Tue ,Feb 27, 2024

சென்செக்ஸ் 72,848.41
58.28sensex(0.08%)
நிஃப்டி22,129.00
6.95sensex(0.03%)
USD
81.57
Exclusive

இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் இன்பச் செய்தி காத்திருக்கிறது... | Tomorrow Rasi Palan in Tamil | 23.03.2023

Nandhinipriya Ganeshan Updated:
இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் இன்பச் செய்தி காத்திருக்கிறது... | Tomorrow Rasi Palan in Tamil | 23.03.2023Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 09 ஆம் நாளுக்கான [23 மார்ச் 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்:

காலை: 10.30 - 11.30 வரை

மாலை: இல்லை

இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் இன்பச் செய்தி காத்திருக்கிறது... | Tomorrow Rasi Palan in Tamil | 23.03.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

பணியிடத்தில் சகஊழியர்களால் சிக்கல் ஏற்படும். மேலதிகாரிகளிடம் அனுசரியான பேச்சு அவசியம். காதல் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்வது பிரிவினையை தடுக்கும். வாகனத்தில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். புதிய முயற்சிகள் தடைபடும். எனவே, முக்கிய முடிவுகளை தள்ளிப் போடுவது நல்லது. நண்பர்களால் அலைச்சல் ஏற்படும். ஆகமொத்தம் சோதனைமிகுந்த நாள். வியாபாரம் சுமாராக இருக்கும். தாயின் உடல்நிலையில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. பயம்!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் இன்பச் செய்தி காத்திருக்கிறது... | Tomorrow Rasi Palan in Tamil | 23.03.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வெறுத்து ஒதுக்கிய நபர்கள் உங்களை தேடி வந்து உதவி கேட்பார்கள்.  பணியிடச்சூழல் அற்புதமாக இருக்கும். குடும்பத்தினர் உங்கள் பேச்சை கேட்டு நடப்பார்கள். உங்களுக்கு புது நம்பிக்கையும், தைரியமும் ஏற்படுத்தும் நாளாக இருக்கும். கடினமான பணிகளையும் எளிதாக முடித்து காட்டுவீர்கள். துணையுடன் இருந்த மனக்கசப்பு விலகும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும். சிலருக்கு நீண்ட நாள் வாங்க நினைத்த பொருள் தேடி வரும். வராத கடன்கள் உங்களை வந்தடையும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் இன்பச் செய்தி காத்திருக்கிறது... | Tomorrow Rasi Palan in Tamil | 23.03.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

எதிர்ப்புகளும் விமர்சனங்களும் நீங்கும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. திருமணம் சம்பந்தமான பேச்சுவார்தைகளில் அனுகூப்பலன் உண்டாகும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்து வைப்பீர்கள். நண்பர்களிடம் இருந்து ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்தடையும். இரும்பு சார்ந்த தொழில் செய்வோருக்கு நல்ல லாபம் இருக்கும். சிலருக்கு முன்னோர்கள் சொத்து கிடைப்பது பற்றிய செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் முதலில் சில தடைகள் வந்தாலும் பின்னர் முன்னேற்றம் காணப்படும். இருப்பினும்,  விலங்குகளிடம் இருந்து ஒதுங்கி இருங்கள். நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் இன்பச் செய்தி காத்திருக்கிறது... | Tomorrow Rasi Palan in Tamil | 23.03.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சணையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடு விலகம். சகோதரனின் நடவடிக்கைகள் கோபத்தை ஏற்படுத்தலாம், அனுசரித்து போவது நல்லது. சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் சிறப்பாகவே இருக்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. நீண்ட நாள் கழித்து பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். யாருக்காவும் உங்களுடைய முயற்சியை விட்டுக் கொடுக்காதீர்கள். இருப்பினும், குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் இன்பச் செய்தி காத்திருக்கிறது... | Tomorrow Rasi Palan in Tamil | 23.03.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். திடீர் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வழக்கு சார்ந்த காரியங்கள் சாதகமான பலன்களை தரும். எதிர்பாலினத்தவரால் இன்பச் செய்தி காத்திருக்கிறது. விருப்பங்கள் எந்த தடையும் நிறைவேறும். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். நடக்கும்போது கவனம் தேவை. பணியிடத்தில் திறமையாக செயல்படுவீர்கள் சிலருக்கு நண்பர்களுடன் வெளியில் செல்ல வாய்ப்புண்டு. சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் இன்பச் செய்தி காத்திருக்கிறது... | Tomorrow Rasi Palan in Tamil | 23.03.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். குறிப்பாக, விவசாயம் சார்ந்த தொழில் செய்வோருக்கு சிறப்பாக இருக்கும். துணையின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். சிலருக்கு தொழில் சம்பந்தமாக நீண்ட நாள் எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த வங்கி கடன் கிடைக்கும். முக்கியப் பிரமுகர் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்வழி உறவினர்களால் நல்ல செய்து வந்து சேரும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு செல்ல வாய்ப்பு அமையும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 2

இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் இன்பச் செய்தி காத்திருக்கிறது... | Tomorrow Rasi Palan in Tamil | 23.03.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

எதிர்கால எண்ணங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும். கூட்டு தொழில் செய்வோர் பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வாக்குறுதி கொடுக்கப்பதை தவிர்க்கவும். தனவரவு திருப்திகரமாக இருக்காது. அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். பணியிடத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட தவறால் மேலதிகாரியின் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். நினைத்த காரியம் நிறைவேற தடை ஏற்படும். சிலருக்கு நண்பர்களால் அலைச்சல் ஏற்படும். எனவே, ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபடுவது நல்லது. கவலை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் இன்பச் செய்தி காத்திருக்கிறது... | Tomorrow Rasi Palan in Tamil | 23.03.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

புதிய முயற்சிகளில் ஈடுபடுவோருக்கு நல்லது நடக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு உண்டு. சிலருக்கு நவீன உபகரணங்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். சிலர் நீண்ட நாளாக சந்திக்க நினைத்த நபரை சந்திப்பீர்கள். தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பூர்வீகச் சொத்து மூலம் பண வரவு ஏற்பட வாய்ப்புள்ளது. திடீர் விருந்தனர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணம் உருவாகும். சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கனவுகள் நிறைவேரும் நாள். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் இன்பச் செய்தி காத்திருக்கிறது... | Tomorrow Rasi Palan in Tamil | 23.03.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

 எதிர்பாரா செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும். தாய்மாமன் வழியில் சுபச்செலவு ஏற்படும். பணவரவு உண்டு. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முடிந்த வரை சுய முன்னேற்றத்திற்கான முயற்சி மேற்கொள்ளுங்கள். குடும்பத்தில் ஆனந்தம் விளையாடும். நீங்களும் சந்தோசமாக இருப்பீர்கள், மற்றவர்களையும் சந்தோசப்படுத்துவீர்கள். பணிபுரியும் இடச்சூழல் அற்புதம். சிலருக்கு எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும். தந்தையிடம் எதிர் பார்த்த பணஉதவி கிடைக்கும். மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் இன்பச் செய்தி காத்திருக்கிறது... | Tomorrow Rasi Palan in Tamil | 23.03.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

பெரியவர்கள் ஆசியால் தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். தம்பதிகளுக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராமல் செய்த உதவியால் சமுதாயத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும். பணியிடத்தில் புதிய நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு சகோதரர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். இருப்பினும், குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எதுவும் இன்றைக்கு எடுக்க வேண்டாம். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: மயில் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் இன்பச் செய்தி காத்திருக்கிறது... | Tomorrow Rasi Palan in Tamil | 23.03.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

எதிலும் பொறுமையுடனும் சிந்தித்தும் செயல்படவேண்டிய நாள். உயர் பதவியில் இருப்பவர்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் பொறுமையாக நடந்துக் கொள்ளுங்கள். பிடித்த பொருள் தொலைந்துப் போகலாம். கடன் பிரச்சனையால் நாள் முழுக்க கவலையாக இருப்பீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கு மருத்துவ செலவு ஏற்படும். தந்தைவழி உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களுடனான சந்திப்பை தவிர்ப்பது நல்லது. பீடை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசியினருக்கு எதிர்பாலினத்தவரால் இன்பச் செய்தி காத்திருக்கிறது... | Tomorrow Rasi Palan in Tamil | 23.03.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

தொட்டது துலங்கும் நாள். நீண்ட நாளாக ஆசைப்பட்ட ஒரு விஷயத்தில் நல்லது நடக்கும். உத்தியோகத்தில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகள் தேடி வரும். அனைவரிடமும் அன்பாக நடந்துக் கொள்வீர்கள்.  வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்