Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

என்ன நடந்தாலும் பொறுமையா இருக்கனும்...இல்லைனா கஷ்டம் தான்! | 04 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Priyanka Hochumin Updated:
என்ன நடந்தாலும் பொறுமையா இருக்கனும்...இல்லைனா கஷ்டம் தான்! | 04 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 21 ஆம் நாளுக்கான  [04 மே 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்:

காலை: 10.30 – 11.30 வரை

மாலை: -

என்ன நடந்தாலும் பொறுமையா இருக்கனும்...இல்லைனா கஷ்டம் தான்! | 04 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

சுபகாரியங்கள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உங்களுடைய அன்றாட பழக்கவழக்கத்தில் சில மாற்றங்கள் தென்படும். உடன் பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். உங்களை விட்டு விலகி சென்றவர்கள் பற்றிய ஞாபகங்கள் தோன்றி மறையும். வாழ்க்கைத் துணையுடனான ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதனால் மனதில் ஒரு விதமான நிம்மதி கிடைக்கும். பொது மக்களின் ஆதரவின் மூலம் மேன்மை அடைவீர்கள். உங்களுக்கு எதிராக இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட நிறம்: 9

என்ன நடந்தாலும் பொறுமையா இருக்கனும்...இல்லைனா கஷ்டம் தான்! | 04 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

தொழில் செய்பவராக இருந்தால் உங்களிடம் வேலை செய்பவர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். உங்களுக்கு தேவையில்லாத விஷயங்களில் பேசுவதை தவிர்க்கவும். திடீர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். மற்றவர்கப் பற்றிய கருத்துக்களை வெளிப்படையாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. செல்லப்பிராணிகள் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் விலகும். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

என்ன நடந்தாலும் பொறுமையா இருக்கனும்...இல்லைனா கஷ்டம் தான்! | 04 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

இதுவரை நெருக்கடி தந்த விஷயங்கள் குறைய ஆரம்பிக்கும். பல நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் பற்றிய புரிதல் உண்டாகும். கேளிக்கை சார்ந்த செயல்பாடுகளில் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோக பணியில் டென்ஷன் இல்லாமல் பொறுமையாக செயல்பட வேண்டும். இலக்கியம் சார்ந்த பணியில் ஆர்வம் அதிகரிக்கும். இனம்புரியாத சிந்தனைகள் மூலம் கற்பனை திறன் அதிகரிக்கும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 3

என்ன நடந்தாலும் பொறுமையா இருக்கனும்...இல்லைனா கஷ்டம் தான்! | 04 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

செய்கின்ற செயலில் உங்களுக்கு தெரிந்த அனுபவம் அறிவு வெளிப்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் நமக்கு சாதகமான சூழல் அமையும். மனதில் புது விதமான சிந்தனைகள் தோன்றும். சொந்த ஊர் செல்லும் வாய்ப்புகள் அமையும். செல்வத்தை அதிகரிக்கும் தொடர்பான சிந்தனை ஏற்படும். வியாபார பணியில் உங்களுக்கு அனுகூலமான சூழல் அமையும். பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2   

என்ன நடந்தாலும் பொறுமையா இருக்கனும்...இல்லைனா கஷ்டம் தான்! | 04 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

எதிர்பாராத பயணங்களின் மெல்லாம் புதிய அனுபவம் கிடைக்கும். தகவல் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். இழுபறியான சொத்துக்களை விற்பனை செய்யும் போது நல்ல லாபம் கிடைக்கும். கணிதம் தொடர்பான பணியில் ஆர்வம் மேம்படும். அருகில் இருப்பவர்களிடம் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களின் ஆலோசனையால் மனதில் மாற்றம் ஏற்படும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

என்ன நடந்தாலும் பொறுமையா இருக்கனும்...இல்லைனா கஷ்டம் தான்! | 04 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். புதிய உணவுகள் மீது ஆர்வம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் இதுவரை இருந்திருந்தால் அது குறையும். முதலீடு சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். ஏனெனினும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். கல்வியில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்ப்புகள் அமையும். பரிசு!

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் நிறம்

அதிர்ஷ்ட எண்:

என்ன நடந்தாலும் பொறுமையா இருக்கனும்...இல்லைனா கஷ்டம் தான்! | 04 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் இறக்கம் இரண்டுமே இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போது அதிக கவனம் வேண்டும். மற்றவர்களிடம் கனிவாக பேசுவதனால் உங்கள் மீதான மதிப்பு மேம்படும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் தொடர்பான யோசனை அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். சமூக பணியில் இருபவர்களிடத்தில் அனுசரித்து செல்வதால் நமக்கு ஆதாயம் கிடைக்கும். தன்னம்பிக்கை!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

என்ன நடந்தாலும் பொறுமையா இருக்கனும்...இல்லைனா கஷ்டம் தான்! | 04 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

மற்றவர்களுக்கு கடினமான வேலைகளையும் நீங்கள் தனித்து செய்து முடித்து விடுவீர்கள். எந்த செயலை செய்தாலும் அதனை தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படுத்தவும். எதிர்பாராத சில தடைகளின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். சமூகம் தொடர்பான விஷயங்களில் புதிய கண்ணோட்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் வேண்டும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் வரும். எதிர்கால நிமிர்த்தமான தேடல் அதிகரிக்கும். திறமை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்:

என்ன நடந்தாலும் பொறுமையா இருக்கனும்...இல்லைனா கஷ்டம் தான்! | 04 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிப்பதால் மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். மருமகன் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். தனவரவுகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ஆரம்பிக்கும் எண்ணங்கள் தோன்றும். நெருக்கமான நண்பர்கள் பற்றிய சிந்தனைகள் வந்து போகும். தெளிவு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

என்ன நடந்தாலும் பொறுமையா இருக்கனும்...இல்லைனா கஷ்டம் தான்! | 04 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

எந்த விஷயத்திலும் திருப்தியற்ற மனநிலை உண்டாகும். உத்தியோக பணியில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உற்பத்தி தொடர்பான துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் வழியில் சாதகமான சூழல் அமையும். மாமியாருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். மூத்த சகோதரர்களின் எண்ணங்கள் நிறைவேற்றுவீர்கள். சங்கம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: இளம் சாம்பல்

அதிர்ஷ்ட எண்:

என்ன நடந்தாலும் பொறுமையா இருக்கனும்...இல்லைனா கஷ்டம் தான்! | 04 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இறை சார்ந்த பணியில் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். இதுவரை தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உலகியல் அனுபவங்களின் மூலம் சிந்தனையில் மாற்றம் ஏற்படும். நீதி துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். சர்வதேசத்து வணீகத்தில் விவேகத்துடன் செயல்பட்டால் லாபம் அதிகரிக்கும். செல்வம்!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

என்ன நடந்தாலும் பொறுமையா இருக்கனும்...இல்லைனா கஷ்டம் தான்! | 04 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் கால தாமதம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். உணவு சார்ந்த விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். உடனிருப்பவர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில நிகழ்வுகளின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்