Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எதிலும் சிந்தித்தும் பொறுமையுடனும் செயல்படவேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 08.07.2023

Nandhinipriya Ganeshan Updated:
எதிலும் சிந்தித்தும் பொறுமையுடனும் செயல்படவேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 08.07.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 23 ஆம் நாளுக்கான [08 ஜூலை 2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்:

காலை: 07.45 - 08.45 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

எதிலும் சிந்தித்தும் பொறுமையுடனும் செயல்படவேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 08.07.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

சவால்கள் நிறைந்த நாள். பணியிடத்தில் சகஊழியர்களிடையே திறமையை நிரூபிக்க போட்டி போட்டு வேலை செய்வீர்கள். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்துக்கொள்வது சிறந்தது. எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். சரியாக பேசினாலும் அது தவறாக தான் போய் முடியும். எனவே எதிர்பாலினத்தவரிடம் பேசும்போது பேச்சில் கவனமாக இருக்கவும். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 9

எதிலும் சிந்தித்தும் பொறுமையுடனும் செயல்படவேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 08.07.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. எந்த காரியத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பூர்வீக சொத்து வகையில் பணவரவு காணப்படும். எதிலும் சிந்தித்தும் பொறுமையுடனும் செயல்படவேண்டிய நாள். சகோதரர்களிடம் எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 1

எதிலும் சிந்தித்தும் பொறுமையுடனும் செயல்படவேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 08.07.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

பிள்ளைகளால் பாராட்டு கிட்டும். பணியிடத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு மேலதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே மதிப்பு அதிகரிக்கும். கணினி தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். அச்சம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

எதிலும் சிந்தித்தும் பொறுமையுடனும் செயல்படவேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 08.07.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

எதிர்கால எண்ணங்களால் குழப்பத்தோடே இருப்பீர்கள். மலை சார்ந்த இடங்களுக்கு செல்லும்போது கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. தனவரவு திருப்திகரமாக இருக்காது. பணியிடத்தில் சகபணியாளர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் சகவியாபாரிகளால் பிரச்சனை ஏற்படக்கூடும். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 5

எதிலும் சிந்தித்தும் பொறுமையுடனும் செயல்படவேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 08.07.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். மனதில் தன்நம்பிக்கை அதிகரிக்கும். பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். அனைவரிடமும் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்து வைப்பீர்கள். செல்பேசி மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. எதிரிகள் மற்றும் பழைய கடன்கள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 9

எதிலும் சிந்தித்தும் பொறுமையுடனும் செயல்படவேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 08.07.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சனைகள் குறையும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் சந்திப்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சிலருக்கு திடீர் பணவரவுக்கும், திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

எதிலும் சிந்தித்தும் பொறுமையுடனும் செயல்படவேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 08.07.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

உயர் பதவியில் இருப்பவர்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் பொறுமையாக நடந்துக் கொள்ளுங்கள். பிரியமானவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முடிந்த வரை வாயை திறக்காமல் இருப்பது நல்லது. சிலருக்கு புதிய வீடு, மனை வாங்கும் எண்ணம் கைநழுவி போகும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். இளைய சகோதரர்கள் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. செலவு!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 1

எதிலும் சிந்தித்தும் பொறுமையுடனும் செயல்படவேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 08.07.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். ஆசைகள் நிறைவேறும் நாள். கணவன்-மனைவி இடையே பாசம், அன்பு, அக்கறை அதிகரிக்கும். சிலருக்கு நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். முக்கியமான காரியங்களில் இருந்த சிக்கல்கள் குறையும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

எதிலும் சிந்தித்தும் பொறுமையுடனும் செயல்படவேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 08.07.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

வியாபாரிகளுக்கு லாபம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். பூர்வீக சொத்து விவகாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களால் ஆதாயம் ஏற்படும். நண்பர்களுடன் இருந்து வந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். வாகன பயணத்தின்போது மட்டும் கவனம் தேவை. முடிந்தவரை இரவு பயணத்தை தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

எதிலும் சிந்தித்தும் பொறுமையுடனும் செயல்படவேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 08.07.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும். நண்பர்களின் தேவையை பூர்த்தி செய்து வைப்பீர்கள். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திடீர் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். சிலருக்கு வாழ்க்கைத்துணையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

எதிலும் சிந்தித்தும் பொறுமையுடனும் செயல்படவேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 08.07.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். பணியிடச்சூழல் சுமூகமாக இருக்கும். காதலர்களுக்குள் இருந்த கருத்துவேறுபாடு நீங்கி, மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். செய்த தவறை உணரும் நாள். நிதி நிலை நன்றாக இருக்கும். குடும்பச் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அற்புதமாக இருக்கும். புதிய நபர்களிடம் பேசும்போது மட்டும் கொஞ்சம் எச்சரிக்கை வேண்டும். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

எதிலும் சிந்தித்தும் பொறுமையுடனும் செயல்படவேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 08.07.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

விட்டுக்கொடுத்து போகும் அணுகுமுறையால் மதிப்பு உயரும். பணப்புழக்கம் அமோகமாக இருக்கும். சேமிப்பு உயரும். சிலருக்கு வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். அன்புக்குரியவர்களுக்கு பரிசு வாங்கிக் கொடுப்பீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு. நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்