Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகளைச் சந்திக்கப் போகும் ராசிக்காரர் நீங்களா..? | 02.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Gowthami Subramani Updated:
வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகளைச் சந்திக்கப் போகும் ராசிக்காரர் நீங்களா..? | 02.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம் 19 ஆம் நாளுக்கான [02 ஜூன்2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.30 – 10.30 வரை

மாலை: 04.30 – 05.30 வரை

வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகளைச் சந்திக்கப் போகும் ராசிக்காரர் நீங்களா..? | 02.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

பல்வேறு முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வணிகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நண்பர்கள் வழியில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படலாம். உடன் இருப்பவர்களால் ஆதாயம் பெறுவீர்கள். வெளிநாட்டு தொடர்பான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். கடன் வாங்கி கட்ட முடியாமல் இருந்தவர்களுக்கு, இந்த காலம் சிறப்பாக அமையும். கணவன், மனைவி இடையே இருந்து வந்த விலக்கங்கள் குறைந்து நெருக்கங்கள் அதிகரிக்கும். முயற்சியுடன் செயல்பட்டால், வெற்றி நிச்சயம் கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகளைச் சந்திக்கப் போகும் ராசிக்காரர் நீங்களா..? | 02.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

இன்று நீங்கள் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறைந்து ஆரோக்கியம் மேம்படும். உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகம் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் பெறுவீர்கள். தகவல் தொடர்பு துறைகளில் முன்னேற்றம் உண்டாகலாம். தடைபட்ட பணிகள் அனைத்தும் விரைவாக செய்து முடிக்கப்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் ஒத்துழைப்பு உண்டாகும். உடனிருப்பவர்களால் ஆதாயம் பெறுவீர்கள். கணவன், மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெண் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகளைச் சந்திக்கப் போகும் ராசிக்காரர் நீங்களா..? | 02.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

நிர்வாகம் தொடர்பான துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். இசை சார்ந்த துறையில் உங்களின் திறமைகள் வெளிப்படும். மனதில் தோன்றும் புதுவிதமான இலக்குகளை அடைய அதிக முயற்சி செய்வீர்கள். சுற்றுலா செல்வது தொடர்பான புதிய சிந்தனைகள் அதிகரிக்கும். தனவரவை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கலாம். இலக்கியம் தொடர்பான விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீகம் தொடர்பான நாட்டம் அதிகமாக இருக்கும். மனதளவில் அதீத நம்பிக்கை உண்டாகலாம். உடல் நலத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

 

வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகளைச் சந்திக்கப் போகும் ராசிக்காரர் நீங்களா..? | 02.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

உடன் பணிபுரியும் இடத்தில், அதிக நம்பிக்கையும், ஒத்துழைப்பும் உருவாகும். ஆன்மீக செயல்பாடுகளில் அதிக ஆர்வம் உண்டாகலாம். இழுபறியான சில விஷயங்களை சாமர்த்தியாக செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். அடிப்படை கல்வியில் சாதகமான முன்னேற்றம் கிடைக்கும். புதிய துறை தொடர்பான தேடல் அதிகரிக்கும். மனதில் இனம் புரியாத சந்தோஷம் ஏற்படும். இது மனதிற்கு நிம்மதி அளிக்கும். உடல் நலம் சிறப்பாக உள்ளது. சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகளைச் சந்திக்கப் போகும் ராசிக்காரர் நீங்களா..? | 02.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

உங்களின் வித்தியாசமான அணுகுமுறையால், புதிய மாற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்து வரும் நன்மை, தீமைகளை அறிந்து செயல்படுவீர்கள். சிறு தூரப் பயணங்களால், மனதில் மாற்றம் உண்டாகலாம். உயர் அதிகாரிகளால், அனுகூலம் கிடைக்கும். தகவல் தொடர்புத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத வகையில், சில அதிர்ஷ்டகரமான வய்ப்புகள் உண்டாகலாம். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களால், சங்கடம் ஏற்படலாம். இதனால், கோவம் உண்டாகலாம். எனவே, மிகுந்த பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படுவது சிறப்பு. கோபம்!

அதிர்ஷ்ட நிறம்: பாச நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகளைச் சந்திக்கப் போகும் ராசிக்காரர் நீங்களா..? | 02.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

உங்களின் பேச்சுத் திறமைகளால், சாதகமான சூழல் உண்டாகலாம். பொருளாதாரச் சேர்க்கை தொடர்பான சிந்தனை அதிக அளவில் எழும். அதற்கான முயற்சியை செய்வதற்கு உகந்த நாள். மனதில் குழப்பங்கள் ஏற்படலாம். இந்த சிக்கல்களைத் தவிர்த்து தெளிவாகச் செயல்பட்டால், வெற்றி நிச்சயம் கிடைக்கும். வாகன மாற்றம் தொடர்பான முயற்சிகள் ஏற்படலாம். உணவு சார்ந்தவற்றில் இருந்த பிரச்சனைகள் விலகி விடும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். குடும்ப உறுப்பினர்களால், தெளிவான மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகலாம். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகளைச் சந்திக்கப் போகும் ராசிக்காரர் நீங்களா..? | 02.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் ஏற்படலாம். பத்திரிக்கை தொடர்பான விஷயத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படலாம். இருப்பினும், இதன் மூலமாக உங்களுக்கு அனுகூலம் கிடைக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வது அவசியம். தெளிவான முடிவு எடுப்பது அவசியம். எதிலும் பணிவுடனும், நிதானத்துடனும் செயல்படுவது நல்லது. பணிவு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகளைச் சந்திக்கப் போகும் ராசிக்காரர் நீங்களா..? | 02.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

குடும்ப உறுப்பினர்களிடத்தில் பொறுமையைக் கையாள்வது அவசியம். தேவையில்லாத செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகலாம். எதிர்பாலின மக்கள் விஷயத்தில் அதிக விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. மற்றவர்களின் கருத்துக்களால், குழப்பங்கள் ஏற்படலாம். இருப்பினும், தெளிவான மனநலத்துடன் இருந்தால், குழப்பங்களை நீக்கலாம். வெளியூர் வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கான நல்ல நேரமாக அமைகிறது. பழைய நினைவுகளால் தடுமாற்றம் ஏற்படலாம். எனவே, பழைய சிந்தனைகளை ஆழ்ந்து சிந்திப்பது தவிர்க்க வேண்டும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகளைச் சந்திக்கப் போகும் ராசிக்காரர் நீங்களா..? | 02.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

எந்த செயலிலும், வயது மூத்தோர்களின் ஆலோசனைகள் பெறுவது சிறப்பு. மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். உறவினர்களின் தேவைகளை நிறைவேறு வைப்பீர்கள். இதனால், மனதில் சந்தோஷம் ஏற்படும். கல்வி சார்ந்த செயல்களில் மிகுந்த ஆர்வம் உண்டாகும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். இந்த இலக்குகளை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். செல்வச் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மேலும், முதலீடு சார்ந்தவற்றில் அதிக ஈடுபாட்டுடன் காணப்படுவார்கள். மனதிற்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள் . நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகளைச் சந்திக்கப் போகும் ராசிக்காரர் நீங்களா..? | 02.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

மருத்துவம் சார்ந்த துறைகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். இளையவழி சகோதரர்களின் மூலம், அலைச்சல்கள் உண்டாகலாம். மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். மேலும், இறை வழி சார்ந்த நம்பிக்கை உண்டாகி சிந்தனைகளால் தெளிவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் உண்டாகும். அலங்காரம் சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களால், சலனம் உண்டாகலாம். எனவே, பொறுமையுடன் செயல்படுவது நல்லது. சலனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகளைச் சந்திக்கப் போகும் ராசிக்காரர் நீங்களா..? | 02.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் குறையும். மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. வழக்குகளில் சாதகமான சூழ்நிலை ஏற்படலாம். வாழ்க்கைத் துணைவரின் வழியில் சாதகமான சூழல் உண்டாகலாம். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளால், நல்ல மாற்றமான தருணங்கள் ஏற்படும். உங்களின் வெளிப்படையான குணத்தினால், பலரின் ஆதரவையும், அறிமுகத்தையும் பெறுவீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய தெளிவு உண்டாகும். உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். தெளிவு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகளைச் சந்திக்கப் போகும் ராசிக்காரர் நீங்களா..? | 02.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

உங்கள் மனதில் உள்ள கருத்துக்களை வெளிப்படுத்தும் போது, சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நல்லது. விவாதங்கள் நடக்கும் போது, உண்மையை வெளிப்படுத்த தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வது நன்மையை உண்டாக்கும். பழைய சிந்தனைகளால் நெருக்கடியான சூழல் உண்டாகலாம். மேலும், வாகனத்தில் செல்லும் போது மிதவேகத்துடன் செயல்படுவது நல்லது. உற்பத்தி தொடர்பான வியாபாரத்தில் முதலீடுகளில் கவனம் செய்வது உச்சிதம். சஞ்சலம் நிறைந்த சிந்தனைகளால், தடுமாற்றம் உண்டாகலாம். எனவே, பொறுமையுடன் சிந்தித்து செயல்படுவது நல்லது. உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 1


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்