Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சித்ரா பௌர்ணமியில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்..! | 05.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Gowthami Subramani Updated:
சித்ரா பௌர்ணமியில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்..! | 05.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 22 ஆம் நாளுக்கான [05 மே 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.30 - 10.30 வரை

மாலை: 04.30 – 05.30 வரை

சித்ரா பௌர்ணமியில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்..! | 05.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

மனதில் நீங்கள் எண்ணிய பணிகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்களுக்கு நன்மை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். பாரம்பரியமான செயல்பாடுகளால் ஆர்வம் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் மேன்மை அதிகரிக்கும். உடல் நலத்தில் சிறந்த கவனம் தேவை. பொருளாதார மேம்பாடு சிறப்பாக உள்ளது. இருப்பினும் சிக்கனத்துடன் செலவு செய்வது நல்லது. மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 4

சித்ரா பௌர்ணமியில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்..! | 05.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

எதிர்பாராத சில உதவிகளால் நன்மை உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மறைமுக தடைகள் விலகி வெற்றி கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்களின் உழைப்பு அதிகமாக இருக்கும். நெருக்கமானவர்களால் பிரச்சனை உண்டாகலாம். எனவே, சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. இன்று சாதகமான முடிவு எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இதுவரை இருந்த பிரச்சனைகள் விலகி நன்மைகள் உண்டாகும்.   நலம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

சித்ரா பௌர்ணமியில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்..! | 05.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

நீங்கள் பணிபுரியும் இடத்தில், அமைதியான சூழல் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கலாம். கடினமான பணிகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் காணப்படலாம். பலம் மற்றும் பலவீனத்தை பற்றி அறிந்து செயல்படுவீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களின் மூலம் மதிப்பு அதிகரிக்கலாம். பொழுதுபோக்கு தொடர்பான விஷயத்தில் அதிக ஆர்வம் இருக்கும். ஊக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 6

சித்ரா பௌர்ணமியில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்..! | 05.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

உங்கள் சிந்தனைகள் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். தொழில் தொடர்பான பயணங்கள் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசுப் பணிகளில் இருந்து வந்த இழுபறிகள் அனைத்தும் நீங்கும். குடும்பத்தாரின் மகிழ்ச்சி பெருகும். பொருளாதார வரவு அதிகரிக்கும். தொழிலில் வரவு மேம்படும். சிக்கனமாகச் செலவு செய்வது நல்லது. உடல் நலம் சிறப்பாக உள்ளது. புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

சித்ரா பௌர்ணமியில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்..! | 05.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

உடன் பிறந்தவர்களின் வழியில் அதிக ஒத்துழைப்பு உண்டாகும். இழுபறியான பணிகள் அனைத்தும் விலகி விடும். சாதுரியமாக செய்து வேலைகளை முடிப்பீர்கள். உங்களின் மீதான வதந்திகள் நீங்கும். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தொலைபேசி வழியாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் மேம்பாடு அதிகரிக்கும். தொழிலில் வரவு அதிகரிக்கும். சிக்கனமாக செலவு செய்வது நல்லது. லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

சித்ரா பௌர்ணமியில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்..! | 05.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

எதிர்பாராத சுபச்செலவுகள் உண்டாகலாம். புதிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். பொருளாதாரத்தில் நெருக்கடி குறையும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் ஒத்துழைப்பு ஏற்படும். வங்கி சார்ந்த விஷயத்தில் அனுகூலம் உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும். உங்களின் விவேகமான பேச்சுக்கள் உங்களின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. குடும்ப உறுப்பினர்களால் நன்மை உண்டாகும். உடன் பிறந்தவர்களால் சிறப்பு உண்டாகும். உடல் நலம் சிறப்பாக உள்ளது. பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

சித்ரா பௌர்ணமியில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்..! | 05.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

புதிய நண்பர்களின் வருகையால் நன்மை உண்டாகும். மனதில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி புத்துணர்ச்சி பெருகும். பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்த்த எல்லா விதமான நன்மைகள் கிடைக்கும். மனதில், புதுவிதமான தேடல் அதிகரிக்கும். தற்பெருமையின்றி செயல்படுவது நல்லது. கல்வியில் மாணவர்கள் ஆர்வத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். உடல் நலத்தில் சிறந்த கவனம் தேவை. சலனம்!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 5

சித்ரா பௌர்ணமியில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்..! | 05.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

உத்தியோகத்தில் உங்களின் ஆர்வம் அதிகரிக்கும். எந்த செயலாக இருந்தாலும், தனித்து செயல்பட வேண்டும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். நீங்கள் மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடி உண்டாகும். உடனிருப்பவர்களிடம் புரிதல் உண்டாகும். உடல் நலத்தில் பிரச்சனை இல்லை. கணவன், மனைவியிடையே இருந்து வந்த பிரச்சனைகள் விலகி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பகுத்தறிந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: ஆகாய நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

சித்ரா பௌர்ணமியில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்..! | 05.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

நீங்கள் எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முதலீடுகள் ஈட்டுவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். உங்கள் குழந்தையின் வழியில் சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். பகுத்தறிந்து செயல்பட்டு முடிவு எடுப்பதால் நன்மை உண்டாகும். சாதுரியமாக செயல்பட்டு காரியங்களை நிறைவேற்றுவீர்கள். நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உடல் நலத்தில் சிறந்த கவனம் தேவை. எதிர்பாராத விஷயங்கள் அனைத்தும் நிறைவேறும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

சித்ரா பௌர்ணமியில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்..! | 05.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

வியாபாரம் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர். உங்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உடன் பிறந்தவர்களால் நன்மை உண்டாகும். உறவினர்கள் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்வியில் மாணவர்கள் முன்னேற்றத்துடன் காணப்படுவீர்கள். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். எதையும் ஆழ்ந்த சிந்தனையுடன் செயலாற்றுவது நல்லது. விவசாயம் தொடர்பான பணிகளில் அதிக வருமானம் கிடைக்கும். தெளிவான சிந்தனையுடன் செயல்படுவது நல்லது. மறதி!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 7

சித்ரா பௌர்ணமியில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்..! | 05.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

புதிய நபர்களின் அறிமுகம் சிறப்பைத் தரும். வெளிவட்டாரத்தில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். உங்கள் குணநலத்தினால், நட்பு வட்டாரம் விரிவடையும். உடனிருப்பவர்களின் தேவையை அரிந்து நிறைவேற்றி வைப்பது நல்லது. திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். குழப்பங்கள் விலகி தெளிவான மனப்பான்மை உண்டாகும். உடல் நலத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: இள ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 5

சித்ரா பௌர்ணமியில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்..! | 05.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

வாக்குறுதிகள் அளிப்பதற்கு முன் சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் அதிக கவனம் வேண்டும். உடனிருப்பவர்களிடம் அனுசரித்து செல்வது சிறப்பு. எதிர்பாராத சில செலவுகள் ஏற்படலாம். இதனால், நெருக்கடி உண்டாக வாய்ப்புண்டு. வாகனங்களில் செல்லும் போது விவேகமாக செயல்பட வேண்டும். மருத்துவம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் இருக்கும். உங்களது சொந்த முயற்சியில் அனைத்து செயல்களையும் செய்வது சிறப்பு. இரக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 3


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்