Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 07.07.2023

Priyanka Hochumin Updated:
நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 07.07.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 22 ஆம் நாளுக்கான [07 ஜூலை 2023, வெள்ளி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.30 - 10.30 மணி வரை

மாலை: 04.45 – 05.45 மணி வரை

நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 07.07.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

மனதில் இருந்த குழப்பம், கவலைகள் நீங்கும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட விதத்தில் தீர்வு காண்பீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன் இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் நினைத்தது நடக்கும். ஆசை பட்டத்தை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 07.07.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

அரசு சார்ந்த விஷயங்களில் சற்று பொறுமையுடன் கையால வேண்டும். சில நிகழ்வுகள் உங்களுக்கு வாழ்க்கை பற்றிய புரிதலை ஏற்படுத்தும். விலகி சென்றவர்கள் உங்களைத் தேடி வருவார்கள். வேலை மாற்றம் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. நீண்ட நாள் ஆசை நிறைவேறும். சகோதரர்களிடத்தில் அனுசரித்து செல்ல வேண்டும். வியாபாரத்தில் வரவு சிறப்பாக இருக்கும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்   

அதிர்ஷ்ட எண்: 5

நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 07.07.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

தந்தையின் உடல்நிலை மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். வேலை இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். பழைய வாகனங்களை சீர் செய்வீர்கள். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உறவினர்களின் வருகை எதிர்பாராமல் நடைபெறும். பணிவு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 07.07.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

வியாபாரத்தில் அழுத்தம் அதிகரிக்கும். அக்கம் - பக்கம் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது உத்தமம். உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் ஏற்படும். தீர்க்கமான முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். பழைய நினைவுகளால் குழப்பம் ஏற்படலாம். அரசு மற்றும் சமூகம் சார்ந்த பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். ஏமாற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 8

நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 07.07.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

கல்வி சார்ந்த விஷயத்தில் குழப்பங்கள் விலகும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான தேடல் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும். மனதில் இருந்த கவலைகள் குறையும்.  வீட்டில் சுபகாரிய நிகழ்வுகள் கைகூடும். உயர் அதிகரிகளிடத்தில் மதிப்பு மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆகாய நீலம்

அதிர்ஷ்ட எண்: 4

நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 07.07.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

கடன் பிரச்சனைகள் குறையும். கால்நடைகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான முதலீடு சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாள் பயணங்கள் செல்லும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். வேலை செய்யும் இடத்தில் தெளிவு பிறக்கும். நெருக்கமானவர்களின் வருகையால் உற்சாகம் உண்டாகும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 6

நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 07.07.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதிய வியூகங்களை பயன்படுத்தி வெற்றி காண்பீர்கள். உறவினர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். ஆன்மீகப் பணியில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார சிந்தனையால் மாற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் மன நிறைவு ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 07.07.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

தாயார் வழியில் அனுசரித்துச் செல்வது நல்லது. தடைப்பட்ட பணிகள் எளிதில் நடக்கும். எதிர்பாராத உதவிகளால் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். வேலை மாற்றம் தொடர்பான எண்ணங்கள் தோன்றும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் தேவை. கல்வி ஆர்வமின்மை ஏற்படும். பயணங்களால் அனுபவம் மேம்படும். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 6

நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 07.07.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய அணுகுமுறையை கையாண்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் சூழ்நிலை ஏற்படும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். இணையதளம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கமிசன் வேலை செய்பவர்களுக்கு நல்ல லாபம். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4

நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 07.07.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

தள்ளிப்போன காரியங்கள் நடைபெறும். கணவன் - மனைவி இடையே மனம் விட்டு பேசுவது நல்லது. எதிலும் நிதானமாக செயல் படுவது நல்லது. பயணம் செல்வதால் உற்சாகமாக ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் வரவு அதிகரிக்கும். நீங்கள் சொல்லும் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகமாகும். மற்றவர்கள் சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 07.07.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

விமர்சனங்கள் தோன்றி மறையும். ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை செய்வீர்கள். புதிய முயற்சியால் அலைச்சல்கள் உண்டாகும். மனதில் சோர்வு தோன்றி மறையும். விளையாட்டில் கவனமாக இருக்க வேண்டும். எழுத்து சார்ந்த துறையில் புதிய அனுபவம் ஏற்படும். மற்றவர்களின் குறையை சுட்டிக்காட்டுவதை தவிர்க்கவும். எதிர்பார்த்த பணிகள் தாமதமாகலாம். நன்மை!

 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 07.07.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

ஆடம்பரமான விஷயத்தில் ஆர்வம் ஏற்படும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். புதிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ற பலன்கிடைக்கும். சகஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்வும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். பயணத்தால் மாற்றம் ஏற்படும். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்