Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 02.05.2023

Nandhinipriya Ganeshan Updated:
பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 02.05.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 19 ஆம் நாளுக்கான [02 மே 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 02.05.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டிய நாள். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். எதிர்பாராத பயணங்கள் மூலம் அலைச்சல். பணப்புழக்கம் சுமாராக தான் இருக்கும். அனாவசிய செலவை குறைத்துக் கொள்ளவும். சோம்பேறி தனத்தால் முக்கிய விஷயம் கைநழுவி போகும். உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்காது. எனவே, எது பேசினாலும் வார்த்தையில் கவனம் வேண்டும். குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். கண் மற்றும் பல் சார்ந்த பிரச்சனை ஏற்படலாம். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 02.05.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். சிலருக்கு புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். பணியிடத்தில் கீழ் பணிபுரிவர்களால் பிரச்சனை ஏற்படலாம். உணர்ச்சிகளை கட்டுபடுத்தவும். மற்றவர்களிடம் குடும்ப விஷயத்தை பகிர்ந்துக் கொள்ளாமல் இருப்பது உத்தமம். துணையின் முழுமையான கவனிப்பு கிட்டும். வியாபாரத்தில் இருந்துவந்த தடை தாமதம் விலகும். பழைய நண்பர்களிடம் இருந்து நற்செய்தி கிடைக்கும். உறவினர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் இருந்த பயம் விலகும் நாள். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம் 

அதிர்ஷ்ட எண்: 9

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 02.05.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

பணியிடத்தில் மற்றவர்களை நம்பாமல், தானே பணிகளை மேற்கொள்வது நல்லது. பணவரவு தாராளமாகவே உள்ளது. சேமிப்பு உயரும். சிலருக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். வர்த்தக பணிகளில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டாம். சுபநிகழ்ச்சிகளில் பங்குக்கொள்வீர்கள். நெருங்கிய சொந்தபந்தங்களால் ஆதாயம் உண்டு. நீரால் ஆபத்து வரலாம், எனவே நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 4

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 02.05.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

தன்னம்பிக்கையுடம் அனைத்து காரியங்களையும் செய்வீர்கள். உங்களின் மீதே உங்களுக்கு புது நம்பிக்கை பிறக்கும். சிறப்பான நாளாக இருக்கும். பணியிடத்தில் சகஊழியர்களின் உதவி கிடைக்கும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள். சில விஷயங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்பு விலகும். புதிய முயற்சிகளில் துணிந்து இறங்குவீர்கள். விலங்குகளிடம் இருந்து தள்ளி இருப்பது நல்லது. இழுபறியான பணம் வசூலாகும். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 02.05.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

பணியிடத்தில் பனிச்சுமை காரணமாக தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள். குடும்பத்தில் கருத்துவேறுபாடு காரணமாக புதுப்பிரச்சனை தலைதூக்கும். பொறுமை முக்கியம். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், பயணங்களின் போது எச்சரிக்கை. வீட்டில் ஒருவருக்கு மருத்துவ செலவு ஏற்படும். முக்கியமான ஒரு சில காரியங்கள் கைநழுவி போகும். தந்தையிடம் அனுசரித்து நடந்துக்கொள்ளுங்கள். தடங்கல்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 6

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 02.05.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் தேடிவரும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். தொழிலில் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எழுத்து சம்பந்தமான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான நாள். வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சனைகள் குறையும். துணையிடம் இருந்த கருத்துவேறுபாடு விலகும். ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 02.05.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடன் செய்வீர்கள். கடின உழைப்பிற்கு தக்க பரிசு காத்திருக்கிறது. கால்நடை சம்பந்தமான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். பணபுழக்கம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை செய்வீர்கள். விருப்பங்கள் நிறைவேறும் நாள். பணியிடத்தில் ஏற்படும் சவால்களை ஈஸியாக சமாளிப்பீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். இழுபறியாக இருந்த தனவரவு வந்து சேரும். மனைவியிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். சாதனை!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு 

அதிர்ஷ்ட எண்: 7

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 02.05.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

கூட்டு தொழிலில் லாபம் மேம்படும். அனுசரனையான வார்த்தைகளின் மூலம் பிறரை கவர்வீர்கள். தொட்டது துலங்கும் நாள். தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணியில் சவால்களை ஈஸியாக சமாளிப்பீர்கள். சகஊழியர்களிடம் அனுசரித்து நடந்துக்கொள்வீர்கள். குழந்தைகளால் பாராட்டு உண்டு. பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். நல்ல விஷயங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். சிலருக்கு புதிய நபர்களால் மாற்றங்கள் ஏற்படும். திடீர் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 3

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 02.05.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

பூர்வீக சொத்து விற்பனை தொடர்பாக சொந்த ஊருக்கு செல்ல வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு விஷயத்தில் நல்ல செய்து வந்து சேரும். ஒரு சிலர் மற்றவரை விமர்சிப்பதால் தேவையற்ற இன்னல்களை சந்திக்க நேரிடலாம். தனவரவு திருப்திகரமாகவே இருக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் பொறுமையாக நடந்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். பரிவு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 4

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 02.05.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

அனைத்து விஷயத்திலும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பீர்கள். உறவினர்களிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகி, அவர்களின் ஆதரவை பெறுவீர்கள். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்து வைப்பீர்கள். நீண்ட நாட்களாக மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். சிலர் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காதலர்களுக்கு அற்புதமான நாள். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கு. உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 1

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 02.05.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

யாரிடம் பேசும் போதும் பேச்சில் பொறுமையும், நிதானமும் வேண்டும். எதிர்பாராத செலவுகள் கவலையை கொடுக்கும். எதிர்ப்பார்த்த சில பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்படும். பயணங்களின் போது விலையுயர்ந்த பொருட்களின் மீது கவனம். கொடுக்கல், வாங்கலிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். தொலைதூர பயணங்களை தவிர்க்கவும். நண்பர்களால் அலைச்சல் ஏற்படும். மறதி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 8

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 02.05.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

எல்லா பணிகளையும் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபார பணியில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். கடன் சம்பந்தமான பிரச்சனைகளை சமாளிக்கும் அளவிற்கு பணவரவு தாராளமாக இருக்கும். ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். எதிர்பாலினத்தவரால் ஆதாயம் உண்டு. வங்கி சம்பந்தமான பணிகளில் கவனம் தேவைப்படும் நாள். குடும்பத்தில் புதிய நபரால் மகிழ்ச்சி சூழல் உண்டாகும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்