும். அண்டைவீட்டாரை அனுசரித்து நடந்துக்கொள்ளுங்கள். குடும்பத்தாரிடம் கோபத்தை காட்ட வேண்டாம். பணியிடத்தில் கவனக்குறைவால் தவறுகள் எழ வாய்ப்புள்ளது. பெரிய பிரச்சனையை தவிர்க்க எச்சரிக்கையாக இருங்கள். யாரிடமும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். தேவையற்ற செலவுகள் வரும். ஆக மொத்தம் பிரச்சனை மிகுந்த நாள்.  மலை சார்ந்த இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. பயம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் சிக்கல் வரும்.. உஷார்! | 10 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

எதிர்பாராத உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எண்ணிய பணிகள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். நேர்மறை எண்ணம் கொண்டு செயலாற்றுவது நல்லது. தனிமையாக இருப்பது போன்று உணர்வீர்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர்த்துக்கூடிய நாளாகவும் இருக்கும். தேவையில்லாத சிந்தனை மூலம் தூக்கமின்மை ஏற்படும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். வியாபாரம் சுமாராக தான் இருக்கும். கவலை வேண்டாம் இதுவும் கடந்து போகும். சினம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் சிக்கல் வரும்.. உஷார்! | 10 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

உறவினர்கள், நண்பர்கள் வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பெண்கள் மூலம் அனுகூலப் பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு சிறப்பாக இருந்தாலும் செலவு இருமடங்காக இருக்கும். அனாவசிய செலவை தவிர்க்கவும். தொழிலில் லாபத்தை பெற உழைக்க வேண்டியிருக்கும். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. நினைத்த காரியம் நிறைவேற இழுத்தடிக்கும். நண்பர்களுடன் பிரச்சனை ஏற்படும் நாள், வார்த்தையை கவனமாக கையாள வேண்டும். தனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் சிக்கல் வரும்.. உஷார்! | 10 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

பணியிடத்தில் நேர்மையாக நடந்து, மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். பயிர், மனை இவற்றால் லாபம் ஏற்படும். சிலருக்கு வாழ்க்கையில் புதுப்புது மாற்றங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு கிடைக்கும். குடும்பத்தினர் மத்தியில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். திருமண வாழ்க்கையில் அன்பு, ஒற்றுமையும் ஏற்படும். சில செலவுகள் இருக்கும் ஆனால் பயனுள்ள விஷயத்திற்காகவே இருக்கும். கவலை வேண்டாம். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் சிக்கல் வரும்.. உஷார்! | 10 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

புது நம்பிக்கையும், தைரியமும் ஏற்படுத்தும் நாளாக இருக்கும். சிலருக்கு குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு விலகி, மகிழ்ச்சி அதிகரிக்கும். கடினமான பணிகளையும் எளிதாக முடித்து காட்டுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். சிலருக்கு குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். பணியிடத்தில் திட்டமிட்டபடி பணிகளை செய்து முடிப்பீர்கள். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். சிலரு மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் சிக்கல் வரும்.. உஷார்! | 10 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

தொழில் சம்பந்தமாக நீண்ட நாள் எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த வங்கி கடன் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியாக மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். கவலைப்படுவதையும், உணர்ச்சி வசப்படுவதையும் தவிர்த்து மகிழ்ச்சியான மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். வேலைபளு அதிகமாக இருந்தாலும் உரிய நேரத்தில் முடித்து காட்டுவீர்கள். நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும். மாணவர்கள் ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெற வாய்ப்புண்டு. அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் சிக்கல் வரும்.. உஷார்! | 10 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

பெரியவர்கள் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். சந்தோஷத்திற்கு குறை இருக்காது. தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். எதிர்காலம் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். எந்த காரியத்தையும் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். பணியிடத்தில் சவாலான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உயர் அதிகாரிகளை அனுசரித்து நடந்துக் கொள்ளவும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் சிக்கல் வரும்.. உஷார்! | 10 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

வீட்டில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். வேலை செய்யும் இடத்தில் நல்லபேர் கிடைக்கும். எதிர்பாராத சுபச்செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். எதையும் நம்பிக்கையோடு செய்தால் வெற்றி உங்கள் கையில். எந்த நிலையிலும் பொறுமையை மட்டும் இழந்துவிட கூடாது. இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பணவரவு உண்டு. சேமித்து வைக்க முயற்சி செய்யுங்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனைவிவழி பந்தங்களால் ஆதாயம் ஏற்படும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம் 

அதிர்ஷ்ட எண்: 9

இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் சிக்கல் வரும்.. உஷார்! | 10 மார்ச் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

தந்தை வழி உறவுகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். நேரம் உங்களுக்கு சாதகமானதாக இல்லாததால், மேலதிகாரிகளுடன் வீண் விவாதங்களை தவிர்த்துக் கொள்ளவும். சிலர் வீண் வார்த்தைகள் பேசுவதன் மூலமாக வேண்டாத பகையை தேடிக் கொள்வர். வண்டியில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவும். நினைத்த காரியம் நிறைவேற தடங்கல் ஏற்படும். கூட்டு தொழில் செய்வோர் பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வாக்குறிதிகளை கொடுக்கப்பதை தவிர்க்கவும். ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 2


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்