Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

இந்த ராசிக்காரர்கள் மட்டும் கவனமா இருக்கனும்...! | 06 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Priyanka Hochumin Updated:
இந்த ராசிக்காரர்கள் மட்டும் கவனமா இருக்கனும்...! | 06 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 23 ஆம் நாளுக்கான  [06 மே 2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்:

காலை: 07.30 – 08.30 வரை

மாலை: 03.30 – 04.30 வரை

இந்த ராசிக்காரர்கள் மட்டும் கவனமா இருக்கனும்...! | 06 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். குடும்பம் மற்றும் சொந்த செலவுகளை தெரிந்துக் கொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்வீர்கள். தந்தைவழி தொழிலால் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். பிரபலமானவர்களின் பழக்கத்தால் ஆதாயம் உண்டாகும். இத்தனை நாட்களாக மனதில் இருந்த குழப்பங்களுக்கு பெரியவர்களின் ஆலோசனையால் தெளிவு ஏற்படும். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த ராசிக்காரர்கள் மட்டும் கவனமா இருக்கனும்...! | 06 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

எதிர்காலத்தை பற்றிய சிந்தனைகள் தோன்றும். பயன்கள் செல்வது மூலம் சில மாற்றங்களை உணர்வீர்கள். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களுக்கு அவசியம் இல்லாத இடங்களில் கருத்துக்களை கூறுவதை தவிர்ப்பது நல்லது. தற்போது செய்துக் கொண்டிருக்கும் பணியில் எதிர்பாராத பணவரவு மற்றும் திருப்பம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பை பார்த்து மகிழ்ச்சியடைவீர்கள். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இந்த ராசிக்காரர்கள் மட்டும் கவனமா இருக்கனும்...! | 06 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

இலக்கியம் சார்ந்த பணிகளை செய்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருக்கும் மிகவும் நுணுக்கமான விஷயங்களை கற்று கொள்வீர்கள். பணி மாற்றம் தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். பழைய நினைவுகளால் மனதில் ஏதோ மாற்றம் உண்டாகும். பயணங்களின் மூலம் சில அனுபவங்கள்  கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இந்த ராசிக்காரர்கள் மட்டும் கவனமா இருக்கனும்...! | 06 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

ஆடம்பர பொருட்கள் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். தொழில் தொடர்பான பயணங்களால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். வாகனம் மீதான விருப்பங்களில் மாற்றம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் சற்று குறைவது போல தோன்றும். இருப்பினும் அதிகரிக்காது என்பதால் கவனமாக பணத்தை செலவு செய்ய வேண்டும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இந்த ராசிக்காரர்கள் மட்டும் கவனமா இருக்கனும்...! | 06 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் காண்பீர்கள். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்த உங்களின் திறமைகள் வெளிவரும் வாய்ப்பு உண்டாகும். இத்தனை நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

இந்த ராசிக்காரர்கள் மட்டும் கவனமா இருக்கனும்...! | 06 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

புதிய மனை அல்லது வீடு வாங்குவது தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதால் சில வாய்ப்புகள் அமையும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். கணவன்-மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் சாதுர்யத்தால் இழுபறியான வேலையை செய்து முடிப்பீர்கள். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

இந்த ராசிக்காரர்கள் மட்டும் கவனமா இருக்கனும்...! | 06 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

எந்த செயலை செய்தலும் தீர யோசித்து செயல் பட வேண்டும். வழக்கு தொடர்பான விஷயத்தில் திடீர் திருப்பம் உண்டாகும். புதிய முயற்சி எடுக்கையில் உங்கள் கூட்டாளியின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நிலுவையில் இருந்து வந்த பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் எதிர்பாராத விதமாக புது வாய்ப்புகள் கிடைக்கும். அக்கம்-பக்கத்தினரின் ஒத்துழைத்து உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: கருஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

இந்த ராசிக்காரர்கள் மட்டும் கவனமா இருக்கனும்...! | 06 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் சாதகமான சூழ்நிலை அமையும். புது பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது உங்களின் சூழ்நிலை அறிந்து செயல்படவும். மனதில் ஒரு நம்பிக்கை உருவாகும். செய்யும் வேலையில் சுதந்திர தன்மையை உணர்வீர்கள். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசிக்காரர்கள் மட்டும் கவனமா இருக்கனும்...! | 06 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

வெளி வட்டாரங்களில் உங்கள் மீதான மதிப்பு உயரும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சமூக பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஆதரவான சூழல் அமையும். மூத்த உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இந்த ராசிக்காரர்கள் மட்டும் கவனமா இருக்கனும்...! | 06 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

பயணம் சார்ந்த தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். திருப்பணிகளில் ஆர்வமாக கலந்து கொள்வீர்கள். வெளிநாடு தொடர்பான வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக  அமையும். கால்நடை சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் ஆதாயம் அடைவீர்கள். உறவினர்கள் வழியில் சில விரயங்கள் ஏற்படும். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த ராசிக்காரர்கள் மட்டும் கவனமா இருக்கனும்...! | 06 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயலில் நல்ல லாபம் மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவற்கான வாய்ப்புகள் அமையும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வாழ்க்கைத் துணையின் வழியில் ஆதரவு கிடைக்கும். புதிய துறைகள் மீது ஆர்வம் உண்டாகும். மனதில் நினைத்த விஷயங்கள் கண்டிப்பாக நிறைவேறும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்:

இந்த ராசிக்காரர்கள் மட்டும் கவனமா இருக்கனும்...! | 06 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செயல்படவும். மனதில் ஏற்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் தோன்றி மறையும். பேச்சில் கனிவு வேண்டும். வியாபார பணியில் இருப்பவர்கள் கவனமாக செயல்படவும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். சமூக பணியில் இருபவர்களுக்கு புது விதமான சூழல் ஏற்படும். விழிப்புணர்வு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்