Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்னைக்கு இவங்க மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் | Tomorrow Rasi Palan in Tamil | 26.03.2023

Priyanka Hochumin Updated:
இன்னைக்கு இவங்க மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் | Tomorrow Rasi Palan in Tamil | 26.03.2023Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 12 ஆம் நாளுக்கான [26 மார்ச் 2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்:

காலை: 10.30 – 11.30 வரை

மாலை: 01.30 – 02.30 வரை

இன்னைக்கு இவங்க மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் | Tomorrow Rasi Palan in Tamil | 26.03.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

உங்களுக்கு உதவி செய்ய ஆள் இல்லை என்றாலும் அவதி கொடுக்க வரிசைக் கட்டி வருவார்கள். நீங்கள் யாரை முழுமையாக நம்புனீர்களோ அவர்களால் தான் உங்களுக்கு சிக்கல் ஏற்படும். இருப்பினும் குடும்பத்தில் இருப்பவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மாணவர்கள் பலனை எதிர்பார்க்காமல் உங்களின் முழு முயற்சியை செலுத்திக்கொண்டே வாருங்கள். கண்டிப்பாக நீங்கள் ஒரு நாள் வெற்றிப் பெறுவீர்கள். உடல் நலத்தில் சற்று கவனம் தேவை. அவதி!

இன்னைக்கு இவங்க மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் | Tomorrow Rasi Palan in Tamil | 26.03.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

இத்தனை நாள் உழைப்புக்கான அங்கீகாரம் மற்றும் லாபம் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் இனிமேல் உங்களுக்கு மேன்மைக்கான காலம் ஆரம்பிக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேறும். புதிய முயற்சியில் ஈடுபடும் எண்ணங்கள் தோன்றும். மாணவர்கள் மகிழ்ச்சியாக தங்கள் எதிர்காலத்தை தேர்வு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். தம்பதிகளுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். முதலீடு செய்வதாக இருந்தால் அதிக கவனத்துடன் செ யல்படுங்கள். மேன்மை!

இன்னைக்கு இவங்க மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் | Tomorrow Rasi Palan in Tamil | 26.03.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

உங்களுக்கு இழிவாக நினைத்தவர்கள் மத்தியில் சாதிச்சு காட்டுவீர்கள். தொட்டதெல்லாம் வெற்றியாக மாறும். தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் திறமையால் பதவி உயர்வு கிடைக்கும். பெண்கள் புது முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதில் சில ஏற்றம் இரக்கம் இருக்கலாம் ஆனால் முயற்சியை மற்றும் கை விடாதீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பல நாட்களாக வராமல் இருந்த பூர்வீக சொத்துக்கள் வந்து சேறும். சாதனை!

 

இன்னைக்கு இவங்க மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் | Tomorrow Rasi Palan in Tamil | 26.03.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

ஒரு விதமான சிந்தனையில் இருப்பீர்கள். நீங்கள் உங்களுடைய வேலையில் கவனமாக செயல்பட வேண்டும். உறவினர்களால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். ஆனால் அதனை நினைத்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். நீங்கள் சாதிக்க வேண்டிய விஷயம் எவ்ளவோ இருக்கு. வார்த்தைகளை பயன்படுத்தும் போது அதிக கவனம் வேண்டும். உடல் ரீதியாக சற்று பலவீனமாக இருப்பீர்கள். எனவே, உடல்நிலையில் கவனம் வேண்டும். கவனம்! 

இன்னைக்கு இவங்க மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் | Tomorrow Rasi Palan in Tamil | 26.03.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

என்னடா வாழ்க்கை இது என்று ஒரு மாறி விரக்தியில் இருப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்தது எதுவும் சரியாக நடக்காமல் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்காமல் இருக்கலாம். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளால் தொந்தரவு ஏற்படலாம். குடும்பத்தில் பிரச்சனைகள் வரலாம். இவை அனைத்துமே இருந்தாலும் கூட நீங்கள் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். கல்வி சம்மந்தமான எண்ணத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். சோர்வு!

இன்னைக்கு இவங்க மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் | Tomorrow Rasi Palan in Tamil | 26.03.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

வீட்டுல் சுபகாரியம் நடைபெறும். அதனால் செலவு சற்று அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் ஒரு புதிய மாற்றம் ஏற்படும். திடீரென பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்துடன் எங்காவது வெளியில் சென்று ஆனந்தமாக நேரத்தை செலவிடுவீர்கள். உயர்கல்விக்கான படிப்பு நீங்கள் எதிர்பார்த்தது போல அமையும். உடல்நிலையில் அதிக கவனம் வேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்களால் சற்று அலைச்சல் ஏற்படும். சுபம்!

இன்னைக்கு இவங்க மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் | Tomorrow Rasi Palan in Tamil | 26.03.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

இன்றைய நாள் உங்களுக்கு எல்லாமே நன்றாக இருக்கும். இத்தனை நாளாக உங்களுடைய மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தேவையில்லாத விஷயங்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கஷ்டப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதில் இருந்து மீண்டு வந்து உங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வேலையை செய்வீர்கள். வராது என்று நீங்கள் நினைத்த பணம் வந்து சேறும். இனிமேல் தேவையில்லாத விஷயங்களை நினைத்து கவலை பட வேண்டாம். உடல் நலத்தில் கவனம் வேண்டும். நன்மை!

இன்னைக்கு இவங்க மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் | Tomorrow Rasi Palan in Tamil | 26.03.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

இத்தனை நாளாக பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைக்கும். எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதை நீங்கள் முழு முயற்சியுடன் செய்வீர்கள். ஆனால் அதற்கான அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கலாம். இனிமேல் அப்படி இருக்காது. உங்களுடைய கடின உழைப்பிற்காக பலன் கிடைக்கும். உடல் ரீதியாக சில பிரச்சனைகள் உங்களுக்கு வரலாம். அதனை சீக்கிரம் சரி படுத்திக்கொள்ளுங்கள். தந்தை வழியால் நிம்மதி கிடைக்கும். இடமாற்றத்திற்கான காலம் கூடிய விரைவில் வரும். ஜெயம்!

இன்னைக்கு இவங்க மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் | Tomorrow Rasi Palan in Tamil | 26.03.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

அதிக கோபத்தால் பல பிரச்சனைகளில் மாட்டிக்கொள்வீர்கள். எனவே, முதலில் கோபத்தை குறையுங்கள். உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தார் என்று அனைவரிடமும் கவனமாக பேச வேண்டும். மிக முக்கியமாக தேவை இல்லாத இடத்தில் பேச வேண்டாம். உங்கள் முயற்சிக்கான மரியாதை கிடைக்காமல் போகலாம். அதற்காக ஆவேசம் படாமல் பொறுமை காக்கவும். புதிய முயற்சியில் ஈடுபடுவதற்கான யோசனை இருந்தால் சற்று கவனமாக சிந்தித்து செயல்படுங்கள். சினம்!

இன்னைக்கு இவங்க மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் | Tomorrow Rasi Palan in Tamil | 26.03.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

அடிக்கடி அலைச்சல் ஏற்படலாம். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. குடுமத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படும். பிள்ளைகளால் செலவு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தல் அதிக நேரம் வேலை செய்வதால் சற்று அசதியாக இருப்பீர்கள். வெளிநாட்டிற்கு செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. உடல்நிலை சீராக உள்ளது. தந்தை வழி உறவினர்களால் பிரச்சனை ஏற்படலாம். அசதி!

இன்னைக்கு இவங்க மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் | Tomorrow Rasi Palan in Tamil | 26.03.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

நீங்கள் ஒரு முடிவு எடுத்திருப்பீர்கள் ஆனால் வேறு ஒன்று நடக்கும். இருப்பினும் அதனை உங்களுக்கு ஏற்றது போல மாற்றிக்கொள்ளுங்கள். மனைவியின் துணையால் அனைத்து பிரச்சனைகளையும் கடந்து வருவீர்கள். தொழில் ரீதியாக ஏற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உயர்வு கிடைக்கும். மனைவிக்கு பிடித்தது போல உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். பிள்ளையின் உடல்நிலை காரணமாக அலைச்சல் ஏற்படும். ஆக்கம்!

இன்னைக்கு இவங்க மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் | Tomorrow Rasi Palan in Tamil | 26.03.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

உங்களுக்கு பிடித்த விஷயத்தை செய்து மகிழ்வீர்கள். படிப்பில் கவனத்துடன் இருப்பீர்கள். குடும்பத்தை பற்றிய சிந்தனை வரும். நண்பர்களுடன் இருந்து சற்று விலகிருப்பது நல்லது. வேலை தேடுபவர்களுக்கு கூடிய விரைவில் வேலை கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்தது போல வேலை மாற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறும். உடல்நிலையில் சற்று கவனத்துடன் இருங்கள். இன்பம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்