Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பணியிடத்தில் கவனமாக இருக்கணும்.. இல்லைனா பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.. | 11.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Gowthami Subramani Updated:
பணியிடத்தில் கவனமாக இருக்கணும்.. இல்லைனா பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.. | 11.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம் 28 ஆம் நாளுக்கான [11 ஜூன்2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 07.30 – 08.30 வரை

மாலை: 03.30 – 04.30 வரை

பணியிடத்தில் கவனமாக இருக்கணும்.. இல்லைனா பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.. | 11.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வாய்ப்புகளினால், முன்னேற்றம் உண்டாகலாம். ஆன்மீகம் சார்ந்த பணிகளில் மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுவீர்கள். மூத்த உடன் பிறப்புகளின் வழியில் சுபகாரியங்கள் ஏற்படும். உறவினர்களின் வழி மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகும். கலை சார்ந்த செயல்பாடுகளில் உங்களின் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடு அடையும். இருப்பினும் சிக்கனத்துடன் செலவு செய்வது நல்லது. உடன் பிறந்தவர்களின் வழி மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகலாம். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

பணியிடத்தில் கவனமாக இருக்கணும்.. இல்லைனா பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.. | 11.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

மனதில் புதுவிதமான மாற்றங்கள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு சார்ந்த காரியங்களில் இருந்து வந்த இழுபறிகள் குறைந்து பயங்களைப் பெறுவீர்கள். எதிர்காலம் சார்ந்த இலக்குகளை அடையும் வண்ணம் செயல்படுவீர்கள். பழைய நினைவுகளால், மாற்றமான சூழல் உண்டாகும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். கடினமான காரியங்களையும் முயற்சி செய்து வெற்றி பெறுவதற்கான வழிகளைத் தேடுவீர்கள். உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் இல்லை. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

பணியிடத்தில் கவனமாக இருக்கணும்.. இல்லைனா பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.. | 11.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

புதிய நண்பர்கள் கிடைப்பர். நண்பர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். மகிழ்ச்சி கிடைக்கும். சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புது விஷயங்களில் அதிக ஆர்வம் ஏற்படும். மேலும், பெரியோர்களின் சந்திப்பு மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் உங்களது நிர்வாகத் திறமைகள் வெளிப்படும். கணவன், மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகள் வழி நன்மைகள் உண்டாகும். உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். வெளி உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது உத்தமம் . நலம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

பணியிடத்தில் கவனமாக இருக்கணும்.. இல்லைனா பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.. | 11.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

உத்தியோகப் பணிகளில் அதிக கவனத்துடன் செயல்படுவது சிறப்பு. இருப்பினும், உங்கள் திறமைகளால் பாராட்டுகளைப் பெறுவீர்க்ள். வெளியூர் பயணங்கள் அலைச்சல்கள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் புத்ய அனுபவம் ஏற்படும். சமூகப் பணிகளில் அனுசரித்துச் செல்வது சிறப்பு. உடன் பிறந்தவர்களின் வழியில் சிறு சிறு விவாதங்கள் ஏற்படும். பொறுமையுடன் செயல்பட்டால், பிரச்சனையைத் தவிர்க்கலாம். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் அதிகமாகும். பணி மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். ஊக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

பணியிடத்தில் கவனமாக இருக்கணும்.. இல்லைனா பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.. | 11.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

உங்கள் எண்ணங்களில் மாற்றம் உண்டாகலாம். எந்த காரியமாக இருந்தாலும், சிந்தித்து செயல்படுவது சிறப்பைத் தரும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து செயல்பட வேண்டிய சிறப்பான நாளாக அமைகிறது. தந்தை வழியில் ஆதாயங்களைப் பெறுவீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். மக்கள் தொடர்பு பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில இடங்களில் உணர்வுப் பூர்வமாக செயல்படும் சூழல் உண்டாகும். ஆனால், பொறுமையுடன் செயல்பட்டால், பிரச்சனையைத் தவிர்க்கலாம். முதலீடுகளில் ஆதாயம் கிடைக்கும். எதற்கும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

பணியிடத்தில் கவனமாக இருக்கணும்.. இல்லைனா பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.. | 11.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

உங்களுக்கு நெருக்கமானவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் பொறுப்பில் உள்ளவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வீட்டின் உறவினர்கள் வழியில் அனுகூலமான சூழல் உண்டாகும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு ஏற்ற செயல்களைச் செய்து, பாராட்டுகளைப் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் உங்களின் மதிப்பும், மரியாதையும் மேலோங்கும். அனுபவமான பேச்சுக்களால் உங்களின் எதிர்பர்ப்புகள் நிறைவேறும். வியாபார பணிகளில் லாபம் பெறலாம். உத்தியோகத்தில் ஒத்துழைப்புகளைப் பெறுவீர்கள். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். இது நன்மையைத் தரும்.  ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தனர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

பணியிடத்தில் கவனமாக இருக்கணும்.. இல்லைனா பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.. | 11.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

நீண்ட நாள்களாக இருந்து வந்த ஆசைகள் நிறைவேறும். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கக் கூடிய மனப்பக்குவம் பெறுவீர்கள். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கலாம். மேலும், மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கடன் கொடுப்பதிலும், வாங்குவதிலும் இருந்து வந்த இழுபறிகள் மறைந்து விடும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் சேர்வதற்கான வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உங்களுக்குச் சாதகமான சூழல் ஏற்படும். மாணவர்கள், கல்வி தொடர்பான விஷயத்தில் மிகுந்த சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உடல்நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளும் இல்லை. முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீல நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

பணியிடத்தில் கவனமாக இருக்கணும்.. இல்லைனா பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.. | 11.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. வீடு மாற்றம் தொடர்பான விஷயத்தில் உங்களின் சிந்தனைகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் திருப்தியான சூழல் உண்டாகலாம். உற்பத்தி சார்ந்த துறைகளில் மிகுந்த கவனம் தேவை. பணியில் உடன் இருப்பவர்களிடம் ஒத்துழைப்பால் நன்மை உண்டாகும். பொருளாதாரத்தில் சற்று இறக்கமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புன்டு. எனவே, முதலீடு சார்ந்த விஷயத்தில் அதிக கவனம் தேவை. கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

பணியிடத்தில் கவனமாக இருக்கணும்.. இல்லைனா பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.. | 11.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நாள். உங்களுக்கு உடன் பிறந்தவர்கள் மிகுந்த ஆதரவுடன் இருப்பார்கள். காது பிரச்சனை குறைந்து வரும். பலதரப்பட்ட எண்ணங்களால், மனதில் அமைதியின்மை உண்டாகலாம். எனவே, இக்காலகட்டத்தில் மனதில் சஞ்சலம் எதுவும் இல்லாமல் தெளிவுடன் இருப்பது நல்லது. அக்கம்-பக்கத்தாரின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். இடப்பெயர்ச்சி சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். பொருளாதார வரவு உண்டாகும். இருப்பினும் சிக்கனமாக செலவு செய்வது நல்லது. உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் எதுவும் இல்லை. செலவு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

பணியிடத்தில் கவனமாக இருக்கணும்.. இல்லைனா பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.. | 11.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

பத்திரம் தொடர்பான செயல்களில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். மறதி தொடர்பாக இருந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களால், மனதிற்கு சந்தோஷம் ஏற்படும். கணிப்பொறி சார்ந்த துறைகளில் உங்களுக்குப் புதிய சூழ்நிலைகள் உண்டாகும். மேலு, இழுபறியான சில வரவுகள் கையிருப்பு மேம்படும். வாகன பயணங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நல்லது. ஆடம்பரமான பொருள்களை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். சிறு தூரப் பயணங்களால், மனதில் மாற்றம் ஏற்படலாம். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

பணியிடத்தில் கவனமாக இருக்கணும்.. இல்லைனா பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.. | 11.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

மனதில் பொருளாதார சேமிப்புத் தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு விவாதங்கள் உண்டாகி மறையும். உடன்பிறந்த சகோதரர்களால், நன்மைகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. விலை உயர்ந்த பொருள்களில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். புதிய தொழில்நுட்ப கருவிகளால் வாய்ப்புகள் உண்டாகலாம். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் உண்டாகலாம். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும் மனதில் புத்துணர்ச்சி எழும். மனதைரியத்துடன் செயல்படுவீர்கள். பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

பணியிடத்தில் கவனமாக இருக்கணும்.. இல்லைனா பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.. | 11.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

பேச்சுக்களின் சாதுரியத்தால், சில தடைபட்ட காரியங்களை விரைவாகச் செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் இருந்து தனித்து இருப்பதற்கான சூழல் உண்டாகும். உலகியல் வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டத்தில் இருப்பீர். வெளி உணவுகளைத் தவிர்ப்பது உடலுக்கு நன்மை பயக்கும். இரவு நேரங்களில் நீண்ட நேரங்களில் கண்விழிப்பதைத் தவிர்க்க வேண்டும். திடீர் பயணங்கள் ஏற்படலாம். புதுவிதமான பயணங்களால், மனதில் தெளிவு பிறக்கும். மனதிற்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதார மேம்பாடு அதிகரிக்கும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்