Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நயன்தாராவின் பளிச்சென்ற மினுமினுப்பான சருமத்துக்கு இந்த பொருள் தான் காரணமா? 

Nandhinipriya Ganeshan October 30, 2022 & 09:00 [IST]
நயன்தாராவின் பளிச்சென்ற மினுமினுப்பான சருமத்துக்கு இந்த பொருள் தான் காரணமா? Representative Image.

நடிகர், நடிகைகளுக்கு முக்கியமானதே அழகான உடலமைப்பும், இளமையான பொலிவான சருமமும் தான். அதற்காக அவர்கள் தினமும் எத்தனையோ பராமரிப்புகளை மேற்கொள்கிறார்கள். அதிலும் பெரும்பாலானோர் விலை அதிகமான அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்தாமல் சமையலறையில் இருக்கும் இயற்கை பொருட்களை கொண்டே தங்களது சருமத்தை பராமரித்துக்கொள்கிறார்கள்.

அடேங்கப்பா… வாயடைத்து போக வைக்கும் தென்னிந்திய நடிகைகளின் சொத்து மதிப்பு… யார் டாப் தெரியுமா?

அவர்களுள் ஒருவர் தான் நம்ம லேடி சூப்பர் ஸ்டார்ட் நயன்தாரா. அட ஆமாங்க.. 37 வயதாகியும்  இன்னமும் இளமை மாறாது ஜொலிக்கும் சருமத்துடன் உலா வரும் முன்னணி நடிகையின் அழகு ரகசியமே ஒரு பாரம்பரிய பொருள் தான் என்று அவரே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். அது வேற எதுவும் இல்லைங்க நாம் அன்றாடம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் தானாம். 

நயன்தாராவின் சிம்பிளான ஃபிட்னஸ் சீக்ரெட்... 

நயன்தாராவின் பளிச்சென்ற மினுமினுப்பான சருமத்துக்கு இந்த பொருள் தான் காரணமா? Representative Image

இதை தான் அவர் மாய்ஸ்சுரைசராக பயன்படுத்தி வருகிறாராம். இவர் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் தேங்காய் எண்ணெய்க்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறாராம். பொதுவாக கேரள பெண்கள் அனைவருமே பொலிவான சருமத்தை கொண்டிருப்பதற்கும் இந்த தேங்காய் எண்ணெய் தான் காரணம். எனவே, நீங்களும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி உங்க சருமத்தை மினுமினுப்பாகவும் பொலிவாகவும் வைத்துக்கொள்ளுங்கள். 

நயன்தாராவின் பளிச்சென்ற மற்றும் பளபளப்பான சருமத்தின் ரகசியம்!!

நயன்தாராவின் பளிச்சென்ற மினுமினுப்பான சருமத்துக்கு இந்த பொருள் தான் காரணமா? Representative Image

டிப்ஸ் - 1

ஒரு பவுலில் 3 டீஸ்பூன் ஓட்ஸ் பொடி மற்றும் 1/4 கப் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து இரண்டையும் பேஸ்ட் போல கலந்துக்கொள்ளுங்கள். பிறகு அதில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து, அதன்பின் 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்துவிடுங்கள். பின்னர், குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவிடுங்கள்.

நயன்தாரா திருமணத்தில் அணிந்திருந்த புடவையில் இத்தனை அம்சங்களா....??

நயன்தாராவின் பளிச்சென்ற மினுமினுப்பான சருமத்துக்கு இந்த பொருள் தான் காரணமா? Representative Image

டிப்ஸ் - 2

ஒரு அவகேடோ பழத்தின் தசைப்பகுதியை மட்டும் பவுலில் எடுத்து ஸ்பூனை பயன்படுத்தி பேஸ்ட் போல மசித்துக்கொள்ளுங்கள். பின்னர், அதில் 4 டீஸ்பூன் அளவுக்கு தேங்காய் எண்ணெய், 2 ஸ்பூன் ஜாதிக்காய் பொடியையும் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பேஸ்ட் போல தடவி 15 நிமிடம் ஊறவைத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிடுங்கள். இதை கை, கால்களுக்கும் பயன்படுத்தலாம். இது உங்க சருமைத்தை இளமையாகவும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. 

நயன்தாரா திருமணத்தில் தாலி மட்டும் தான் தங்கம்.... வாய்பிளக்க வைக்கும் நகைகளின் மதிப்பு....!!!

நயன்தாராவின் பளிச்சென்ற மினுமினுப்பான சருமத்துக்கு இந்த பொருள் தான் காரணமா? Representative Image

டிப்ஸ் - 3

ஒரு பவுலில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 2 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் க்ரீன் டீ பவுடரை சேர்த்து கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தை கழுவிடுங்கள். இது உங்க சருமத்தில் பிரகாசத்தையும், பொலிவையும் கொடுக்கும். அதுமட்டுமல்லாமல், சருமத்தை ஈரப்பதமாகவும் வைத்துக்கொள்ளும்.

நுனி முடி வெடிச்சு இருக்கா? இத மட்டும் பண்ணுங்க.. வெடிப்பு காணாம போய்டும்..!!

நயன்தாராவின் பளிச்சென்ற மினுமினுப்பான சருமத்துக்கு இந்த பொருள் தான் காரணமா? Representative Image

டிப்ஸ் - 4

முதலில் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து லேசாக சூடேற்றி கொள்ளுங்கள். பின்னர் அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் பேக் போட்டுக்கொள்ளுங்கள். இதை 15 நிமிடம் அப்படியே விட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிக்கொள்ளுங்கள். இது உங்க முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை போக்கி, சருமத்திற்கு மினுமினுப்பை கொடுக்கிறது. தினமும் இரவில் கற்றாழை ஜெல்லை சருமத்திற்கு தடவுவதால், நடக்கும் மாயஜாலத்த பாருங்க…!!

நயன்தாராவின் பளிச்சென்ற மினுமினுப்பான சருமத்துக்கு இந்த பொருள் தான் காரணமா? Representative Image

டிப்ஸ் - 5

முதலில் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து லேசாக சூடேற்றி கொள்ளுங்கள். பின்னர் அதில் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து, அந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிடுங்கள். இது சருமத்தில் இருக்கும் கருமையை போக்கி, பொலிவைக்கொடுக்கிறது. 

என்ன பன்னாலும் முடி கொட்டுதா? இந்த ஹோம் மேட் செம்பருத்தி ஷாம்பை யூஸ் பண்ணுங்க.. அப்பறம் பாருங்க மாயாஜாலத்த....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்