Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 74,077.04
1,080.73sensex(1.48%)
நிஃப்டி22,472.80
349.15sensex(1.58%)
USD
81.57
Exclusive

இன்னைக்கு சிக்கனமா செலவு செய்றது ரொம்ப நல்லது..! | 27.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Gowthami Subramani Updated:
இன்னைக்கு சிக்கனமா செலவு செய்றது ரொம்ப நல்லது..! | 27.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம் 13 ஆம் நாளுக்கான [27 மே 2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 07.30 – 08.30 வரை

மாலை: 04.30 – 05.30 வரை

இன்னைக்கு சிக்கனமா செலவு செய்றது ரொம்ப நல்லது..! | 27.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

புதுவித கனவுகள் தோன்றலாம். பல தரப்பட்ட சிந்தனைகள் மற்றும் குழப்பங்களில் இருந்து விடுபடும் நாள். உத்தியோகத்தில் இருந்து வந்த நெருக்கடியான சூழ்நிலைகள் குறைந்து விடும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் விலகி நெருக்கம் அதிகரிக்கும். மேலும், தவறிப்போன சில பொருள்கள் இன்று கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாகும். வியாபாரத்தில் முதலீடு அதிகரிக்கலாம். எதிலும் நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் உண்டாகும். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

இன்னைக்கு சிக்கனமா செலவு செய்றது ரொம்ப நல்லது..! | 27.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

இன்று கல்வி தொடர்பான விஷயத்தில் மேன்மை அடைவீர்கள். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தேவையற்ற சிந்தனைகளால், சோர்வு ஏற்பட அதிக வாய்ப்புண்டு. உத்தியோகம் தொடர்பான விஷயத்தில் பொறுப்பு மற்றும் அதிகாரம் கிடைக்கும். உங்களது முயற்சிகள் அனைத்திற்கும் ஏற்ற பலன்களைப் பெறுவீர்கள். நெருக்கமானவர்களால் நீங்கள் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கலாம். எதிர்பாராத சில நல்ல விஷயங்கள் நடப்பதற்கான வாய்ப்பு உண்டு. உடல் நலம் தொடர்பான விஷயத்தில் அதிக கவனத்துடன் இருப்பது நல்லது. எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

இன்னைக்கு சிக்கனமா செலவு செய்றது ரொம்ப நல்லது..! | 27.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

விளையாட்டு தொடர்பான விஷயத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். காது சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. செயல்பாடுகளில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி நன்மைகள் உண்டாகலாம். புத்தகம் சார்ந்த பணிகளில் அதிக ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் வழியில் உங்களின் ஒத்துழைப்பு மேம்படும். எதிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறும் நாள். எடுத்த காரியங்களில் முயற்சி செய்வதுடன் அதில் வெற்றி அடைவதற்கான வழியைத் தேடுவீர்கள். சோதனை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இன்னைக்கு சிக்கனமா செலவு செய்றது ரொம்ப நல்லது..! | 27.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

தனவரவுகளில் இருந்த பிரச்சனைகள் விலகி வரவு மேம்படும். நண்பர்களின் வருகையால், கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகலாம். பழக்க வழக்கங்களில் திடீர் மாற்றங்கள் ஏற்படலாம். மனை தொடர்பான கடனுதவிகள் உங்களுக்குச் சாதகமாக இருக்கலாம். வீட்டில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி விடும். மனை சார்ந்த கடனுதவிகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். உடல் நலம் தொடர்பான ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. கணவன், மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் விலகி விடும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இன்னைக்கு சிக்கனமா செலவு செய்றது ரொம்ப நல்லது..! | 27.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

திட்டமிட்ட காரியங்கள் சரியான நேரத்தில் முடிக்காமல் போவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதே சமயம், பொறுமையோடு இருந்தால், நீங்கள் நினைத்த காரியங்கள் சரியாக நடந்து விடும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உங்களுக்கு மேன்மை உண்டாகலாம். உடன் பிறந்தவர்களைப் பற்றிய புரிதல் உண்டாகலாம். தொலைபேசி வாயிலாக உங்களுக்கு மகிழ்ச்சியாக செய்திகள் கிடைக்கும். சிறு தூரப் பயணங்களால் மாற்றங்கள் நிகழும். உடல் நலத்தில் உங்களுக்கு அதிக அக்கறை தேவை. அச்சம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இன்னைக்கு சிக்கனமா செலவு செய்றது ரொம்ப நல்லது..! | 27.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

பணியில் உடன் பணிபுரிவர்களிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கலாம். மேலும், மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். இழுபறியாக இருந்து வந்த தனவரவுகள் கிடைக்கும். மற்றவர்களை அவமதிக்கும் நோக்கத்தினைக் குறைத்துக் கொள்வது நல்லது. பழைய நினைவுகள் மனதிற்கு சங்கடத்தைத் தரலாம். சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வது நல்லது. எதிர்பாலின மக்களிடத்தில் நீங்கள் பொறுமையுடன் நடந்து கொள்வது நல்லது. உடல் நலம் சார்ந்த பிரச்சனையில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். பரிவு!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இன்னைக்கு சிக்கனமா செலவு செய்றது ரொம்ப நல்லது..! | 27.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகள் விலகி நன்மைகள் உண்டாகலாம். இணையம் சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். முதலீடுகளில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். மேலும், தெளிவான சிந்தனைகளின் மூலம் புதிய இலக்குகளை அடைவீர்கள். வழக்கு தொடர்பான விஷயத்தில் உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்வியில் மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவர். எதிலும், பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படுவதே உச்சிதம் ஆகும். தேர்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: மயில் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

இன்னைக்கு சிக்கனமா செலவு செய்றது ரொம்ப நல்லது..! | 27.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

உத்தியோகம் சார்ந்து இருந்து வந்த பிரச்சனைகள் விலகி நன்மைகள் உண்டாகலாம். பணியில் முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சி தரக்கூடிய இடங்களுக்குச் செல்வது மன மகிழ்ச்சியைத் தரும். இதனால், மனதில் புதிய மாற்றங்கள் உண்டாகலாம். பெரியோர்களின் ஆலோசனைகள் மனமகிழ்ச்சியை உண்டாக்கும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். உடல் நலம் சிறப்பாக உள்ளது. பணியில் நிம்மதியான சூழல் உண்டாகும். நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இன்னைக்கு சிக்கனமா செலவு செய்றது ரொம்ப நல்லது..! | 27.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

ஆடம்பரமான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களுடனான சிறு தூரப் பயணங்கள் நன்மையை உண்டாக்கும். வெளிவட்டாரத்தில் ஏற்படும் புதிய அனுபவத்தால் உங்களின் மதிப்பு மேலோங்கும் உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக உள்ளது. பணியை சரியான நேரத்தில் செய்து முடிப்பதன் மூலம் மனநிறைவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் மற்றும் உறவினர்களின் மூலம் அனுகூலம் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான விஷயத்தில் புதுவித சிந்தனைகள் உண்டாகும். வெற்றியைத் தரும். நல்ல அனுகூலமான நாளாக அமைகிறது. நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இன்னைக்கு சிக்கனமா செலவு செய்றது ரொம்ப நல்லது..! | 27.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

வியாபாரம் தொடர்பான விஷயத்தில் அதிக பொறுமை வேண்டும். எந்த ஒரு செயலிலும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்பட்டால் மட்டுமே வெற்றி நிச்சயம் கிடைக்கும். தேவையில்லாத சிந்தனைகளால், மனதில் குழப்பங்கள் ஏற்படலாம். இதனால், தயக்கம் உண்டாகும். முதலீடு சார்ந்த விஷயத்தில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருள்களைக் கையாளும் போது, நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பொருளாதார சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. ஏமாற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

இன்னைக்கு சிக்கனமா செலவு செய்றது ரொம்ப நல்லது..! | 27.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

உங்களது நண்பர்கள், உங்களது தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பார்கள். கஷ்டமான காரியத்தையும் விரைவாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மாற்றங்கள் உண்டாகலாம். வெளிவட்டாரத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்களால் ஆதாயம் பெறுவீர்கள். உடன்பிறப்புகளின் மூலம், சாதகமான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். ஆன்மீகம் தொடர்பான விஷயத்தில் அதிக நாட்டம் உண்டாகும். உடல் நலம் ஆரோக்கியமாக உள்ளது. மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: இளம் ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 3

இன்னைக்கு சிக்கனமா செலவு செய்றது ரொம்ப நல்லது..! | 27.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

பணியிடத்தில் உடனிருப்பவர்களிடம் உண்டாகக் கூடிய வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தோன்றும் புதுவிதமான சிந்தனைகள் மாற்றத்தைத் தரும். பயணங்களின் முக்கியத்துவத்தை அறிந்து செயல்படக்கூடிய நாள். பொறுமையுடன் செயல்பட்டால் நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். மனதில் தோன்றும் புதுவிதமான நம்பிக்கை, வெற்றியைத் தரும். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். உடல் நலம் சிறப்பாக உள்ளது. பொருளாதார வரவு மேம்படும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்