Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இந்த ராசியினருக்கு ஒரு ஹாப்பி நியூஸ் காத்திருக்கிறது... | 06 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இந்த ராசியினருக்கு ஒரு ஹாப்பி நியூஸ் காத்திருக்கிறது... | 06 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம். 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 23 ஆம் நாளுக்கான [06 பிப்ரவரி 2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்:

காலை: 06.30 - 07.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

இந்த ராசியினருக்கு ஒரு ஹாப்பி நியூஸ் காத்திருக்கிறது... | 06 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

ஒரு இனிமையான செய்தி காத்திருக்கிறது. உங்க விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும். இந்த நாளை இன்னும் சிறப்பாக்க உங்க வீட்டிற்கு உறவினர்கள் வருவார்கள். சின்ன முயற்சியில் பெரிய வெற்றி கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். பணவரவும் அமோகமாக இருக்கும். ஆக மொத்தம் அதிர்ஷ்டமான நாள். இயந்திரம் தொடர்பான பணியில் இருப்பவர்கள், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இந்த ராசியினருக்கு ஒரு ஹாப்பி நியூஸ் காத்திருக்கிறது... | 06 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். விருப்பங்கள் நிறைவேறும் நாள். வராத கடன்கள் உங்களை வந்தடையும். ஒரு சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். தனம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

இந்த ராசியினருக்கு ஒரு ஹாப்பி நியூஸ் காத்திருக்கிறது... | 06 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

இதுவரை கடினமாக இருந்த காரியங்கள் கூட எளிதில் கைகூடும். நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். சிலருக்கு நவீன உபகரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தினரிடம் பேசும்போது பேச்சில் கவனம் வேண்டும். அரசுப் பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து, அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். பொருளாதாரத்தை பொறுத்த வரை அற்புதமாக இருக்கும். துணையின் விருப்பப்படி நடந்துக்கொள்வதன் மூலம் நல்லுறவு மேம்படும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இந்த ராசியினருக்கு ஒரு ஹாப்பி நியூஸ் காத்திருக்கிறது... | 06 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

தொழிலில் பொறுப்பு சுமை அதிகரிக்கும். பணத்தை கவனமாக முதலீடு செய்ய வேண்டும். குடும்பத்தில் பேச்சினால் பிரச்சனை வரும், முடிந்தவரை விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. அஜாக்கிரதையால் முக்கியமான விஷயம் நழுவும். சிலருக்கு தொழில் சம்பந்தமாக நிண்ட நாள் எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த வங்கி கடன் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 8

இந்த ராசியினருக்கு ஒரு ஹாப்பி நியூஸ் காத்திருக்கிறது... | 06 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். எந்த செயலையும் செய்வதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசித்து செயல்படவேண்டும். வேலை செய்யும் இடத்தில் எதை பேசுவதாக இருந்தாலும் யோசித்து பேச வேண்டும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவு பெருகும். கடன் பிரச்சனைகள் குறைந்து மனதில் நிம்மதி குடிக்கொள்ளும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். எதிர்பாரா செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். பணவரவு உண்டு. சேமித்து வைக்க முயற்சி செய்யுங்கள். ஆய்வு!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இந்த ராசியினருக்கு ஒரு ஹாப்பி நியூஸ் காத்திருக்கிறது... | 06 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

சந்தோஷத்திற்கு குறை இருக்காது. பெரியவர்கள் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். புதிய பெண்களிடம்  பேசும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் பேசவும். எந்த செயலையும் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் செய்வீர்கள். சிலருக்கு மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படும். வியாபாரிகளுக்கு லாபம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். விட்டுக்கொடுத்து போகும் அணுகுமுறையால் குடும்பத்திலும், பிற இடத்திலும் உங்களின் மதிப்பு உயரும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசியினருக்கு ஒரு ஹாப்பி நியூஸ் காத்திருக்கிறது... | 06 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

எதிர்கால எண்ணங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும். ஆன்மீக வழிபாடு மனஅமைதியை கொடுக்கும். நண்பர்களிடம் விளையாட்டான பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். மலை சார்ந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் எதிலும் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. தாய்மாமன் வழியில் அனுகூலப் பலன் கிடைக்கும். தனவரவு திருப்திகரமாக இருக்காது. அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். சலனம்!

அதிர்ஷ்ட நிறம்: மயில் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசியினருக்கு ஒரு ஹாப்பி நியூஸ் காத்திருக்கிறது... | 06 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

திருமணம் சம்பந்தமான பேச்சுவார்தைகளில் அனுகூப்பலன் உண்டாகும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். அஜாக்கிரதையால் சில முக்கிய பணியை கோட்டைவிடுவீர்கள். விளையாட்டான பேச்சால் காதலர்களுக்கு சண்டை உருவாகும். வரவோடு செலவும் ஒரே மாதிரி இருக்கும். தொழில் சற்று மந்தமாக காணப்படும். வாக்குறுதிகளை அளிக்கும் போது ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படவும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். மறதி!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த ராசியினருக்கு ஒரு ஹாப்பி நியூஸ் காத்திருக்கிறது... | 06 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு தாராளமாக கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சகபணியாளர்களின் உதவி கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள். உங்களுக்கு புது நம்பிக்கையும், தைரியமும் ஏற்படுத்தும் நாளாக இருக்கும். சிலருக்கு குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு விலகி, மகிழ்ச்சி அதிகரிக்கும். கடினமான பணிகளையும் எளிதாக முடித்து காட்டுவீர்கள். சிலருக்கு குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இந்த ராசியினருக்கு ஒரு ஹாப்பி நியூஸ் காத்திருக்கிறது... | 06 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

பிள்ளைகள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் லாபம் சிறப்பாகவே இருக்கும். துணையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடு விலகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு புதிய நபர்களிடம் இருந்து இன்ப அதிர்ச்சி வந்தடையும். எந்த செயலையும் உறுதியுடன் செயலாற்றுவீர்கள். அனைவரிடமும் நட்பாக பழகுவீர்கள். பணியிடத்தில் நன்மதிப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இந்த ராசியினருக்கு ஒரு ஹாப்பி நியூஸ் காத்திருக்கிறது... | 06 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும். எந்த செயல்களிலும் பொறுமையான அணுகுமுறை தேவை. எதையும் எடுத்தோம் கவுத்தோம் என்று இருந்தால், இழப்பு உங்களுக்கே. மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். உத்யோகத்தில் சிறந்த வாய்ப்புகள் தேடிவரும். பழைய பாக்கிகள் வசூலாகும். எலியும் பூனையுமாய் இருந்த கணவன் - மனைவிக்குள் நல்ல புரிதல்கள் ஏற்பட்டு அன்பு அதிகரிக்கும். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இந்த ராசியினருக்கு ஒரு ஹாப்பி நியூஸ் காத்திருக்கிறது... | 06 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

தந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். புதிய முயற்சிகள் தடைபடும். எனவே, முக்கிய முடிவுகளை தள்ளிப் போடுவது நல்லது. வியாபாரம் சுமாராகவே இருக்கும். வாகனத்தில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களால் முடியும் என்றால் மட்டும் வாக்குறுதி கொடுங்கள். நண்பர்களால் அலைச்சல் ஏற்படும் நாள். அனாவசிய செலவுகளை தவிர்த்துக் கொள்ளவும். மனைவியிடம் கேலியான பேச்சை தவிர்க்கவும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்