Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நண்பர்களிடம் விளையாட்டான பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.03.2023

Nandhinipriya Ganeshan Updated:
நண்பர்களிடம் விளையாட்டான பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.03.2023Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 10 ஆம் நாளுக்கான [24 மார்ச் 2023, வெள்ளி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்:

காலை: 09.30 - 10.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

நண்பர்களிடம் விளையாட்டான பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.03.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் சுமாராகவே இருந்த வியாபாரம் சூடு பிடிக்கும். காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். எல்லா பணிகளையும் குறித்த நேரத்தில் செய்து முடித்து, மேலதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். தாய்மாமன் வழியில் ஆதாயம் கிடைக்கும். காரமான உணவுகளைத் தவிர்க்கவும். கணவன், மனைவி இடையே மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். தனம்!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

நண்பர்களிடம் விளையாட்டான பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.03.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை காணப்படும். சகஊழியர்களிடத்தில் இருந்துவந்த மனகசப்பு நீங்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன்-மனைவி இடையே பாசம், நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சேமிப்பதற்கான வாய்ப்பு உண்டு. பயணங்களின் போது விலையுயர்ந்த பொருட்களின் மீது கவனம் தேவை. நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு உற்சாகம் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

நண்பர்களிடம் விளையாட்டான பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.03.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

எந்த செயலிலும் திட்டமிட்டு செயல்படுவது அனுகூலப் பலன்களை பெற்றுக் கொடுக்கும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். இருப்பினும், கூட்டுத்தொழில் செய்வோர் கூட்டாளியை அனுசரித்து செல்வது நல்லது. உடன்பிறந்தோரின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரிடலாம். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் ஆற்றுவீர்கள். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

நண்பர்களிடம் விளையாட்டான பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.03.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

மனதளவில் இருந்த குழப்பம் விலகும் நாள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். இழுபறியாக இருந்த தனவரவு வந்து சேரும். சுப விரைய செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய பொருள் வாங்கும் யோகம் உண்டு. தாய்வழி உறவினரால் அனுகூலப் பலன் உண்டு. காதலர்களுக்கு சிறப்பான நாள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்பு அனுபவமிக்கவர்களிடம் கலந்தோசிப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

நண்பர்களிடம் விளையாட்டான பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.03.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

அனாவசிய செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். அமைதியும் கட்டுபாடும் தேவைப்படும் நாள். மனதில் ஏற்படும் மனகுழப்பத்தை துணையுடன் பகிர்ந்துக் கொள்வீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்க தடை, தாமதம் உண்டாகும். பெயர் தெரியாவதர்களிடம் பேசுவதை தவிர்க்கவும்.  முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

நண்பர்களிடம் விளையாட்டான பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.03.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

மற்றவர்களுடன் பேசும்போது  பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் சின்ன சலசலப்பு ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். ஏமாற்றம் மிகுந்த நாள், அதனால் அதிகமாக எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் விற்பனை சற்றுக் குறைவாகத் தான் இருக்கும். எதிர்பாராத செலவுகளால் கடன்  வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாகனத்தில் செல்லும் போதும் நிதானம் தேவை. குடும்பத்தில் கருத்துவேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமை முக்கியம். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

நண்பர்களிடம் விளையாட்டான பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.03.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

எதிர்காலம் தொடர்பான புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சிலருக்கு பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும் நாள். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். நல்ல விஷயங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். மனதில் புதுவிதமான தெம்பும், தைரியமும் பிறக்கும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

நண்பர்களிடம் விளையாட்டான பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.03.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

உங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை பற்றி புரிந்து கொள்வீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் ஈடேறும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். நீண்ட நாட்களாக இழுபறியான சில முக்கிய பணிகளை செய்து முடிப்பீர்கள். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்து வைப்பீர்கள். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் அழகான தருணங்கள் உருவாகும். நல்ல விஷயங்களுக்காக பணம் செலவு செய்வீர்கள். பணியிடத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

நண்பர்களிடம் விளையாட்டான பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.03.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

அனைத்து விஷயத்திலும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பீர்கள். இதுவரை இழுத்தடித்த பூர்வீக சொத்து விவகாரம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும். கடன் சம்பந்தமான பிரச்சனைகளை சமாளிக்கும் அளவிற்கு பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார பணியில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். புதிய முயற்சியில் ஈடுபவர்களுக்கு வெற்றி நிச்சயம். வேலை செய்யும் இடத்தில் சகபணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். வம்புக்கு வருபவரிடம் விட்டுக்கொடுத்து போவது சிறந்தது. மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

நண்பர்களிடம் விளையாட்டான பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.03.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

எதிர்பார்க்கும் காரியம் சாதகமாக முடியும். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். பயணத்தின்போது கவனம் தேவைப்படும் நாள். துணையின் விருப்பத்தை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். நண்பர்களிடம் விளையாட்டான பேச்சை தவிர்த்துக் கொள்வது சிறந்தது. இல்லையென்றால், விளையாட்டு விணையாகிவிடும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

நண்பர்களிடம் விளையாட்டான பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.03.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

பணியிடத்தில் நேர்மையாக நடந்து, மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தினர் மத்தியில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். எந்த காரியத்தையும் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

நண்பர்களிடம் விளையாட்டான பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 24.03.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பூர்வீக சொத்து விவகாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்காலம் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சிலர் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவது இழுபறியாகும். திடீர் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி சம்பவம் நடைபெறும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். வழக்கமான பணிகளிலும் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: மயில் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்