Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செலவு செய்யும் போது கவனமா இருக்கணும்.. இல்லைன்னா இது உங்களுக்குக் கண்டிப்பா நடக்கும்..! | 24.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Gowthami Subramani Updated:
செலவு செய்யும் போது கவனமா இருக்கணும்.. இல்லைன்னா இது உங்களுக்குக் கண்டிப்பா நடக்கும்..! | 24.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம் 10 ஆம் நாளுக்கான [24 மே 2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.30 – 10.30 வரை

மாலை: 04.30 – 05.30 வரை

செலவு செய்யும் போது கவனமா இருக்கணும்.. இல்லைன்னா இது உங்களுக்குக் கண்டிப்பா நடக்கும்..! | 24.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

மனதில் உண்டாகும் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம், இருந்த குழப்பங்கள் விலகி நன்மைகள் உண்டாகும். உடன் பணிபுரியும் நபர்களின் ஆதரவு பெறுவீர்கள். எதிர்பாலின மக்களின் மூலம், அனுகூலமான சூழல் உண்டாகலாம். குடும்பத்தில் பெரியோர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். புதிய ஆராய்ச்சி தொடர்பான தேடல் உண்டாகும். மனதில் தோன்றும் புதுவிதமான மற்றும் வித்தியாசமான எண்ணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். நிர்வாகம் செய்பவர்களுக்குத் தனித்திறமை புலப்படும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

செலவு செய்யும் போது கவனமா இருக்கணும்.. இல்லைன்னா இது உங்களுக்குக் கண்டிப்பா நடக்கும்..! | 24.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

புதிதாக முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியை ஈட்டும் நாள். அக்கம் – பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய துறை தொடர்பான தேடல் அதிகரிக்கலாம். ஆரோக்கியம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகலாம். மனதிற்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கலைத்துறை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகலாம். மனதில் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். சில முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய தினமாக அமைகிறது. முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

செலவு செய்யும் போது கவனமா இருக்கணும்.. இல்லைன்னா இது உங்களுக்குக் கண்டிப்பா நடக்கும்..! | 24.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். சாதுரியமான பேச்சுக்களால் நெருக்கடிகள் விலகி நன்மை உண்டாகும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கைத் துணையோரிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் கிடைக்கும். பூர்வீகம் சம்பந்தமான சுப விஷயங்களில் செலவு உண்டாகலாம். உடல் நலம் சிறப்பாக உள்ளது. நலம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

செலவு செய்யும் போது கவனமா இருக்கணும்.. இல்லைன்னா இது உங்களுக்குக் கண்டிப்பா நடக்கும்..! | 24.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

மனதில் தோன்றும் இனம்புரியாத சிந்தனைகளால், ஒரு விதமான சோர்வுடன் காணப்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் ஏற்படலாம். மற்றவர்களின் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. முன் கோபத்தால் சில மனக்கசப்புகள் ஏற்படலாம். எனவே, குடும்பத்தாரிடமும், உறவினர்களிடமும் மிகுந்த பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படுவது நல்லது. தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதுவித அனுபவம் உண்டாகும். உடல் நலத்தில் அதிக அக்கறை வேண்டும். பிரீதி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

செலவு செய்யும் போது கவனமா இருக்கணும்.. இல்லைன்னா இது உங்களுக்குக் கண்டிப்பா நடக்கும்..! | 24.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

செய்யும் செயலில் இருந்த கட்டுப்பாடுகள் விலகி விரைவில் முடிவடையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். புதிய பொருள்களை வாங்கி மகிழ்வெர்கள். பழைய பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வத்துடன் காணப்படுவீர்கள். தொழில் சார்ந்தவற்றில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். மனதில் புது விதமான தேடல் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகலாம். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகலாம். இதனால், அலைச்சல் ஏற்படும். ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

செலவு செய்யும் போது கவனமா இருக்கணும்.. இல்லைன்னா இது உங்களுக்குக் கண்டிப்பா நடக்கும்..! | 24.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

நண்பர்களுடன் சேர்ந்து வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உறவினர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்கள் நிறைவேறும். உடல், ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்குவதுடன் நலமாக இருப்பீர்கள். சமூகத்தில் பெரியோர்களின் அறிமுகம் உண்டாகும். இதனால், நன்மைகள் கிடைக்கும். விவசாயப் பணிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான சூழல் உண்டாகும். தடைபட்ட தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்கள், லாபகமான வாய்ப்புகளைப் பெறுவீர். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

செலவு செய்யும் போது கவனமா இருக்கணும்.. இல்லைன்னா இது உங்களுக்குக் கண்டிப்பா நடக்கும்..! | 24.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

குறுந்தொழில் தொடர்பான முயற்சிகளில் வெற்றி உண்டாகும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறைந்து விடும். போட்டி பந்தயங்களில் உங்களது திறமைகளை வெளிப்படுத்தி சாதிப்பீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் உங்களது எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். இழுபறியான பணிகள் விரைவில் முடிவடைந்து விடும். பணியில் உங்களது திறமைகளை வெளிக்கொணர்ந்து வெற்றி பெறும் நாள். உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் நீங்கி விடும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

செலவு செய்யும் போது கவனமா இருக்கணும்.. இல்லைன்னா இது உங்களுக்குக் கண்டிப்பா நடக்கும்..! | 24.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

குடும்பத் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வது நல்லது. உங்களது நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் சாதகமான சூழலை உருவாக்குவீர்கள். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. சுபகாரியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, மனம் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குழந்தைகளின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்குப் பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

செலவு செய்யும் போது கவனமா இருக்கணும்.. இல்லைன்னா இது உங்களுக்குக் கண்டிப்பா நடக்கும்..! | 24.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

பழைய நினைவுகளின் மூலம், உங்களது செயல்பாடுகளில் ஆர்வமின்மையுடன் காணப்படுவீர்கள். உறவுகள் வழியில் அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு மறதி சார்ந்த பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்படலாம். எனவே, மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்களால், புதிய அனுபவம் உண்டாகலாம். உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் இல்லை. தெளிவு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

செலவு செய்யும் போது கவனமா இருக்கணும்.. இல்லைன்னா இது உங்களுக்குக் கண்டிப்பா நடக்கும்..! | 24.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

மாறுபாட்ட பல்வேறு அணுகுமுறைகளின் மூலம், நீண்ட நாள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். கணவன், மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி விடும். உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் மதிப்பும், பொறுப்பும் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை தெரியாதவர்களிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். விருப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

செலவு செய்யும் போது கவனமா இருக்கணும்.. இல்லைன்னா இது உங்களுக்குக் கண்டிப்பா நடக்கும்..! | 24.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

சேமிப்பு செய்வதற்கு உகந்த காலமாக இந்த காலம் அமைகிறது. செலவைக் குறைத்துக் கொள்வது நல்லது. சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்பும், ஆதரவும் மேம்படும். உத்தியோகப் பணிகளில் இருந்து வந்த குழப்பங்கள் விலகி விடும். எல்லா இடத்திலும் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நல்லது. விவசாயம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு மேம்படும். மனதில் தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும். எதிர்பாராத சில பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகலாம். சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். வாழ்வு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

செலவு செய்யும் போது கவனமா இருக்கணும்.. இல்லைன்னா இது உங்களுக்குக் கண்டிப்பா நடக்கும்..! | 24.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகி கவலைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் அதிக ஈடுபாட்டுடன் காணப்படுவீர். வழக்குத் தொடர்பான விஷயங்களில் திருப்பங்கள் உண்டாகலாம். விலகிச் சென்றவர்களைப் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். இதனால், குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில நட்புக்களால் மாற்றம் உண்டாகும். பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படுவது சிறப்பு. சினம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்