Thu ,Dec 08, 2022

சென்செக்ஸ் 62,410.68
-215.68(-0.34%)
நிஃப்டி18,560.50
-82.25(-0.44%)
USD
81.57
Exclusive

40 வயதிலும் அதே இளமையுடன் இருக்கும் த்ரிஷாவின் அழகு ரகசியம்.. 

Nandhinipriya Ganeshan November 12, 2022 & 11:45 [IST]
40 வயதிலும் அதே இளமையுடன் இருக்கும் த்ரிஷாவின் அழகு ரகசியம்.. Representative Image.

தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நட்சத்திரமாய் ஜொலிப்பவர் நடிகை த்ரிஷா. ஜோடி என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான த்ரிஷா, தற்போது 40 வயதை நெறுங்கவுள்ளார். இவரது வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகளை கடந்து தனக்கென ஒரு தனி மரியாதையும், புகழையும் சம்பாதித்து வைத்திருக்கிறார். சிறிது காலம் அதிகமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த த்ரிஷா. தற்போது பொன்னியின் செல்வன் என்ற படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரது நெஞ்சங்களையும் கொள்ளையடித்துள்ளார்.

நடிகை சமந்தாவை பாதித்திருக்கும் Myositis நோயின் காரணங்களும் அறிகுறிகளும்..

40 வயதிலும் அதே இளமையுடன் இருக்கும் த்ரிஷாவின் அழகு ரகசியம்.. Representative Image

ஆமாங்க, 20 வருடங்களுக்கு முன்பு எப்படி பார்த்தோமோ அதே முக அழகையும், உடல் அழகையும் கொண்டிருக்கிறார். இதற்காக இவர் என்ன தான் அப்படி ஸ்பெஷலாக செய்கிறார் என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கும். 40 வயதிலும் இளமையாக இருப்பதற்கு அப்படி இவர் என்ன தான் செய்கிறார் என்று தெரிந்துக் கொள்ளலாம்.

த்ரிஷா கிருஷ்ணன் தனது உருவம் தான் தனது மிகப்பெரிய சொத்து என்பதை நன்கு உணர்ந்து, உடலமைப்பைப் பராமரிக்க வழக்கமான உடற்பயிற்சிகளுக்கும், அழகுகுறிப்புகளுக்கும் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறாராம். இது குறித்து இவரே கூறும் டிப்ஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாராவின் பளிச்சென்ற மினுமினுப்பான சருமத்துக்கு இந்த பொருள் தான் காரணமா? 

40 வயதிலும் அதே இளமையுடன் இருக்கும் த்ரிஷாவின் அழகு ரகசியம்.. Representative Image

த்ரிஷா எப்போதும் தன்னை எப்போது நீரேற்றமாக வைத்துக்கொள்ள நாள் முழுக்க நிறைய தண்ணீர் குடிப்பாராம். அதுமட்டுமல்லாமல், ஆரஞ்சு மற்றும் மாதுளை போன்ற ஃபுரூட் ஜூஸ் அதிகமாக குடிப்பாராம். அதேபோல் டீ, காபி குடிப்பதை விட ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் நிறைந்த க்ரீன் டீ தான் எடுத்துக்கொள்வாராம்.

காலை உணவை எதற்காகவும் தவிர்க்க மாட்டாராம். அதுவும் காலை நேரத்தில் பொரித்த, வறுத்த உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிடுவாராம். அதேபோல், வெளி உணவுகளை தொடவே மாட்டாராம். வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடுவாராம். அதிலும் ஆம்லெட், தயிர், ரொட்டி வகைகள் என்றால் இவருக்கு மிகவும் பிடிக்குமாம்.

40 வயதிலும் இளமையாக இருக்கும் தல தோனியின் ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா?

40 வயதிலும் அதே இளமையுடன் இருக்கும் த்ரிஷாவின் அழகு ரகசியம்.. Representative Image

இவர் சிட்ரஸ் டயட் ஒன்றை கடைப்பிடித்துவருகிறாராம். அதாவது, தன்னுடைய தினசரி உணவில் எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் பிற சிட்ரஸ் பழங்களை ஏதாவது ஒரு வகையில் தவறாமல் தேர்த்துக்கொள்வாராம். இது தான் அவருடைய சருமம் இத்தனை வருடங்களுக்கு பிறகும் அதே பொலிவுடனும் பளபளப்புடனும் மினுமினுப்பாகவும் இருக்க காரணம்.

நயன்தாராவின் பளிச்சென்ற மற்றும் பளபளப்பான சருமத்தின் ரகசியம்!!

 

40 வயதிலும் அதே இளமையுடன் இருக்கும் த்ரிஷாவின் அழகு ரகசியம்.. Representative Image

தினமும் சில மணி நேரங்களாவது உடற்பயிற்சி செய்தே தீர வேண்டும் என்ற உறுதியோடு இருப்பாராம். அதுவும் புஷ் அப் மற்றும் பிளாங் போன்ற பயிற்சிகள் தான் மிகவும் பிடிக்குமாம். இந்த இரண்டு உடற்பயிற்கள் தான் உடலை டோனிங் செய்ய உதவுவதாகவும் கூறுகிறார். அதேப்போல் யோகா செய்வதும் அவருக்கு மன அமைதியை கொடுப்பதாகவும், மன அழுத்தத்தை சமாளிக்க உதவுவதாகவும் கூறுகிறார்.

நயன்தாரா திருமணத்தில் அணிந்திருந்த புடவையில் இத்தனை அம்சங்களா....??

40 வயதிலும் அதே இளமையுடன் இருக்கும் த்ரிஷாவின் அழகு ரகசியம்.. Representative Image

சர்க்கரை மற்றும் மைதா உணவுகளுக்கு இடமே கிடையாதாம். மீன் வகை உணவுகளை அதிகம் சாப்பிடுவாராம். ஆனால் அவருக்கு பிடித்த எந்த உணவாக இருந்தாலும் கொஞ்சமாகவே சாப்பிடுவாராம். பிடிக்கும் என்பதற்காக அதிகமாகவும் சாப்பிடக்கூடாது என்றும் அறிவுரைக் கூறுகிறார். ஸ்நாக்ஸ் எது என்றால் சொன்னால் பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ் வகைகள் தானாம்.

Also Read: எவ்வளவு வயசானாலும் இளமையா இருக்கணுமா..? அப்ப நீங்க இத கண்டிப்பா எடுத்துக்கணும்…!

Tag: Trisha's Beauty Tips | Trisha Krishnan Beauty Tips | Actress Trisha Krishnan's Diet Tips | Trisha Beauty Secrets | Trisha Krishnan Fitness And Diet Secrets | Trisha Weight Loss Secret | Actress Trisha Weight Management | Actress Trisha Diet Secret | Actress Trisha Beauty Secret | Trisha Krishnan Beauty Tips |Trisha Krishnan Diet Tips |Trisha Krishnan Fitness Tips |Trisha Krishnan Fitness And Diet Secrets |Trisha Krishnan Diet Routine |Trisha Krishnan's Diet And Workout Plans |Trishna Fitness Regime | நடிகை த்ரிஷா எடை வெயிட் லாஸ் | நடிகை த்ரிஷா ஃபிட்னஸ் சீக்ரெட் | நடிகை த்ரிஷா | த்ரிஷாவின் டயட் பிளான் | த்ரிஷா ஃபிட்னஸ்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்