Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

எதிர்பாராத செலவு உண்டாகும்..! இந்த ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. | 30.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Gowthami Subramani Updated:
எதிர்பாராத செலவு உண்டாகும்..! இந்த ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. | 30.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம் 16 ஆம் நாளுக்கான [30 மே 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 07.30 – 08.30 வரை

மாலை: 04.30 – 05.30 வரை

எதிர்பாராத செலவு உண்டாகும்..! இந்த ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. | 30.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

தொழில் செய்யும் இடத்தில் சக பணியாளர்களிடம் இருந்த பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. பூர்வீக சொத்துக்களால் பலன் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களை விற்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குணநலன்களில் மாற்றம் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வாகனம் தொடர்பான பயனங்களால் ஆதாயம் பெறுவீர்கள். எதிர்பாராத சில பயணங்களால் நன்மை உண்டாகலாம். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. பயணம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

எதிர்பாராத செலவு உண்டாகும்..! இந்த ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. | 30.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்துடன் செயல்படுவீர்கள். கல்வி தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் உண்டாகலாம். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். தந்தை வழி உறவினர்களின் மூலம், ஆதரவான சூழ்நிலை உண்டாகும். பொருளாதார வரவு உண்டாகும். இருப்பினும் செலவுகளின் தன்மையை அறிந்து செயல்படுவது நல்லது. சேமிப்பு செய்வதன் மூலம், வாழ்வில் நலன் பெறுவீர்கள். முயற்சிக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக உள்ளது. நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

எதிர்பாராத செலவு உண்டாகும்..! இந்த ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. | 30.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

உறவினர்களின் வருகையால், குடும்பத்திற்கு மனமகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் பெறுவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். வாடிக்கையாளர்களின் முழு ஆதரவு கிடைக்கும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப உங்களது கருத்துக்களை முன் வைப்பீர்கள். தானியம் தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகலாம். அடிப்படை கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறைந்து, மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். வரவுகளினால், கையிருப்புகள் அதிகரிக்கும். உடல் நிலை சார்ந்த விஷயத்தில் சற்று சிந்தித்து செயலாற்றுவது நல்லது. ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

எதிர்பாராத செலவு உண்டாகும்..! இந்த ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. | 30.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

உடன் பணிபுரிவர்களின் ஒத்துழைப்பால், நன்மை உண்டாகும். பணிகளில் இருந்து வந்த மறைமுகத் தடைகள் விலக்கப்பட்டு, வெற்றி உண்டாகும். கணவன், மனைவியிடையே இருந்து வந்த சலசலப்புகள் விலகி நெருக்கம் அதிகரிக்கும். மனதில் தெளிவு உண்டாகலாம். புத்துணர்ச்சியும் உண்டாகும். இசை சார்ந்த துறையில் உங்களின் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதார வரவு உண்டாகும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. வீண் செலவு செய்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். எனவே, சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

எதிர்பாராத செலவு உண்டாகும்..! இந்த ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. | 30.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

உறவினர்களின் வழியில் நன்மைகள் உண்டாகலாம். அவர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகி விடும். வெளியூர் பயணங்களால், மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். நண்பர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். எனவே, பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படுவது நல்லது. விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவைக்கேற்ப பணவரவுகள் இருக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் உங்களின் ஆர்வம் அதிகரிக்கும். எந்த ஒரு செயலிலும், திருப்தி இல்லாத மனநிலை ஏற்படலாம்.  மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

எதிர்பாராத செலவு உண்டாகும்..! இந்த ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. | 30.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

மனதில் தோன்றும் பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்படலாம். இருப்பினும், ஆழ்ந்து சிந்தித்தால் நல்ல முடிவு கிடைக்கும். வியாபாரம் தொடர்பானவற்றில் நிமிர்த்தமான ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதைத் தவிர்க்கவும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து செயல்படுவது நல்லது. உடனிருப்பவர்களால் மாறுபட்ட அனுபவம் பெறுவீர்கள். முகத்தில் தோன்றும் புதுவிதமான பொலிவு மகிழ்ச்சியை உண்டாக்கும். கல்வி பணிகளில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். விவேகம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

எதிர்பாராத செலவு உண்டாகும்..! இந்த ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. | 30.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

குடும்பத்தில் வரவுக்கேற்ற செலவு உண்டாகும். நீண்ட நாளாக இருந்த கவலைகளை நீக்கும் தெளிவான முடிவு கிடைக்கும். இருப்பினும், எதிர்பாராத செலவுகளும், நெருக்கடிகளும் உண்டாகலாம். மேலும், பெரியோரின் ஆலோசனைகளால் நன்மை அடைவீர்கள். உயர் அதிகாரிகளிடம் நெருக்கடியான சூழல் உண்டாகலாம். சமூகத்தைப் பற்றிய கண்ணோட்டத்தில் புதிய மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் வேண்டும். எதிலும், பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் உண்டாகும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

எதிர்பாராத செலவு உண்டாகும்..! இந்த ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. | 30.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

வியாபாரத்தில் உங்கள் திறமைகளால் வெற்றி காண்பீர்கள். மனதில் தோன்றும் புதிய தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தால், மேன்மை உண்டாகும். உடன் பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகலாம். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால், பணியிடத்தில் மேன்மை உண்டாகும். நுண்கலை சார்ந்த விஷயத்தில் அதிக ஆர்வம் உண்டாகும். மனதில் தோன்றும் புதுவிதமான ஆசைகள் நிறைவேற்றுவீர்கள். கூட்டு வியாபாரத்தில் லாபம் பெறுவீர்கள். உடல் நிலை சார்ந்தவற்றில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

எதிர்பாராத செலவு உண்டாகும்..! இந்த ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. | 30.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

வியாபாரம் சார்ந்தவற்றில் மந்தநிலை ஏற்படலாம். இருப்பினும், கூட்டாளிகளின் ஆதரவால், ஒத்துழைப்பையும், மகிழ்ச்சியையும் பெறுவார்கள். இறை வழிபாட்டில், மனம் அதிக நாட்டத்துடன் காணப்படும். அரசு சார்ந்தவற்றில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். உலகியல் நடவடிக்கையால், உங்கள் எண்ணங்களின் மாற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகலாம். விவசாயம் சார்ந்தவற்றில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகலாம். தெளிவுடன் செயல்பட்டு அதிக வருமானம் ஈட்டுவீர்கள். தெளிவு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

எதிர்பாராத செலவு உண்டாகும்..! இந்த ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. | 30.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

உத்தியோகம் தொடர்பானவற்றில் உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். நண்பர்கள் மத்தியில், நீங்கள் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களால் புதிய அனுபவம் பெறுவீர்கள். வெளிவட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு ஏற்ற பலன்களைப் பெறுவீர்கள். வெளியூர் பயணங்களால், உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தேர்வு சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். சுபம் நிறைந்த நாள். மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி உண்டாகும். சுபம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

எதிர்பாராத செலவு உண்டாகும்..! இந்த ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. | 30.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

மனதில் தோன்றும், இனம் புரியாத சிந்தனைகளால், செயல்பாடுகளில் ஒரு விதமான சோர்வு உண்டாகலாம். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுமையைக் கையாள்வது சிறப்பு. கடன் சார்ந்த நெருக்கடிகள் அதிகமாகலாம். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் விவேகத்துடன் செயல்படுவது சிறப்பு. எந்த செயலாக இருந்தாலும், சிந்தித்துச் செயல்படுவது நல்லது. போட்டி மனப்பான்மையைக் குறைத்து செயல்படுவது நன்மையைத் தரும். பணியிடத்தில் மேன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக உள்ளது. உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

எதிர்பாராத செலவு உண்டாகும்..! இந்த ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. | 30.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறும் நாள். நிர்வாகம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கலை சார்ந்த செயல்பாடுகளில் உங்களின் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளால், திறமைகள் வெளிப்படும். வாக்குவாதத்தின் மூலம், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ளும் நாள். பணியிடத்தில் உங்களுக்கு மேன்மை உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களால், பாராட்டுகளைப் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக உள்ளது. பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: வெண் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்