Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த ராசிக்காரர் புதிய நபரால் சிக்கலில் சிக்குவீர்கள்.. | 12 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இந்த ராசிக்காரர் புதிய நபரால் சிக்கலில் சிக்குவீர்கள்.. | 12 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 12 ஆம் நாளுக்கான [01 பிப்ரவரி 2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்:

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 03.30 - 04.30 வரை

இந்த ராசிக்காரர் புதிய நபரால் சிக்கலில் சிக்குவீர்கள்.. | 12 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

வேலையில் கவனம் செலுத்தினால் அங்கீகாரமும் வெற்றியும் கிடைக்கும். புதிய முதலீடுகள் லாபகரமானதாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணவரவு உண்டு. ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. நண்பர்களின் உதவி தேடி வரும். பணிஇடத்தில் அவசரப்பட்டு செய்யும் வேலையால் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கவனத்தோடு செயல்பட்டால் வீண் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

இந்த ராசிக்காரர் புதிய நபரால் சிக்கலில் சிக்குவீர்கள்.. | 12 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

பணிச்சுமை அதிகமாக இருக்கும், கவனமாக செயல்பட வேண்டும். அதேபோல், கூட வேலை செய்பவர்களிடமும் ஜாக்கிரதையாக தான் பேச வேண்டும். குடும்ப பிரச்சனையாக கணவன்-மனைவிக்கு இடையேகருத்து வேறுபாடு ஏற்படலாம். தேவையில்லாத செலவுகள் இருக்கும். நிதி நிலையை பொறுத்த வரையில் திருப்திகரமானதாக இருக்காது. எனவே, பார்த்து பக்குவமாக செலவு செய்யுங்க.  சிலர் தொழில் விஷயமாக கடன் வாங்குவீர்கள். வியாபாரம் மந்தமாக இருக்கும். அவதி!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இந்த ராசிக்காரர் புதிய நபரால் சிக்கலில் சிக்குவீர்கள்.. | 12 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். நண்பர்களிடமும், புதுசா அறிமுகமானவர்களிடமும் ஜாக்கிரதையாக இருங்கள். தேவையில்லாமல் எதையும் பேசிவிடாதீர்கள். அப்பறம் ஆப்பு வைத்துவிடுவார்கள். தொழில் வியாபாரத்தில் எதையும் பொறுமையுடன் கையாண்டால் நல்ல பலன் கிடைக்கும். பணவரவு சுமாராக தான் இருக்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வர இழுத்தடிக்கும். விலையுயர்ந்த பொருட்களின் மீது கவனம் தேவை. கண் சார்ந்த  பிரச்சனை வரலாம். அசதி!

அதிர்ஷ்ட நிறம்: மயில் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

இந்த ராசிக்காரர் புதிய நபரால் சிக்கலில் சிக்குவீர்கள்.. | 12 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

பணம் சம்பந்தமான விஷயத்தில் கணவன்-மனைவிக்கு கிடையே சண்டை வரலாம். இருந்தாலும், உங்களின் அமைதியான தன்மையால் எல்லாத்தையும் சரிசெய்விங்க. எது பேசினாலும் அது பிரச்சனையில் தான் முடியும்; எனவே, அக்கம் பக்கத்தினருடன் கவனமாக பழகுங்க. தேவையில்லாத செலவுகள் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும். எதிர்காலம் சார்ந்த எண்ணத்தில் மனதில் ஒரு குழப்பத்தோடே இருப்பீர்கள். குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

இந்த ராசிக்காரர் புதிய நபரால் சிக்கலில் சிக்குவீர்கள்.. | 12 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

நீண்டநாள் கனவு நிறைவேறும் நாள். உங்க துணையிடம் இருந்து ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. நீங்கள் மிகுந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். அனைவரிடமும் பணிவாக நடந்துக் கொள்வீர்கள். இழுபறியான தனவரவு கைக்கு வரும். மந்தமாக இருந்த வியாபாரம் சூடுபிடிக்கும். பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பங்கு வர்த்தகத்தின் மூலம் நல்ல லாபமும் பண வரவும் காணப்படும். ஆரோக்கியமும் சூப்பர். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த ராசிக்காரர் புதிய நபரால் சிக்கலில் சிக்குவீர்கள்.. | 12 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

கஷ்டமான வேலையை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். காதலர்களுக்கு அற்புதமான நாள். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். இதனால் சக பணியாளர்கள் பொறாமைப்படுவார்கள். வியாபாரத்தில் லாபம் தாறுமாறாக இருக்கும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. நீண்ட நாள் ஆசைப்பட்ட இடத்திற்கு சென்று வருவீர்கள். தாய்வழி உறவினர்களால் மகிழ்ச்சியான செய்தி வந்தடையும். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இந்த ராசிக்காரர் புதிய நபரால் சிக்கலில் சிக்குவீர்கள்.. | 12 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் காணப்படுவீர்கள். பணியிடத்தில் உங்க திறைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள். விவசாயம் சார்ந்த தொழில் செய்வோருக்கு அமோகமாக இருக்கும். கணவன்-மனைவி இடையே பிணைப்பு வலுப்படும். குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பணவரவு சிறப்பு. கடன் கொடுப்பதை தவிர்க்கவும். வழக்குசார்ந்த விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இந்த ராசிக்காரர் புதிய நபரால் சிக்கலில் சிக்குவீர்கள்.. | 12 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

முயற்சிகள் கம்மியாக இருந்தாலும் பெரிய வெற்றி உண்டு. புதிய தொழில் தொடங்க நல்ல நாள். வேலை செய்யும் இடத்தில் அனுசரித்து நடந்துக் கொள்வதன் மூலமும் கடமை உணர்வோடு பணியாற்றுவதன் மூலமும் பதவி உயர்வு கிடைக்கும். கஷ்டமான வேலையையும் ஈசியாக சீக்கிரமாக செய்து முடிப்பீர்கள். குடும்ப நலனுக்காக செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்த வரை எந்த பிரச்சனையும் இல்லை. வண்டி வாங்கும் கனவு நிறைவேறும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசிக்காரர் புதிய நபரால் சிக்கலில் சிக்குவீர்கள்.. | 12 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

உங்களிடம் மறைந்திருக்கும் ஆற்றலை உணரும் நாள், அதை நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். சாதிக்க வேண்டும் என்று வெறித்தனமாக போராடிய உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இதுவரை மந்தமாக போய்க்கொண்டிருந்த காதல் கதை புதிய திருப்பத்தை எடுக்கலாம். ஆஃபிசில் உங்களுடைய திறமை மற்றும் புத்திசாலித்தனத்தை மேல்அதிகரிகாரிகள் பாராட்டுவார். தேவைப்படும் வேளையில் பணம் கிடைக்கும். பங்கு வர்த்தகம் லாபத்தை அளிக்கும். ஜெயம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இந்த ராசிக்காரர் புதிய நபரால் சிக்கலில் சிக்குவீர்கள்.. | 12 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

அன்பான குணத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் சில சவால்களை சந்திக்க நேரலாம். திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். எதிர்பாராத விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி நிலவும். பணப்புழக்கம் குறைந்து காணப்படும். அதேவேளையில் செலவினங்கள் அதிகரித்து காணப்படும். ஒருபக்கம் மகிழ்ச்சி இருந்தாலும் மறுபக்கம் கவலையும் இருக்கும். மலைசார்ந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த ராசிக்காரர் புதிய நபரால் சிக்கலில் சிக்குவீர்கள்.. | 12 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

வேலைசெய்யும் இடத்திலும் வீட்டிலும் புதிய பிரச்சனை தலை தூக்கும். இதனால் எல்லாரிடம் கடிந்துக் கொள்வீர்கள். பணியிடத்தில் ஒரு நல்ல மாற்றம் உருவாகக்கூடும். உடன்பிறந்தோரால் அலைச்சல் அதிகரிக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாலினத்தவரிடம் தேவையற்றை பேச்சை தவிர்க்கவும். வியாபாரத்தில் அதிக லாபத்தை எதிர்பார்த்தால் நஷ்டம் உங்களுக்கே. பேராசை!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 1

இந்த ராசிக்காரர் புதிய நபரால் சிக்கலில் சிக்குவீர்கள்.. | 12 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

கிரியேட்டிவ் துறையில் இருப்பவர்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த புகழும் அங்கீகாரமும் கிடைக்கும். வீட்டு பிரச்சனைகளை பணியை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்க. வியாபாரம் சார்ந்த பணவரவு இழுபறியாக இருக்கும். பெரிய அளவிலான முதலீடுகளை தவிர்க்கவும். ஒருசிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. பயணத்தின்போது விலையுயர்ந்த பொருட்களின் மீது கவனம். ஏழைகளுக்கு உதவி செய்வீர்கள். பரிவு!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்