Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும் கவனமும் தேவை.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.03.2023

Nandhinipriya Ganeshan Updated:
யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும் கவனமும் தேவை.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.03.2023Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 02 ஆம் நாளுக்கான [16 மார்ச் 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்:

காலை: 10.30 - 11.30 வரை

மாலை: இல்லை

யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும் கவனமும் தேவை.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.03.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

ரொம்ப சிந்திப்பதை தவிர்ப்பது நல்லது. பணியில் பதட்டம் காணப்படும். நிதானத்தோடு செயல்படவும். குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்கள் தோன்றும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எதிர்பாரா செலவுகள் வரும், பார்த்து பக்குவமாக செலவு செய்யுங்கள். தொழில் மந்தமாக தான் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும்போது வார்த்தையில் கவனம் தேவை. சகோதரிகளால் அலைச்சல் ஏற்படும். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும் கவனமும் தேவை.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.03.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

அனுசரனையான அணுகுமுறை வெற்றியை தேடி தரும். வீட்டில் ரொம்ப நாட்களாக நின்று போயிருந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். இதனால் மனதில் ஒரு நிம்மதி உண்டாகும். உறவினர், நண்பர்களுடன் சந்தோசமான தருணத்தை அனுபவிப்பீர்கள். பணியிடத்தில் சின்ன வாய்ப்பாக இருந்தாலும் புத்திசாலி தனமாக சிந்தித்து அவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள முயற்சிப் பண்ணுங்க. வியாபாரத்தில், தொழிலில் அதிக லாபம் ஈட்டும் நாள். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும் கவனமும் தேவை.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.03.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

எதை செய்தாலும் கவனத்தோடு செய்ய வேண்டும். யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும் கவனமும் அதிகம் இருக்க வேண்டும். நீங்கபாட்டுக்கு ஏனோதானோ என்று பேசிவிட்டு பின்னாடி வருத்தப்பட வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும். டென்ஷன் ஆகாமல் பிளான் பண்ணி அதற்கேற்றவாறு வேலையை முடிக்க பாருங்க. பெற்றோர்களிடத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும் கவனமும் தேவை.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.03.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

ரொம்பநாளா அவதிப்பட்டு கொண்டிருந்து நோயில் இருந்து விடுபடுவீர்கள். மனதில் இருக்கும் எதிர்மறையான எண்ணங்களை நீக்குவது பலன் அளிக்கும். நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருந்தால் சாதகமான விளைவுகளைக் காணமுடியும். தாய்வழி உறவுகள் மூலம் பணஉதவி கிடைக்க வாய்ப்புண்டு. பணியிடத்தில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். நீர்நிலைகளுக்கு தவிர்க்கவும். கடன் வாங்குவதையும் தவிர்க்கவும். பிரீதி!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும் கவனமும் தேவை.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.03.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

குடும்ப பொறுப்புகளால் சிறிது அலைச்சல் ஏற்படும். திறமையை பயன்படுத்தி பணியில் வெற்றி பெறுவீர்கள். உடன் பணிபுரிவர்கள் உங்க திறமையை பார்த்து வியந்து பாராட்டுவார்கள். முன்னோர்கள் சொத்து கிடைப்பது பற்றிய செய்தி வந்து சேரும். துணை உங்க மீது அன்பையும் பாசத்தையும் பொழிந்து தள்ளுவார். வியாபாரத்தில் முதலில் சில தடைகள் வந்தாலும் பின்னர் முன்னேற்றம் காணப்படும். நண்பர்கள் வழியில் இன்பஅதிர்ச்சி காத்திருக்கிறது. ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும் கவனமும் தேவை.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.03.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

உங்கள் விருப்பங்கள் எந்த தடையும் இன்றி நிறைவேறும் நாள். தொலைத்தூரத்தில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். இதனால் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. பணி சம்பந்தமான பயணம் மேற்கொள்வீர்கள். பணப்புழக்கம் அமோகமாக இருக்கும். இருந்தாலும் செலவு செய்யும் போது கவனத்தோடு இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. காதலர்களுக்கு இடையே இருந்த மனக்கசப்பு விலகி நெருக்கம் ஏற்படும். பாசம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும் கவனமும் தேவை.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.03.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

புதிய தொழிலில் முதலீடு செய்ய உகந்த நாள். புத்திசாலி தனத்தை பயன்படுத்தினால் நிறைய சாதிக்கலாம். முடிந்த வரை சுய முன்னேற்றத்திற்கான முயற்சி மேற்கொள்ளுங்கள். பணிபுரியும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் இருக்கும். குடும்பத்தில் ஆனந்தம் விளையாடும். நீங்களும் சந்தோசமாக இருப்பீர்கள், மற்றவர்களையும் சந்தோசப்படுத்துவீர்கள். தேவையற்ற கவலைகளில் இருந்து விலகி வாழ்க்கையை நடத்த முயற்சியுங்கள். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 7

யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும் கவனமும் தேவை.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.03.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். உங்க நண்பர்களிடமும், புதுசா அறிமுகமானவர்களிடமும் ஜாக்கிரதையாக இருங்கள். தேவையில்லாமல் எதையும் பேசிவிடாதீர்கள். அப்பறம் ஆப்பு வைத்துவிடுவார்கள். எதையும் பொறுமையுடன் கையாண்டால் நல்ல பலன் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே சின்ன சின்ன சலசலப்பு காணப்படும். நீங்க விட்டுகொடுத்து போவதன் மூலம் பெரிய சண்டையை தடுக்கலாம். பணவரவு சுமாராக தான் இருக்கும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும் கவனமும் தேவை.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.03.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

வேலை செய்யும் இடத்தில் எதிர்பாலினத்தவரால் நன்மை உண்டு. வீட்டில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். எதிர்பாரா செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். எதையும் நம்பிக்கையோடு செய்தால் வெற்றி உங்கள் கையில். எந்த நிலையிலும் பொறுமையை மட்டும் இழந்துவிட கூடாது. பணவரவு உண்டு. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத லாபங்கள் மனதை குளிர்விக்கலாம். வாகனத்தில் செல்லும்போது மட்டும் நிதானம் தேவை. இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும் கவனமும் தேவை.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.03.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

குடும்பத்தினரின் நலன் குறித்த எண்ணங்கள் மனதில் அவ்வப்போது வந்துபோகும். எதிர்காலத்தை பற்றிய சிந்தனையால் பணியில் தீவிரமாக இறங்குவீர்கள். நீதிமன்றத்தில் பணம் சம்பந்தமான ஏதேனும் விஷயம் இருந்தால், அதில் வெற்றி காண்பீர்கள். நம்பிக்கையோடு முயற்சித்தால் எதிலும் வெற்றி அடைவீர்கள். உறவினர்கள் எதிர்பாராத பரிசுகள் கொண்டு வருவார்கள். ஆனால், உங்களிடம் ஏதாவது உதவியை எதிர்பார்ப்பார்கள். சிலருக்கு புதிய நட்பு கிடைக்கும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும் கவனமும் தேவை.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.03.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

எதையும் சரியாக திட்டமிட்டு, நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பெற்றோரிடத்திலும், துணையுடனும் சில விஷயங்களில் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் இருக்கும். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும். யாருக்காவும் உங்களுடைய முயற்சியை விட்டுக்கொடுக்காதீர்கள். குடும்பத்தினரால் நன்மை உண்டு. உயர் பதவியில் இருப்பவர்கள் மட்டும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஊக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும் கவனமும் தேவை.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.03.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

பொறுப்புகள் அதிகமாக காணப்படும். கவனக்குறைவால் வேலை செய்யும் இடத்தில் சின்ன சலசலப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரம் சுமாராக இருக்கும். தாயின் உடல்நிலையில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. வாக்குறிதிகளை கொடுப்பதை தவிர்க்கவும். திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். நண்பர்களால் அலைச்சல் ஏற்படும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். பயணம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 2


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்