Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.05.2023

Nandhinipriya Ganeshan Updated:
மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.05.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம் 09 ஆம் நாளுக்கான [23 மே 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.05.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதாரத்தை பொறுத்த வரை அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படலாம். துணையின் விருப்பப்படி நடந்துக்கொள்வதன் மூலம் நல்லுறவு மேம்படும். சிலருக்கு தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். கடன் பிரச்சனையால் அவதிப்படுவோருக்கு ஆறுதலான நாள். மலை சார்ந்த இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. உடனிருப்பவர்களின் ஆதரவால் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.05.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

எந்த காரியத்தை சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள். கனவுகள் நனவாகும் நாள். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தேடி கொடுக்கும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சகபணியாளர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரித்து காணப்படும். தாய்மாமன் வழியில் ஆதாயம் கிடைக்கும். கணவன், மனைவி இடையே மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். கைமாறாக வாங்கிய பணம் திரும்ப கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பரிவு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 9

மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.05.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

எந்த விஷயத்திலும் கவனத்தோடும் பொறுமையுடனும் செயல்பட வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் உங்களை வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பார்கள். யாருடம் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். தேவையற்ற செலவுகள் வரும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 4

மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.05.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் எதை பேசுவதாக இருந்தாலும் யோசித்து பேச வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்த பணஉதவி எந்த தடையுமின்றி கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. தடங்கல்!

அதிர்ஷ்ட நிறம்: வெண் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.05.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

தேவையற்ற பேச்சுகளை தவிர்த்துக்கொள்வது உத்தமம். தன்நம்பிக்கை அதிகரிக்கும் நாள். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும். வாழ்க்கை துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். சிலர் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைபட்ட சில பணிகளை மாறுபட்ட முறையில் செய்து முடிப்பீர்கள். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.05.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

பிரியமானவரோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் ஆதரவாக நடந்துக் கொள்வார்கள். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். நண்பர்களுடன் இருந்துவந்த பிரச்சனை நீங்கும். இருப்பினும், பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் எதிலும் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான கடன் உதவி கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும் நாள். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.05.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. நேரம் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை கொடுக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். நினைத்த காரியம் நிறைவேறும் நாள். வண்டியில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவும். கூட்டு தொழில் செய்வோர் பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வாக்குறிதிகளை கொடுக்கப்பதை தவிர்க்கவும். சிரமம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.05.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

பணியிடத்தில் நேர்மையாக நடந்து, மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். பயிர், மனை இவற்றால் லாபம் ஏற்படும். சிலருக்கு வாழ்க்கையில் புதுப்புது மாற்றங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். திருமண வாழ்க்கையில் அன்பு, ஒற்றுமையும் ஏற்படும். சில செலவுகள் இருக்கும் ஆனால் பயனுள்ள விஷயத்திற்காகவே இருக்கும். தனம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 5

மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.05.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

நெருங்கிய நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் ஏற்பட இருந்த குழப்பங்கள் விலகும். சிலருக்கு நவீன உபகரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. இதுவரை கடினமாக இருந்த காரியங்கள் கூட எளிதில் கைகூடும். அரசுப் பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து, அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். குடும்பத்தினரிடம் பேசும்போது பேச்சில் கவனம் வேண்டும். எதிர்பாலினத்தவரால் ஆதாயம் உண்டு. கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.05.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

புதிய வாய்ப்புகள் தேடி வரும். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த பணஉதவிகள் கிடைக்கும். ஆசைப்பட்ட விஷயம் எதிர்பாராமல் கிடைக்கும். இதனால், நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வி சார்ந்த முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற பரிசும் பாராட்டும் கிடைக்கும் நாள். குடும்ப வாழ்க்கை சிறப்பு. மந்தமாக இருந்த வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 6

மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.05.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

சாதகமான நாள். சிக்கலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். எல்லா செயலும் சுறுசுறுப்புடனும், தைரியத்துடனும் ஈடுபடுவீர்கள். பணியிடத்தில் புதிய யுக்தியை கையாண்டு உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பல நாட்களாக இழுத்தடித்த சுபகாரியம் நல்ல முறையில் நடைபெறும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். திருமண வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் வருகை ஏற்படும். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். களிப்பு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.05.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

வேலை செய்யும் இடத்தில் நல்லபேர் கிடைக்கும். வீட்டில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். எதிர்பாரா செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். பணவரவு உண்டு. சேமித்து வைக்க முயற்சி செய்யுங்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபரை சந்திப்பீர்கள். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: 4

அதிர்ஷ்ட எண்: பிரவுன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்