Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வைகாசி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர்... | Vaikasi Matha Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
வைகாசி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர்... | Vaikasi Matha Rasi Palan 2023 in TamilRepresentative Image.

வைகாசி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

வைகாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, குரு மற்றும் புதன், ரிஷபத்தில் சூரியன், கடக ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிரன் வைகாசி மாதம் 16 ஆம் தேதி மிதுனத்திலிருந்து கடக ராசிக்கும், மேஷத்தில் இருக்கும் புதன் பகவான் வைகாசி மாதம் 24 ஆம் தேதி ரிஷப ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இவ்வாறு இரண்டு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் வைகாசி மாதத்தில் 12 ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

வைகாசி மாத ராசிபலன் 2023:

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வைகாசி மாதம் மிக முக்கியமான மாதம் ஆகும். இந்த மாதம் யோகம் தரக்கூடிய மாதமாக அமைகிறது. மேஷ ராசிக்காரர்களின் லக்னமாக அமையக் கூடிய சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமைய உள்ளார். இதனால், நேர்மறையான எண்ணங்கள் உருவாகும். குழந்தைகளினால் வரவு மேம்படும். குழந்தைகளின் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். கலை சார்ந்த துறையில் அருமையான வரவு கிடைக்கும். மேலும் படிக்க.. 

ரிஷபம்: ரிஷப ராசி நபர்களுக்கு, ரிஷப லக்கினத்திலேயே சூரியன் இருப்பது நன்மையைத் தரக்கூடியதாக அமையும். குறிப்பாக, தாய்வழி, பெண்கள் வழி மூலமாக நன்மைகள் நடக்கக் கூடிய மாதமாக அமைகிறது. நேர்மறையான எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். உடல் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழிலில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்வீர்கள். ரிஷப லக்கினத்தில் சூரியன் திகழ்வது உங்களுக்கு மேன்மையைத் தரும். மேலும் படிக்க.. 

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் 12 ஆவது இடத்தில் விரயஸ்தானம் ஏற்பட உள்ளதால், உடல் நலத்தில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். கட்டாயம் வெளிநாடு செல்லக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். கடன் அதிகமாக இருக்கும் சூழலில் உங்களது சொந்த முயற்சியினாலோ, உடன் பிறந்தவர்கள், பெற்றோர்கள், மாமனார் வழி உறவினர்கள் போன்றோரின் உதவியுடன் அடைக்கப்படும். புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டிய சூழல் ஏற்படும். மேலும் படிக்க.. 

கடகம்: இந்த வைகாசி மாதத்தில் கடக ராசி அல்லது கடக லக்கினம் சார்ந்த நபர்களுக்கு ஏராளமான மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். தந்தை வழியில் மிகுந்த நற்பலன்களைப் பெறுவீர்கள். அரசு வழி சார்ந்து மிகப் பெரிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இந்த மாதம் ஏராளமான நல்ல விஷயங்கள் நடக்கக் கூடிய மாதமாக அமைகிறது. மிகப்பெரிய வேலை ப்ராப்தம், தொழில் ப்ராப்தம் என அனைத்தும் சிறப்பாக உள்ளது. மகன் மூலமாக மிகப்பெரிய அருமையான வாய்ப்பைப் பெறுவீர்கள். மேலும் படிக்க.. 

சிம்மம்: சிம்ம ராசியினருக்கு, பாக்கிய ஸ்தானமான 9வது இடத்தில் இருந்த சூரியன் 2,3 நட்சத்திரங்களைக் கடந்து தற்போது தன்னுடைய நட்சத்திரத்தில் அமர்ந்து இருக்கிறார். இதனால் பலர் மருத்துவராகிரத்திற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த நீட் தேர்வில் சிம்ம ராசியினர் அதிக பட்ச மதிப்பெண்களுடன் பாஸ் செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதனை பெற்றோர்கள் கவலை பட வேண்டாம். அரசாங்க வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு கூடிய விரைவில் வேலை கிடைக்கும். மேலும் படிக்க.. 

கன்னி: பழங்கால சிவபெருமானின் கோவிலுக்கு சென்று வர வாய்ப்புள்ளது. அல்லது பூர்வீக கோவிலுக்கு நீங்கள் தர்மகர்த்தாவாக நியமிக்க படலாம். அல்லது பூர்வீக கோவிலுக்கு வைகாசி மாதம் முழுக்க தான தர்மங்கள் செய்தால் கோடான கோடி புண்ணியம் கிடைக்கும். குழந்தை மூலமாக எண்ணற்ற மகிழ்ச்சி உங்களை வந்து சேரும். அரசாங்கம் சார்ந்த உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். மேலும் படிக்க.. 

துலாம்: வீட்டில் இருக்கும் பெரியவர்களின் உடல்நிலையில் அதிக கவனம் வேண்டும். பீபி, கொலஸ்ட்ரால், சுகர் இருப்பவர்கள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பெண்கள் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை அறிந்து செயல்பட வேண்டும். வண்டி வாகனங்களில் பிரயாணம் செய்யும் போது ஆவணங்களை சரியாக எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் படிக்க.. 

விருச்சிகம்: மனைவி மற்றும் அவரின் பெற்றோர்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்விற்கான வாய்ப்பு ஏற்படும். மனதில் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு அமையும். மேலும் அதில் நீங்கள் நல்ல முன்னேற்றத்தை காணும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். உயர் கல்வி நீங்கள் நினைத்த இடத்தில் அமையும். மேலும் படிக்க.. 

தனுசு: குருபகவானை ராசி அதிபதியாக கொண்ட தனுசு ராசியினரே! இந்த வைகாசி மாதத்தில் தொழில் சார்ந்த விஷயத்தில் நல்ல மாற்றம் வரும். மந்தமாக இருந்த வியாபாரத்தில் திடீர் லாபம் கிடைக்கும். நினைத்த காரியம் நடைபெறும். வேலை மாற்றம் செய்ய விரும்புவோருக்கு அற்புதமான காலக்கட்டம். இருப்பினும், உத்தியோகத்தில் இருப்போருக்கு எதிர்மறையான எதிர்ப்புகள் வலுக்கும். எனவே உஷாராக இருக்க வேண்டும். எதையும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். மேலும் படிக்க.. 

மகரம்: உங்க ராசிக்கு 5ம் இடத்தில் அமர்ந்திருக்கும் சூரியனால், இந்த மாதத்தில் மகர ராசியினருடைய ஆண் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும். அரசியல்வாதியாக இருப்பவர்கள் பதவி உயர்வு வரும். தந்தையிடம் எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் நடந்து முடியும். மாமனார்வழியில் ஆதாயம் உண்டு. ஒரு சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை கொடுக்கும். இருபாலினத்தவருக்கும் மனதிற்கு பிடித்தவர் வாழ்க்கை துணையாக வர வாய்ப்புண்டு. மேலும் படிக்க.. 

கும்பம்: நீண்ட நாட்களாக இழுத்தடித்த வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் இருந்து சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கடன் தொல்லையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு ஆறுதலான மாதம் என்றே சொல்லலாம். எதிர்பாரா பணவரவு பல நெருக்கடிகளை நீக்கும். விவசாயம் சார்ந்த தொழில் செய்வோருக்கு லாபம் தரக்கூடிய மாதமாக இருக்கும். புது மனை, வீடு, வண்டி, வாகனம் வாங்குவது, விற்பது இரண்டுமே நடக்கும். மாணவ, மாணவிகளுக்கு சாதமான மாதம். மேலும் படிக்க.. 

மீனம்: அரசியல்வாதிகளுக்கு யோகம் ஒருபக்கம் இருந்தாலும், வாகனம் மற்றும் பெண்களால் பிரச்சனைகள் வரும் கவனம் தேவை. மேலும், இந்த செவ்வாய், சுக்கிரனின் சேர்க்கையால் மீன ராசியில் பிறந்த குழந்தைகளுக்கு உடல்நல கோளாறுகள் வரும். முன்கோபம், அவசர புத்தியால் அவ்வப்போது சிக்கல்கள் தோன்றி மறையும். சூதானமாக இருந்துக் கொள்வதோடு கோபத்தை குறைத்துக் கொள்வதும் நல்லது. மேலும் படிக்க.. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்