Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீணாக வார்த்தைகளை வெளிப்படுத்தினால் சிக்கல் தான்..! | 30 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Priyanka Hochumin Updated:
வீணாக வார்த்தைகளை வெளிப்படுத்தினால் சிக்கல் தான்..! | 30 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 17 ஆம் நாளுக்கான  [30 ஏப்ரல் 2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்:

காலை: 07.30 – 08.30 வரை

மாலை: 03.30 – 04.30 வரை

வீணாக வார்த்தைகளை வெளிப்படுத்தினால் சிக்கல் தான்..! | 30 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

எந்த எதிர்பார்ப்பும் இன்றி பெருந்தன்மையுடன் செயல்படுவதால் நட்பு வட்டாரம் அதிகரிக்கும். மனதில் புதிய சிந்தனைகள் மேம்படும். தொழிலில் மறைமுகமாக இருக்கும் எதிர்ப்புகளை அறிந்து செயல்பாகுவீர்கள். அதனை முறியடித்து வெற்றியும் பெறுவீர்கள். உயர்கல்வியில் உங்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். நிர்வாக பணியில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். உத்தியோக பணியில் பொறுப்பு அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

வீணாக வார்த்தைகளை வெளிப்படுத்தினால் சிக்கல் தான்..! | 30 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

உத்தியோக பணியில் இருப்பவர்கள் அதிக கவனத்துடன் செயல் பட வேண்டும். எந்த செயலிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பீர்கள். மாணவர்கள் படங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்றம், இறக்கமுமாக இருக்கும். புத்திசாலித்தனமாக செயல் படுவதன் மூலம் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். விவசாய பணிக்கு நிமிர்த்தமான ஆலோசனை கிடைக்கும். மனதில் இருக்கும் விஷயங்களை வெளிப்படையாக பேசுவதனால் தெளிவு உண்டாகும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

வீணாக வார்த்தைகளை வெளிப்படுத்தினால் சிக்கல் தான்..! | 30 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

தொழில் செய்பவர்கள் வேலையாட்களின் தன்மையை புரிந்து கொள்வீர்கள். திடீரென காதணிகள் மீது ஆர்வம் ஏற்படும். பயணங்களால் மனதில் மாற்றம் ஏற்படும். வீட்டில் இருப்பவர்களின் தேவைகளை அறிந்து அதனை ந நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். சொத்து சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். வீர செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணியில் இருப்பவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு உண்டாகும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

வீணாக வார்த்தைகளை வெளிப்படுத்தினால் சிக்கல் தான்..! | 30 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

அரசு பணியில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். நயமான பேச்சுக்களால் உங்களுக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சூழ்நிலைக்கு ஏற்றாவாறு கருத்துக்களை வெளிப்படுத்துவீர்கள். விவசாய பணியில் லாபம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4  

வீணாக வார்த்தைகளை வெளிப்படுத்தினால் சிக்கல் தான்..! | 30 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது ஆலோசனைப் பெற்று முடிவெடுப்பது நல்லது. மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். காதில் சிறு சிறு வலிகள் வந்து மறையும். நீங்கள் சிந்திப்பதில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். பல நாட்களாக தடங்களாகும் பணியை செய்து முடிப்பீர்கள். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெண் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

வீணாக வார்த்தைகளை வெளிப்படுத்தினால் சிக்கல் தான்..! | 30 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உங்களின் பேச்சில் அனுபவம் தெரியும். பல நாட்களாக வராத தனவரவு உங்களை வந்து சேரும். எதிர்பாராத பயணங்களின் மூலம் அறிமுகம் கிடைக்கும். உபரி வருமானம் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லது. ஆடம்பர பொருட்கள் மீதான ஆர்வம் ஏற்படும். தனம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 7

வீணாக வார்த்தைகளை வெளிப்படுத்தினால் சிக்கல் தான்..! | 30 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மனதளவில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார பணியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். காலை சார்ந்த பணியில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் தோற்றப்பொலிவு சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உயர்கல்வியில் உங்களுக்கு சாதகமான சூழல் அமையும். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

வீணாக வார்த்தைகளை வெளிப்படுத்தினால் சிக்கல் தான்..! | 30 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

செல்வச் சேர்க்கை சம்மந்தமான சிந்தனை மேம்படும். உயர் அதிகாரிகள் மூலம் ஆதாயம் ஏற்படும். மனதில் புதிய சிந்தனைகள் பிறக்கும். கால்நடை தொடர்பான பணியில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் வர்த்தக பணியில் மேன்மை ஏற்படும். எதிர்பார்க்காத பயணங்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். பணிவு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

வீணாக வார்த்தைகளை வெளிப்படுத்தினால் சிக்கல் தான்..! | 30 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

உத்தியோக பணியில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மேம்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். வர்த்தக பணியில் விவேகமாக செயல்பட வேண்டும். நெருக்கமானவர்களிடம் சற்று விட்டு கொடுத்து போவது நல்லது. வியாபார பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: வெண் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

வீணாக வார்த்தைகளை வெளிப்படுத்தினால் சிக்கல் தான்..! | 30 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சமூக பணியில் அனுபவம் அதிகரிக்கும். தொழில் நிமித்தமான பணியில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். அரசு பணியில் கவனத்துடன் செயல் பட வேண்டும்.  உணர்ச்சிவசம் படாமல் பொறுமையாக செயல்படுவது நல்லது. மனதில் இனம்புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்படும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 7 

வீணாக வார்த்தைகளை வெளிப்படுத்தினால் சிக்கல் தான்..! | 30 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

உத்தியோக பணியில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் உள்ள தந்திரங்களை புரிந்து செயல்படுவீர்கள். வெளியூர் வர்த்தக பணியில் மேன்மை உண்டாகும். சகோதரர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணையுடன் பயணம் சென்று மகிழ்வீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

வீணாக வார்த்தைகளை வெளிப்படுத்தினால் சிக்கல் தான்..! | 30 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

முயற்சி ஏற்றம் பலன் கிடைக்கும். இதுவரை நெருக்கடியாக இருந்து வந்த சூழ்நிலைகள் குறையும். உடன் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். உத்தியோக பணியில் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் கட்டாயம் ஏற்படும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். மற்றவர்கள் மீதான கண்ணணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். திறமை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்